அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவசர ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அறிவிப்பதற்காக அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களையும் பொதுஜன பெரமுனவின் தலைவர்களையும் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கிராமத்திற்குச் சென்று எந்தவொரு தேர்தலுக்கும் முகம் கொடுப்பதற்கான பின்னணியை தயார் செய்யுமாறும் ஜனாதிபதி அங்கு குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் மாதத்திற்குள் பொருளாதாரம் சுபீட்சமான நிலையை எட்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் சென்று தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.
Author: admin
பௌத்த மதம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் நேற்று (02) இரவு 10.45 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாட்டை வந்தடைந்தனர். எனினும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் நாடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது. அதேவேளை போதகர் ஜெரோமின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் , பல்வேறு தரப்பினரும் கடும் கண்டங்களை தெரிவித்த நிலையில், விசாரணைகளை தொடங்க ஜனாதிபதி ரணிலும் உத்தரவிட்டிருந்தார். அதற்கிணங்க போதகரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
பாணந்துறை கடற்கரையில் உலகின் மிகப்பெரிய ஆமை இனத்தைச் சேர்ந்த கடல் ஆமை ஒன்று இன்று (03) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இலங்கை கடற்பரப்பில் இவ்வாறான விலங்குகளை காண்பது மிகவும் அரிதாகவே காணப்படுவதாக பாணந்துறை கரையோரக் காவற்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பாணந்துறை கடற்கரையில் இந்த ஆமை சுமார் 06 அடி 07 அங்குல நீளம் கொண்டது. இது குறித்து ஆமை பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் கடல் ஆமை நிபுணர் துஷான் கபுருசிங்க கூறுகையில் , “உலகின் மிகப்பெரிய ஆமை இனம் அழிவின் விளிம்புகளை கொண்டுள்ளன. வட இந்திய பெருங்கடல் நாடுகளில் இருந்து இலங்கை மற்றும் இந்திய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே இவை முட்டையிட வருகின்றதாகவும் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு பொசனை முன்னிட்டு 17,000 க்கும் மேற்பட்ட தன்சல்கள் சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் சுமார் 17,180 பதிவு செய்யப்பட்ட தன்சல்களை ஆய்வு செய்ததாக சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்திலேயே அதிகளவு தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் பெருமளவிலான தன்சல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உபுல் ரோகண தெரிவித்தார். ஆய்வுகளின் போது, ஏற்பாட்டாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கப்பட்டுள்ளது. மனித நுகர்வுக்குத் தகுதியற்ற எந்தவொரு உணவும் தன்சல்களில் வழங்கப்படுவதைத் தடுப்பதே தமது நோக்கமாகும் என உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். எனவே ஆய்வுகள் தொடரும் என்றும் தேவையான இடங்களில் தலையிடுவார்கள் என்றும் குறிப்பிட்டார். இதவேளை பதிவு செய்யப்படாத தன்சல்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸின் பில்கேட்ஸ் அறக்கட்டளை இலங்கையில் விவசாயத்தை மேம்படுத்த முன்வந்துள்ளது. விவசாயத் துறையில் உற்பத்தி மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மென்பொருளை அறிமுகப்படுத்தி இந்த நாட்டில் விவசாயத்தை அதிகரிக்க பில்கேட்ஸ் அறக்கட்டளை முன்வருவதுடன் இதற்கான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நாட்டில் விவசாயத் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக 250 மில்லியன் டொலர்கள் மானியம் பெறப்பட்டுள்ளதுடன், நெல் மற்றும் ஏனைய பயிர்களின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்காக விவசாயத் துறையில் தரவுகளை சேகரிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் அதிகாரிகள் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது இந்தத் திட்டத்திற்கு தமது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உரப் பாவனையின் மூலம் உற்பத்தித் திறனை நேரடியாகப் பெறுவதற்கும் பெறப்பட்ட உற்பத்தித் திறனைப் பேணுவதற்கும் தேவையான வழிகாட்டல்களை புதிய மென்பொருள் வழங்கும் என ஜனாதிபதி…
அமைச்சரவை அமைச்சர்கள் தமது கீழ் உள்ள இராஜாங்க அமைச்சர்களை பணியாற்ற அனுமதிப்பதில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் விசேட கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், இராஜாங்க அமைச்சர்கள் பணியாற்றுவதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் அந்த அமைச்சுக்களின் விடயங்களை பகிர்ந்தளிக்கவில்லை எனவும், தனக்கு மட்டுமல்ல, அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலான மாநில அமைச்சர்களுக்கும் இவ்வாறான விடயங்களையே எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனைத் தெரிவித்த போது, இந்த கலந்துரையாடலில் சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் திரு.ஹரின் பெர்னாண்டோவும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடங்களில் 908 வீடுகள் குறித்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலகம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கொழும்பு, திம்பிரிகஸ்சாய, கொலன்னாவ, இரத்மலானை மற்றும் மொரட்டுவ பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள குடியிருப்புக்களே இந்த அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. இந்த அடுக்குமாடி கட்டிடங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை, தொழிலாளர் திணைக்களம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மற்றும் தன்னாட்சி முகாமைத்துவ அதிகார சபையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும்,கொழும்பு மாவட்டத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் பாழடைந்த நிலையில் காணப்படுவதாகவும், இக்கட்டடங்கள் பாவனைக்கு தகுதியற்றவை என தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப் உடுகொட அண்மையில்…
லாஃப் எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பில் அந்நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய லாஃப் எரிவாயுவின் விலையும் திருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் விலை திருத்தம் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் எனவும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். லாஃப் எரிவாயுவின் விலையில் திருத்தம் இறுதியாக ஏப்ரல் மாதம் லாஃப் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,738 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. இதேவேளை 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவால் குறைக்கப்பட்டு 1,502 ரூபாவாகவும் 2.3 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவால் குறைக்கப்பட்டு 700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. லிட்ரோ சமையல் எரிவாயு விலை இந்நிலையில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நாளை (04.06.2023) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எரிவாயு விலை திருத்தத்தின் பயனை மக்களுக்கு வழங்குவதற்கு…
இந்த வருடத்தில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 24.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கை ரூபாவின் பொறுமதி தொடர்பில் மத்திய வங்கி நேற்று(02.06.2023) வரை வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கை ரூபா ஜப்பானிய யெனுக்கு எதிராக 30 வீதத்தாலும், பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக 19.4 வீதத்தாலும் மிகைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், யூரோவுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி 23 வீதமும், இந்திய ரூபாயுடன் ஒப்பிடுகையில் 23.5 வீதமும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி களுகங்கை நடுவே பொசன் தோரணம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. களுகங்கையின் முவகம பிரதேசத்தில் ஆற்றை கடக்கும் மரத்தினாலான தொங்கு பாலத்தில் இத்தோரணம் அமைக்க ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இத்தோரணத்தின் உயரம் 25 அடி எனவும் அகலம் 30 அடி எனவும் இதனை அமைத்துள்ள இளைஞர் குழுவினர் அறிவிக்கின்றனர்.