இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு மோசடியாக வரவு வைத்துக் கொண்டதாகக் கூறிய ஒருவர் கம்பஹா பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் போது குறித்த நபரிடமிருந்து நான்கு கைத்தொலைபேசிகள், மூன்று சிறிய கைத்தொலைபேசிகள் மற்றும் 73 சிம்கார்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கம்பஹா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா, கஸ்பேவ, ராகம, வயங்கொட, ஹெட்டிபொல, பாணந்துறை தெற்கு களுத்துறை, திஹாகொட கேகாலை, அனுராதபுரம், கிராண்ட்பாஸ், கொடகவெல ஆகிய பொலிஸ் நிலையங்களில் குறித்த சந்தேக நபருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் கந்தானைப் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Author: admin
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திக்கான மூலப்பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருகையில் அதனை உரிய அனுமதியுடன் மாத்திரம் அனுமதிக்க மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் சுங்கத்துறையுடன் இணைந்து இது தொடர்பான ஒப்பந்தம் இன்று (ஜூன் 5) கைச்சாத்திடப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திர தெரிவித்தார். இலங்கைக்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி தொடர்பான வரம்பற்ற மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதை நிர்வகிப்பது தொடர்பில் சுங்க மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது விருப்பத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் ஆகியவற்றை நாட்டிற்குள் சுதந்திரமாக கொண்டு வருவதற்கு இனி தனக்கு இடமில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மூலப்பொருட்களை யாரேனும் இலங்கைக்கு இறக்குமதி செய்தால் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தலைவர் தெரிவித்தார். மூலப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் அவற்றை அகற்றுவதில்…
அதிபர் தரம் மூன்றுக்கான நேர்முகத் தேர்வுக்கு சமுகமளிக்க முடியாத 500 இற்கும் அதிகமானோருக்கான மாற்றுத் திகதி கல்வியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேர்முகத் தேர்வு எதிர்வரும் 10ஆம் திகதி முற்பகல் 10.00 மணியளவில் பத்தரமுல்லை இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வியமைச்சில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோழி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமானது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோழிக்கறி, மீன், காய்கறிகள் விலை மிக அதிகமாக இருந்ததால், தற்போதும் அந்த நிலை உள்ளது. இந்நிலை அடுத்த ஓரிரு வாரங்களுக்கு தொடரலாம் என்று கூறப்படுகிறது. எவ்வாறாயினும், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்ய முடியாது எனவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதிகரித்துள்ள கோழி இறைச்சியின் விலை அடுத்த சில வாரங்களில் குறையும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்படவில்லை என அதன் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்த நிலைமையை முன்கூட்டியே கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சார்த்திகளிடம் பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது. அனர்த்தம் தொடர்பில் தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருப்பின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார். கல்விப் பொதுத் தராதரப் சாதாரணதரப் பரீட்சை இதுவரை வெற்றிகரமாக நடாத்தப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு மாதங்களில் எரிபொருள் ஒதுக்க முறைமையை நீக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார். திவுலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலைத்திருத்தம் முன்னெடுக்கப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மாத இறுதியில் எரிபொருள் முன்பதிவை தாமதமாக்குகின்றனர். அவர்களுக்கு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நிரப்பு நிலையங்களில், QR முறைமை நடைமுறையில் உள்ளதால் எரிபொருளுக்காக வரிசைகள் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு மாதங்களில், 150 நிரப்பு நிலையங்களுடன் சினோபெக் நிறுவனம் விநியோக நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது. குறித்த நிறுவனம் விநியோகத்தை ஆரம்பித்ததன் பின்னர், அது தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்கும். இதையடுத்து, தற்போது நடைமுறையில் உள்ள QR குறியீட்டு முறைமை நீக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.
24CT : Rs 158,000 22CT : Rs 144,800 21CT : Rs 138,300 18CT : Rs 118,500
கச்சா எண்ணெய் உற்பத்தியை, நாளொன்றுக்கு 10 லட்சம் பீப்பாய் என்ற அளவில் குறைக்கப் போவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அரேபியாவின் எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் இதனை அறிவித்துள்ளார். ஏற்கனவே நாளாந்தம் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி ஏப்ரலில் அறிவிக்கப்பட்டு மே மாதம் முதல் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகனின் ஓபெக் கூட்டமைப்பு ஏழு மணி நேரம் சவூதி அரேபியா அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதனையடுத்து எண்ணெய் உற்பத்தியை மேலும் குறைக்க உடன்பாடு ஏற்பட்டதாக சவூதி அரசு அறிவித்துள்ளது அதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ஒரு அமெரிக்க டொலருக்கு மேல் அதிகரித்துள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெ பீப்பாய் ஒன்றின் விலை 77.64 அமெரிக்க டொலராக காணப்படும் நிலையில், எதிர்காலத்தில் 1.51 அமெரிக்க டொலரிலோ அல்லது 2% இல் அதிகரிக்கும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு செய்த மூவர் கெஸ்பேவ, படுவந்தர பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, அங்கிருந்த 73 வயதுடைய வயோதிப பெண்ணின் கை, கால்களைக் கட்டிய பின்னர், தங்க நகைகளை கொள்ளையிட்டு, தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசி என்பனவே கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டுக்குச் சென்ற கொள்ளையர்கள், வயோதிப பெண்ணிடம் அருந்துவதற்கு தண்ணீர் கேட்டதாகவும், அதனை கொடுப்பதற்காக சமையல் அறைக்குள் நுழைந்தபோது, அவரின் பின்னால் சென்று அவரது கை, கால்களைக் கட்டிவைத்து, பின்னர், அவர் அணிந்திருந்த மற்றும் வீட்டிலிருந்த தங்க நகைகள், கைத்தொலைபேசியை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யாழில் போதைப்பொருள் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட 10 வயதான சிறுவன் பற்றிய பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.துன்னாலை தெற்கு- வேம்படியை சேர்ந்த 10 வயதான சிறுவன் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்னார். இந்த சிறுவன் கடந்த ஒரு வருடமாக பாடசாலை செல்லவில்லை. தந்தையார் குடும்பத்தை பிரிந்த நிலையில், மாற்றுத்திறனாளியான தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தவர். தற்போது தாயாரின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல், அந்த பகுதியிலுள்ள போதைக்கு அடிமையான இளைஞர்களுடன் சுற்றித்திரிந்துள்ளார். போதைக்கு அடிமையான இளைஞர்களுடன் சகவாசம் வைத்திருந்ததால், 10 வயதுக்குரிய சிறுவனின் இயல்புகளுடன் இல்லாமல், வளர்ந்த மனிதர்களை போலவே சிறுவன் செயற்படுகிறார். சற்றும் பயமில்லாத இந்த சிறுவனை பயன்படுத்தி, அந்த பகுதி போதை இளைஞர்கள் பல திருட்டுக்களை நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த சிறுவன் போதைப்பாவனையில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்திருந்தது. இதேபோல, கொடிகாமம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட…