இரண்டு பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மொனராகலை புத்தல மற்றும் புத்தளம் ஆனமடுவ ஆகிய இடங்களில் இந்த விபத்துக்கள் நடந்துள்ளன. புத்தல- கதிர்காமம் வீதியில் வெலிம்டுல்ல பிரதேசத்தில் குறுக்கு வீதியில் சென்ற லொறி ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன், புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். புத்தல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இதனிடையே ஆனமடுவ நகருக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 22 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார். ஆனமடுவவில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த ஒருவர் மீது மோதி புரண்டு எதிர் திசையில் வந்த லொறியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பாதசாரியும் இளைஞனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,…
Author: admin
இலங்கையில் நபர் ஒருவரின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் 13,777 ரூபாய் போதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள (2022/2023) ஆண்டறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வருமானத்தை ஈட்ட முடியாதவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் உணவுப் பொருட்கள், ஆடைகள் போன்றவற்றின் விலைகளின் அதிகரிப்பு மற்றும் நாட்டில் பணவீக்க நிலைமைகளின் வளர்ச்சி பாரிய அதிகரிப்பை காட்டியது. இதனால் நாட்டின் மொத்த சனத்தொகையில் 14.3 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மட்டக்களப்பு – வாழைச்சேனை, நாவலடி பிரதேசத்தில் கோழிச் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை நேற்று (17) பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில் 6 சண்டை கோழிகள் மற்றும் ஒரு தொகை பணம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாவலடி பிரதேசத்தை சேர்ந்த 26 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களே என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமினின் இளைய சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல்வேறு நபர்களிடம் இருந்து நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைத்த மூன்று முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் டுபாயில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து இரண்டரை இலட்சம் ரூபாய், ஒரு இலட்சம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் என மூவரிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளார். இவ்வாறு நிதி மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் கலகெதர மற்றும் அக்குறணை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் டுபாய் தூதரகத்துடன் தொடர்பு கொண்ட போது அந்த மூன்று விசாக்களும் போலியானவை என்பதும் தெரியவந்துள்ளது. எனவே, இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இந்த ஆண்டு (2023) வைத்தியர்களாக நியமிக்கப்பட்ட 1300 பேரில் 100 பேர் பணியில் இணையவில்லை என தரவுகளில் தெரியவந்துள்ளது. குறித்த நியமனம் பெற்ற சுமார் 50 வைத்தியர்கள் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொள்ள வரவில்லை எனவும் சுமார் 50 பேர் நியமனக் கடிதங்களை ஏற்று பணிக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். மேலும், இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் சுகாதாரத் துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, மருத்துவ சேவையில் இணைந்துகொள்ளும் வைத்தியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 54000 ரூபா எனவும் அதற்கமைய அவரின் நாளாந்த சம்பளம் 2000 ரூபாவை அண்மித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் ஊதியத்தை கொண்டு வைத்தியர்கள் அவர்களது கனவுகளை அடைய கஷ்டமாக உள்ளதால் பல வைத்தியர்கள் மருத்துவ துறையில் நிலைத்து நிற்பதில்லை எனவும் வைத்தியர் ஹரித அலுத்கே…
நாட்டில் தற்போது தொழுநோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்கயைம, கடந்த 5 மாதங்களில் சுமார் 600 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கத்தின் பதில் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார். விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல் இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 100 தொழுநோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 66 பேரும், மட்டக்களப்பில் 56 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 47 பேரும் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தொற்றினால் அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் அவர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக மருத்துவ சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே தொழுநோய் என சந்தேகிக்கப்படும் தோலின் மேற்புறத்தில் புள்ளிகள் இருப்பின் புகைப்படத்தை 075 40 88 640 என்ற தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்து தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு சட்டம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த சட்டத்திற்கு எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதேவேளை, நாட்டின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம் மிகவும் முக்கியமானதாக அமையுமென பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் நடத்துநர்களின்றி, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் பயணிகளுக்கு, பயணத்தின் ஆரம்பத்தில் மட்டுமே பயணச்சீட்டு வழங்கப்படும். அண்மையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் 34 பயணிகளுக்கு போலி பயணச்சீட்டுகள் வழங்கப்பட்ட மோசடி அம்பலமானதையடுத்தே, பயணத்தின் ஆரம்பத்திலேயே பயணச்சீட்டு வழங்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, அடுத்த மூன்று மாதங்களில் அனைத்து உள்ளூர் பேருந்துகள் மற்றும் தொடருந்துகளுக்கான இ-டிக்கெட்டுகளை (இலத்திரனியல் பயணச்சீட்டு) அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
போக்குவரத்து மற்றும் தபால் அமைச்சர் பந்துல குணவர்தனவை சந்தித்து, கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது குறித்தும், புகையிரத சேவையை நவீனப்படுத்துவது தொடர்பாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார். இதன் போது தபால் சேவையில் நியமனம் பெற்ற பெருந்தோட்ட இளைஞர்கள் அடிப்படை சம்பள விகிதத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், அப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க கவனம் செலுத்துமாறு செந்தில் தொண்டமான் பந்துல குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்தார். செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கைக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க பந்துல குணவர்தன ஒப்புக்கொண்டதுடன், அவரது வாழ்க்கை வரலாறு புத்தகத்தையும் கையளித்தார்.
பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் உள்ளூர் சந்தையில் தேங்காய் எண்ணெய் விலையை உயர்த்த தயாராகி வருவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசியஅமைப்பு தெரிவித்துள்ளது. சந்தையில் தற்போது தேங்காய் ஒன்று 120, 130 ரூபா என அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அதன் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார். தேங்காய் விலை அதிகரித்துள்ள போதிலும் வழங்கல் வினைத்திறன் காரணமாக சந்தையில் தேங்காய் எண்ணெய் நியாயமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். சந்தைக்கான விநியோகத்தை சீர்குலைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிப்பதே இந்த குழுவின் நோக்கமாகும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.