வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு monkeypox பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
Author: admin
நிட்டம்புவ பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவியை யாரோ ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்றதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், சாதாரண பரீட்சையில் அவரால் பங்கேற்க முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இருட்டில் மறைந்திருந்த நபர் ஒருவர் திடீரென கட்டிப்பிடித்து அவரை கீழே பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். மாணவி கூச்சலிட்டு தாய் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தமையினால் குறித்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தாயும் மகளும் சந்தேக நபரை அடையாளம் கண்டு பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் கீழே விழுந்தமையினால் மாணவி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நிட்டம்புவ தலைமையக பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேற்கொண்டு வருகின்றது.
24CT : Rs 158,000 22CT : Rs 144,800 21CT : Rs 138,300 18CT : Rs 118,500
ஓய்வு பெற்றுச் செல்லும் ஆசிரியர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களில் ஒரு வருடத்துக்கு ஐயாயிரம் அல்லது ஆறாயிரம் ஆகவே இருந்து வந்திருக்கிறது. ஆனால் கடந்த வருடம் அது இரண்டு மடங்காகியுள்ளமையே ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் (06) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எதிர்வரும் 16 ஆம் திகதி கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளியேறியுள்ள 7500 பேருக்கு தேசிய பாடசாலை மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்காக ஆசிரியர் நியமனங்களை வழங்கவுள்ளோம். அதற்கு மேலதிகமாக நாம் 26,000 பட்டதாரிகளை நியமிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரியிருந்தோம். எனினும் அது தொடர்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பில் நீதிமன்றத்தின் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்ததும் அவர்களுக்கான பரீட்சைகள் நடத்தப்பட்டு அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை…
அநுராதபுரத்தில் வேகமாக வந்த கார் ஒன்றும், ஹயஸ் ரக வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அநுராதபுரம் – இராஜாங்கனையில் நேற்றிரவு (06.06.2023) பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது காரைச் செலுத்திச் சென்ற 67 வயதான வயோதிபரும், காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து சென்ற ஐந்து வயது சிறுமியுமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதேவேளை, காரின் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்ற, விபத்தில் மரணமடைந்த ஐந்து வயது சிறுமியின் தந்தை (வயது 35), தாய் (வயது 32) ஆகியோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹயஸ் வாகனத்தின் சாரதியான 28 வயது இளைஞரும் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை இன்று (07) ஏற்பாடு செய்துள்ளது. வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப மஹபொல உதவித்தொகையை உயர்த்துதல், தாமதமான மஹபொல உதவித்தொகை தவணை வழங்குதல், ஐந்து மாதங்களாக சிறையில் வாடும் மாணவர் செயற்பாட்டாளர்களான கெலும் முதன்நாயக்க மற்றும் டில்ஷான் ஹர்ஷன ஆகிய இருவரையும் விடுதலை செய்தல், கல்வி கற்க தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், செலவைக் குறைத்தல், வாழும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்தல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தனது நடைப்பயணத்தையும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் ஆண்களுக்கான கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இலிருந்து விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என SLBFE அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத் தராதரப் சாதாரணத்தரப் பரீட்சையின் மூன்று பரீட்சை நிலையங்களில் மூன்று மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பிபில வெல்லஸ்ஸ தேசிய பாடசாலையில் அமைந்துள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்தி ஒருவர் கணித வினாத்தாளை ஆசிரியை ஒருவருக்கு கையடக்கத் தொலைபேசியில் அனுப்பி பதில்களை வட்ஸ்அப் ஊடாக பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறுகிறார். மேலும், ஹெனேகம மகா வித்தியாலயத்தின் பரீட்சை நிலையத்தில் இருவர் கையடக்கத் தொலைபேசி மூலம் கணித வினாத்தாளை ஆசிரியர்களுக்கு தனித்தனியாக அனுப்பி விடைகளைப் பெற்ற சம்பவத்தை பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். சீதுவ த்விஸ்மர வித்தியாலய பரீட்சை நிலையத்தில் ஐந்து பரீட்சார்த்திகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கணித வினாத்தாளை ஆசிரியர்களுக்கு அனுப்பி விடைகளைப் பெற்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று காலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான…