மினுவாங்கொடை, பொரகொடவத்த பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இருவரும், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
Author: admin
சமூக வலைத்தளங்களினூடாக 108 பண மோசடி சம்பவங்கள் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 75 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், சமூக வலைத்தளங்களினூடாக பண மோசடி சம்பவங்கள் அதிகம் பதிவாகும் நிலையில் தமது தனிப்பட்ட தகவல்களை மற்றுமொரு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி. ஜெயநெத்சிறி தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (16) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி பண மோசடி செய்யும் சம்பவங்கள் நாட்டில் தற்போது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இவ்வருடம் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் பதிவாகிய இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 108 ஆகும். கடந்த இரண்டரை வருடங்களில்…
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்பு இல்லாத காரணத்தினால் நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 95 ஒக்டேன் பெற்றோல் கையிருப்புகளை உரிய முறையில் பராமரிக்காமையே இந்த நிலைக்கு காரணம் எனவும் கூறப்படுகின்றது.
தமக்கு வேறு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குமாறு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் தற்போது கொழும்பு ஹட்டா, மலலசேகர மாவத்தையில் உள்ள தனது குடியிருப்பில் தங்கியுள்ளார். அதற்கு பதிலாக, அவர் ஸ்டான்மோர் சந்திரவங்காவில் ஒரு உத்தியோகபூர்வ இல்லத்தை கேட்டுள்ளார். தற்போதுள்ள குடியிருப்பை சுற்றி அடிக்கடி சத்தம் கேட்பதால், அந்த குடியிருப்பை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுவரை, கோட்டாபய ராஜபக்ச ஒரு வருடத்திற்குள் நான்காவது வீட்டிற்கு நகர உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)
நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மேகமூட்டத்துடன் காணப்படும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களின் சில இடங்களில், மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பம்பரகந்த நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்தார். இன்று மதியம் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.குறித்த மாணவன் மேலும் நால்வருடன் குறித்த பகுதிக்கு சென்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவத்தில் 25 வயதான ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் ஈடுபடும் சுங்க அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 118 துப்பாக்கிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார். திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இதனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
3 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பெறுமதியான அத்தியாவசியத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான பொருட்களை அமெரிக்காரிஸ் மூலம் இலங்கை பெற்றுள்ளது. வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் உத்தியோகபூர்வ வேண்டுகோளுக்கு இணங்க, சுகாதாரத்தை மையமாகக் கொண்ட நிவாரணம் மற்றும் மேம்பாட்டு அமைப்பான அமெரிக்காரெஸ், மருத்துவ பொருட்கள் பொருட்களை வழங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மேற்கொண்ட ஏழு வெளிநாட்டு விஜயங்களிற்கு சுமார் 5 கோடி ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ள விடயம் தகவலறியும் கோரிக்கையின் ஊடாக வெளியாகியுள்ளது. இந்த ஏழு வெளிநாட்டு விஜயங்களும் அலி சப்ரி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்ட முதல் ஏழு மாத காலப் பகுதிக்குள்ளேயே இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக அலி சப்ரி கடந்த 2022.07.22ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டார். குறித்த தினத்திலிருந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் கம்போடியா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்துள்ளார். இதில், சுவிட்ஸர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இரண்டு தடவைகள் இவர் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமல்லாமல், செப்டம்பர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் தலா இரண்டு வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார். பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் வெளிநாட்டு அலுவல்கள்…