கல்வியியற் கலாசாலைகளில் இருந்து டிப்ளோமாதாரிகளாக வெளியேறிய சுமார் 8000 பேருக்கு அடுத்தவாரம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது. கல்வி இராஜாங்க அமச்சர் ஏ. அரவிந்த்குமார் இந்தத்தகவலை வழங்கியுள்ளார். இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி அவர்களுக்கான நியமனம் வழங்கப்படும். மேல் மாகாணம் மற்றும் தேசிய பாடசாலைகளுக்காக தெரிவாகியுள்ள 2500 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு 16ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறும். ஏனைய மாகாண பாடசாலைகளுக்கான ஆசிரியர்களது நியமனங்கள், அந்தந்த மாகாணங்களில் வழங்கப்படும்.
Author: admin
நீர்க்கட்டணத்தை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் கருத்துரைத்த அவர், கடந்த மூன்று மாதங்களாக இதற்கான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு மாதாந்தம் 420 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பகிடிவதை சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் கற்றல் நடவடிக்கையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழுவே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விடுதியில் புதிய மாணவர்களிடைம் இருந்து பொருட்களை பெற்றுள்ளதாகவும் மேலும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் 09.06.2023 திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெடுத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதன்படி இலத்திரனியல் பொருட்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட பெருமளவான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல்…
நாட்டிற்குள் கொவிட்-19 பரவல் மற்றும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான அமைச்சர்கள் குழுவில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட 08 பேர் அங்கம் வகிக்கின்றனர். நாட்டில் கொவிட்-19 மற்றும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் குழு பணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற 11 பேர் கொண்ட நிபுணர் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல தலைமையிலான நிபுணர் குழுவில் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.கொடிப்பிலியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன பொது சுகாதார சேவைகள்…
பாடசாலை மாணவர்களுக்கான ரயில் சீசன் டிக்கெட் பெற ஜூன் 16ம் திகதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்களம் இன்று (09) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டின் வருமான நிலுவை 6,280.50 மில்லியன் ரூபாய் என அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) புலப்பட்டது. கொழும்பு மாநகர சபையின் 2020/2021 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் அன்மையில் (06) கூடிய போதே இந்த விடயம் புலப்பட்டது வாகனத்தரிப்பிட கட்டணங்களை அறவிடுவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட தனியார் நிறுவனங்களினால் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய மாதாந்த வாடகைக் கட்டணத்தை செலுத்தாமல் தொடர்ந்தும் கைவிடப்பட்டிருப்பதாகவும், 2021 டிசம்பர் 31 வரை 38 நிறுவனங்களிடமிருந்து அறவிடப்படவேண்டிய நிலுவைத் தொகை 265 மில்லியன் ரூபாய் எனவும் புலப்பட்டது. மேலும், கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் இந்தப் பிரிவின் சேவையைப் பாராட்டுவதாகவும் இது இலங்கை பூராவும்…
இலங்கையில் ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் உற்பத்தி இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை மற்றும் லங்கா மின்சார நிறுவனம் ஆகியவற்றிற்கு தேவையான ஒற்றை கட்ட மீட்டர்கள் இலங்கையில் ANTE LECO Metering Company மூலம் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். LECOஇன் துணை நிறுவனமான LECO Metering Company (Pvt) Ltd. வருடாந்தம் 250,000 மீட்டர்களை உற்பத்தி செய்கிறது. மேலும், நிறுவனம் இந்த ஆண்டு 3-பேஸ் மற்றும் ஸ்மார்ட் மின்சார மீட்டர் உற்பத்தியை விரிவுபடுத்தும் என தெரிவித்துள்ளார். ‘விரிவாக்கத்துடன், நிறுவனம் ஒற்றை-கட்டம், 3-கட்டம் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்களுக்கான முழு உள்நாட்டு தேவையையும் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் ஏற்றுமதி சந்தைகளை இலக்காகக் கொண்டு செயற்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை நூற்று எழுபத்தைந்து வீதத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 30,207 ஆகவும், இந்த ஆண்டு மே மாதத்தில் வந்தவர்களின் எண்ணிக்கை 83,309 ஆகவும் உள்ளது.இது 175.8 சதவீத வளர்ச்சியாகும்.