நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பில் நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 05 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (TRC)பரிந்துரைகளை அமுல்படுத்துதல், தேசிய காணி சபையொன்றை நிறுவுதல் மற்றும் தேசிய காணி கொள்கையை உருவாக்குதல், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை மிகவும் திறம்பட செயற்படுத்துதல், அதன் டிஜிட்டல் மயமாக்கல் செற்பாடுகளை நிறைவு செய்தல் மற்றும் இதுவரை தகவல் சேகரிக்க முடியாத காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கும் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது. அத்துடன், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு…
Author: admin
60,000 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தில் 465 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் தாம் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு அநீதி இழைக்கப்பட்ட பலருக்கு நீதி கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இன்றைய தினம் (09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் அவர் குறிப்பிடுகையில், “465 பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை 443 ஆக குறைந்துள்ளது. அவர்களுக்கான நியமனங்களை மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமருக்கு நன்றி.” என்றார்.
16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட களுத்துறையில் ஆசிரியர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். களுத்துறையில் மேலதிக வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர், நீதிமன்றில் இன்று (09) மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை ஜூன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். குறித்த உத்தரவை களுத்துறை பிரதான நீதவான் நிதா ஹேமலி பிறப்பித்துள்ளார். சந்தேகநபர் களுத்துறையைச் சேர்ந்த 30 வயதான திவங்க ஜயவிக்ரம எனும் கணித ஆசிரியராவார். இந்த வழக்கு ஜூன் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
கண்ணாடி போத்தலுடன் விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயதான சிறுவன், விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம், மாலபே தலாஹேன ஹல்பராவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று முல்லேரியாவ காவல்துறையினர் தெரிவித்தனர். அச்சிறுவன், கண்ணாடி போத்தலுடன் கீழே விழுந்துள்ளார். அப்போத்தல் உடைந்து உடம்பில் குத்தியமையால் அதிகளவில் இரத்தம் வெளியேறியுள்ளது. இதனால் மரணம் சம்பவித்துள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள காவல்துறை அதிகாரிகள், இல்லையேல் அச்சிறுவன் படுகொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் முதலாம் திகதி முதல், தரம் ஒன்பதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு, வெள்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்த பின்னரும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும், தனியார் வகுப்புக்களை நடத்துவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரனின் தலைமையில் இன்று(9) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறைசார் அதிகாரிகள், மதத் தலைவர்கள், பொலிஸார், தனியார் கல்வி நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். பாடசாலைக் கல்விக்கு மேலதிகமாக, வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால், மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக முன்னெடுத்த கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பாதரசம் கலந்திருப்பதாக ஆய்வக அறிக்கைகள் உறுதி செய்துள்ளன. புறக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்குக் கிடைத்த க்ரீம் வகைகள் தொடர்பாக இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது. இவ்வாறான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படக் கூடும் என்பதால், இவ்வாறான தரமற்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபையின் கொழும்பு மாவட்ட சுற்றிவளைப்புப் பிரிவினர் அண்மையில் புறக்கோட்டை பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல வகையான அழகுசாதனப் பொருட்கள், உள்நாட்டில் குறிப்பிடப்பட்ட எந்த உத்தரவாதமும் இல்லாதவை, தரமற்றவை மற்றும் சட்டவிரோதமாக பொதி செய்யப்பட்டவை என்று குறித்த பிரிவு தெரிவித்திருந்தது. அதன் தரத்தை பரிசோதிப்பதற்காக 6 வகையான க்ரீம்களின் மாதிரிகள் இலங்கை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கு அனுப்பி…
கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு 05 பேரில் ஒருவா் வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இவற்றில் 75% வாகனங்கள், வங்கிக் கடன் அடிப்படையில் பெறப்பட்டவை என அவர் இன்று (09) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். வாகன இறக்குமதியின் போது வரியை டொலரில் செலுத்துவதற்கான யோசனையை உள்ளடக்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளாா். 2015 முதல் 2020 வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2,498,714 ஆகும். ” • 2015 இல் – 652,446 வாகனங்கள் • 2016 இல் 466,986 வாகனங்கள் • 2017 இல் 448,320 வாகனங்கள் • 2018 இல் 496,282 வாகனங்கள் • 2019 இல் 332,452 வாகனங்கள் • 2020 இல் 102,228 வாகனங்கள்.
கொலை மற்றும் கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் சாதாரணத்தரப் பரீட்சைக்கு விடையளிக்கும் போது சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாணந்துறை தொடங்கஹவத்த பெத்மேகம பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். சாதாரணத் தரப் பரீட்சையின் இறுதி நாளான நேற்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் பரீட்சை நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பரீட்சைக்கு தோற்றும் போது மலசலகூடத்திற்குச் செல்ல வேண்டும் என சந்தேக நபர் மேற்பார்வையாளரிடம் தெரிவித்ததாகவும், அதன்படி சிறைச்சாலை அதிகாரி சந்தேக நபரை பரீட்சை மண்டபத்திற்கு அருகிலுள்ள கழிவறைக்கு அழைத்துச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அப்போது, சிறை அதிகாரியை தள்ளிவிட்டு அவர் தப்பியோடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் சப்புகஸ்கந்த பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சப்புகஸ்கந்த பொலிஸார் சிறுவனை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப முறுகல் நிலைமை தொடா்பிலான முறைப்பாடு ஒன்றை விசாரணை செய்து கொண்டிருந்த வேளை முறைப்பாட்டாளா் கோபமடைந்து பிரதிவாதி மீது கூரிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பக்கமுன பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பிரதிவாதியும், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடா்பில் தாக்குதல் நடத்திய சந்தேகநபா் கைது செய்யப்பட்டுள்ளாா். தனது மனைவி வேறு ஒருவருடன் சென்றதாக கூறி பக்கமுன பகுதியை சோ்ந்த ஒருவா் வழங்கிய முறைப்பாட்டை விசாரணை செய்வதற்காக முறைப்பாட்டாளரையும், பிரதிவாதிகள் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முறைப்பாடு தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தின் பதில் பொறுப்பதிகாரி விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், திடீரென முறைப்பாட்டாளர் தான் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலன்களை கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனை மூலம் வழங்க முடியாது என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறைந்த விலையில் கையடக்கத் தொலைபேசி அல்லது சாதனங்களை வழங்க முடியாது என சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், முன்னர் 1,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட அடிப்படை கையடக்கத் தொலைபேசியானது, தற்போதும் 4,500 ரூபா என்ற வரம்பில் உள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் பின்னர் பாரியளவிலான இறக்குமதியாளர்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் சிறு விற்பனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத நிலை உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.