மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில்100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு…
Author: admin
(கல்முனை நிருபர்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீடத்தின் புவியியற்துறையினால் உலக சுற்றாடல்தினமானது கலைகலாசார கேட்போர் கூடத்தில் புவியியற்துறைத் தலைவர் கே. நிஜாமிர் தலைமையில் (05) இடம்பெற்றது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து, சிறப்பித்தார். இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கலைகலாசார பீடத்தின்பீடாதிபதி எம்.எம்.பாசில் கலந்துகொண்டதோடு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வின் தலைமையுரையினை துறைத்தலைவர் இவ்வருடசுற்றாடல் தின தொணிப்பொருளான Solutions to plastic pollution தொடர்பாக நிகழ்த்தினார். நிகழ்வில் உரையாற்றிய உபவேந்தர் பிளாஸ்டிக் மாசுபாட்டினால் ஏற்படும் சுற்றாடல், சுகாதார, மற்றும் சமூகபிரச்சினைகள் பற்றியும் எடுத்துரைத்தார். நிகழ்வில் பீடாதிபதி சிறப்புரையாற்றியதோடு பேரசிரியர் எம்.ஐ.எம் கலீலினால் விஷேட விளிப்பணர்வுவிரிவுரையும் நாடாத்தப்பட்டது டன், இந்நிகழ்வினை முன்னிட்டு பீடத்தின் வளாகத்தில் மரநடுகையும் மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும்இடம்பெற்றன.
நாட்டில் மாடுகளுக்கு ஒருவித தொற்று நோய் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லையினுள் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு இறைச்சிக்காக மாடு அறுப்பது தடை செய்யப்படுவதாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அறிவித்துள்ளார். தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சில மாடுகள் கல்முனை பிராந்தியத்திலும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அது ஏனைய மாடுகளுக்கு விரைவாக பரவக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதனாலும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட மாட்டிறைச்சி மக்களின் நுகர்வுக்கு உகந்ததல்ல என்றும் மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லையினுள் குறித்த காலப்பகுதியில் மாடு அறுத்தல், மாட்டிறைச்சியை விற்பனை செய்தல் மற்றும் மாட்டிறைச்சிறைச்சியை பொதி செய்தல் என்பா தற்காலிகமாக தடை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இத்தடை உத்தரவை மீறி செயற்படுகின்ற மாட்டிறைச்சிக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை…
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் மட்டுக்கலை பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைபட்டது. இதனையடுத்து லிந்துலை பொலிஸாரும் அப்பிரதேச மக்களும் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் இரண்டு மணித்தியாலயத்திற்கு மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் ஹட்டன், தலவாக்கலை , நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு சென்ற மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பேருந்துகளில் மாறுவேடத்தில் பயணித்து கொள்ளையடிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடும் குறித்த நபர் 5200 மில்லிகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பத்து லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான இருபது கைத்தொலைபேசிகள் திருடப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பேரூந்துகளில் கையடக்கத் தொலைபேசிகள் தொலைந்து போவது தொடர்பில் இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்திய பிலியந்தலை பொலிஸ் குற்றப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தினேஷ் ஹெட்டியாராச்சி கடந்த 6 மாதங்களாக அவதானம் செலுத்தியுள்ளார். சந்தேகநபரின் உருவம் அடங்கிய சிசிடிவி காட்சிகளை சோதனையிட்ட பொலிஸார் பிலியந்தலை மிரிஸ்வத்த பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான தோற்றம் கொண்ட ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். வாதுவ பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், மனைவி மற்றும் பிள்ளைகளுடன்…
அமெரிக்க திறைசேரியின் கீழ்வரும் ஆசிய நிதியத்தின் பிரதி உதவிச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து அரசாங்க குடியியல் சமூகம் மற்றும் பொருளாதாரத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் பொருளாதாரச் செழுமையை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் பாதை குறித்து அவர் இதன்போது கலந்துரையாடவுள்ளார். இதன் ஒரு கட்டமாக அவர் கொழும்பிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்குடன் நேற்று (06.06.2023) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளார். ஜனாதிபதியுடனான தனது சந்திப்பின் போது, பிரதி உதவிச் செயலாளர் 75 வருட கால இராஜதந்திர உறவுகளில் இலங்கைக்கான அமெரிக்காவின் நீண்டகால ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் நிலையான, வளமான நாடு என்ற தனது பகிரப்பட்ட பார்வையை அடைவதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். இதனையடுத்து உயர்மட்ட அமெரிக்க அதிகாரி, தூதுவர் சுங் சகிதம் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை செவ்வாயன்று அமைச்சகத்தில் சந்தித்துள்ளார். இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஈடுபாடு…
மன்னம்பிட்டி காட்டுப் பகுதியில் நேற்று இரவு ரயில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். குறித்த தண்டவாளத்தினூடாக வந்த ரயில் சாரதியின் சமயோசித செயற்பாட்டால் அவர் உயிர் தப்பியுள்ளார். மன்னம்பிட்டிய காட்டுப் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்த போது எழும்ப முடியாமல் தண்டவாளத்தில் வயோதிபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்ததை அவதானித்த ரயில் சாரதி சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தி வயோதிபரை காப்பாற்றியுள்ளார். கடும் போதையில் இரத்தக் காயங்களுடன் இருந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ரயிலில் ஏற்றப்பட்டு மன்னம்பிட்டி ரயில் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். ரயில் சாரதியின் இந்த செயற்பாட்டை அனைவரும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(07.06.2023) வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த நான்கு வாரங்களாக மீண்டும் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது. எனினும் இன்று சற்று வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (07.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.43 ரூபாவாகவும், கொள்வனவு விலை 285.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 320.63 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 303.62 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 371.69 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 353.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு சில்லறை விலை இருக்க வேண்டும் என தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 1,200 – 1,300 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சி 1,600 – 1,800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் சுஜீவ தம்மிக்க தெரிவித்தார். எனினும் கோழி இறைச்சியின் சில்லறை விலை அதிகரித்துள்ள போதிலும், மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.850- ரூ.1,200 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், இதுவரை மொத்த விற்பனை விலையில் அதிகரிப்பு ஏற்படவில்லை எனவும் பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோ கோழி இறைச்சி உற்பத்தி செய்ய ஒரு பண்ணை உரிமையாளர் சுமார் ரூ.800-ரூ.900 வரை செலவழித்து 45 நாட்கள் பராமரிக்க வேண்டும். பண்ணை உரிமையாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் இலாபம் ரூ.300 க்கும் குறைவாக உள்ளது, ஆனால் நேர்மையற்ற விற்பனையாளர்கள் சுமார் ரூ.400 இலாபம் பெறுகின்றனர். இருந்த போதிலும் கோழி இறைச்சியின் விலையை உயர்த்தி…
நாடாளுமன்ற நிதி தெரிவுக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நிதி தெரிவுக்குழு உறுப்பினர்கள் இந்த யோசனைக்கு ஏகமனதாக ஆதரவு வழங்கியுள்ளனர்.