மீட்டியாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீனிகம தேவாலயத்திற்கு அருகில் இன்று சனிக்கிழமை (17) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சீனிகம தேவாலயத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் அவர் மீது பல துப்பாக்கிச் சூட்டுகளை நடத்தியபோது, முன்னாள் பொதுஜன பெரமுன உறுப்பினர் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Author: admin
மத்திய மாகாணத்தில் நாய்க்குட்டிகளுக்கு பரவியதாக அடையாளம் காணப்பட்ட வைரஸ் நோய் தற்போது ஏனைய மாகாணங்களுக்கும் பரவும் அபாயம் காணப்படுவதாக கால்நடை வைத்தியர் உபுல் சாகர திலக்க தெரிவித்துள்ளார். மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இந்த நோயின் பரவலாக பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், மேற்குறிப்பிட்ட பிரதேசங்களைத் தவிர கண்டி, கம்பளை, ஹட்டன், பேராதனை, கினிகத்தேன ஆகிய பிரதேசங்களிலும் இந்நோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மாவட்டங்களில் எட்டு மாதங்களுக்கும் குறைவான நாய்க் குட்டிகளுக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட நாய்க் குட்டிகள் சுவாசக் கோளாறுகள் (சுவாசப் பிரச்சினைகள்), வாந்தி, வயிற்றுப்போக்கு, ஈறுகளின் நிறமாற்றம், பசியின்மை மற்றும் சோம்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஜெர்மன் ஷெப்பர்ட்ஸ் மற்றும் லெப்ரடார்ஸ் போன்ற கலப்பு இன நாய்களிடையே இந்த தொற்று பரவுவது கண்டறியப்பட்டது. எனவே நாய் வளர்ப்பவர்கள் நாய்க்குட்டிகளுக்கு உறைந்த உணவுகளை ஊட்டுவதை தவிர்க்குமாறும் 4 அல்லது 5…
இறக்குவானையில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு சுரங்கம் தோண்டிய போது மண் மேடு சரிந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளானர். இறக்குவானை – மாதம்பை தோட்ட இலக்கம் 01 பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் நான்கு பேர் கொண்ட குழுவொன்று சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி மாணிக்கக்கல் அகழ்வதற்கு தயாரான போது சுரங்கத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்துள்ளது. குறித்த விபத்தில் சுப்பிரமணியம் தியாகராஜா மற்றும் சோலமுத்து செல்வகுமார் ஆகிய இருவரும் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த சுரங்கத்தின் அடியில் இருந்த இருவரும் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் சிறுகாயங்களுடன் கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு, கஹவத்தை ஆரம்ப வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளுர் நிர்மாண துறை 2024 ஆம் ஆண்டளவில் வழமைக்கு திரும்பும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு மீண்டும் சிறப்பான வலுவினை வழங்கும் பங்களிப்பாளராக பலன் தரும் தன்மையுடன் இயங்கும் என, இலங்கை நிர்மாணத்துறை அமைப்பின் தலைவர் ரொஹான் கருணாரட்ன தெரிவித்துள்ளார். நிர்மாண நடவடிக்கைகளை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்காக சிறப்பாக செயற்பட்ட ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் அவர் தமது நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜிம்னாஸ்டிக் உலக செம்பியன்ஷிப் போட்டிக்கு இலங்கை வீராங்கனை மில்கா கெஹானி நேற்று (16) தகுதி பெற்றார். சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் செம்பியன்ஷிப் போட்டியில் 10-வது இடத்தைப் பிடித்ததன் மூலம் அவா் இந்த தகுதியை பெற்றாா். ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் செம்பியன்ஷிப் போட்டி தற்போது சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. அதற்காக 20 நாடுகளைச் சேர்ந்த பல விளையாட்டு வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியில் இணைந்துகொண்ட மில்கா கெஹானி, 53 பெண் வீராங்கனைகள் மத்தியில் ஆசிய ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் செம்பியன்ஷிப் போட்டியில் பத்தாவது இடத்தை வென்றார். அதன்படி இந்த ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள உலக செம்பியன்ஷிப் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்றார். பல சர்வதேச போட்டிகளில் அனுபவம் வாய்ந்த ஜிம்னாஸ்டிக் வீரங்கனையான மில்கா கெஹானி, 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின் விலைகள் துாிதமாக அதிகரித்துள்ளமை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இறக்குமதியாளர்கள் விலைகளை உயா்த்தியுள்ளதால் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். உருளைக்கிழங்கு, உப்பு மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பருப்பு ஒரு ஒலோ கிராமின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கும் என வியாபாரிகள் தொிவிக்கின்றனா். இதேவேளை டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளதாக தொிவிக்கப்படுகிறது. டொலரின் பெறுமதி குறையும் போது பொருட்களின் விலை என்றும் குறைந்தது இல்லை எனவும் டொலாின் பெறுமதி அதிகரிக்கும் அடுத்த நாளே பொருட்களின் விலை அதிகரிக்கின்றது எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் 160 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை இன்று 200 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் சங்கம் கூறுகிறது. கோதுமை மாவை இறக்குமதி செய்யும் போது கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என நிதியமைச்சு வர்த்தமானி அறிவித்தலை அடுத்து சந்தையில் இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, பலாதொட்ட கொடபராகாஹேன பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (16) இரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் வசிக்கும் திருமணமாகாத 43 வயதுடைய சுஜித் தர்மசேன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் தனது வீட்டுக்கு அருகில் நடந்து சென்ற வேளையிலேயே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயங்களுக்குள்ளாகியுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யூரியா மற்றும் பண்டி உரத்தின் விலையை குறைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி 10,000 ரூபாவாக இருந்த 50 கிலோ யூரியா மூடையின் விலை 9000 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது. மேலும், 19,500 ரூபாவாக உள்ள ஒரு மூடை பண்டி உரம் 15,000 ரூபாவாக குறைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. உரங்களைப் பெறுவதற்காக வழங்கப்பட்ட வவுச்சரில் யூரியா, பூந்தி உரங்கள் மற்றும் கரிம உரங்களை அவற்றின் பெறுமதிக்கேற்ப பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலம்பே கடுவெல மற்றும் தலங்கம பிரதேசங்களில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களாக நடத்தப்பட்ட 6 விபச்சார நிலையங்களை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 25 யுவதிகள் உட்பட 31 பேரை உயர் பொலிஸ் அதிகாரிகளின் உத்திரவுக்கமைய கைது செய்ததாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது. அந்த மையங்களுக்கு உரிமம் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இரவு வேளைகளில் திறக்கப்படும் இந்த நிலையங்கள் தொடர்பில் பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தொடர் தகவலின் அடிப்படையில் கடுவலை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றிவளைப்பில் ஆறு பொலிஸ் குழுக்கள் பங்கேற்றுள்ளதுடன், பொலிஸ் முகவர்கள் ஊடாக குறித்த இடத்தை விபசார நிலையம் என உறுதிப்படுத்திய பின்னரே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட பெண்களில் பெரும்பான்மையானவர்கள் தூர பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் பொருளாதார நெருக்கடி…