Author: admin

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள…

Read More

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பை தொடர்ந்து கட்டியெழுப்புவதற்காக நாட்டிலிருந்து வெளியேறும் அந்நிய செலாவணியை மேலும் ஆறு மாதங்களுக்கு மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு நாட்டிலிருந்து வெளிவரும் அந்நிய செலாவணியை மட்டுப்படுத்த அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் டொலர்களின் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்த போதிலும் அது போதுமானதாக இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர், இலங்கையிடம் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் உத்தியோகபூர்வ கையிருப்பு இருந்ததுடன், மத்திய வங்கி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த வருடம் 30 ஆம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். கடனை மறுசீரமைக்கும்…

Read More

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய (COPA) குழுவில் தெரியவந்துள்ளது. நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் 26791 கைதிகள் இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவில் (கோபா குழு) தெரிவித்தார். கைதிகளின் எண்ணிக்கை 259 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கூறினார். சில சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை 300 முதல் 400 வீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சிறைச்சாலைத் திணைக்களத்தின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் பொதுக் கணக்குகளுக்கான பாராளுமன்றக் குழு கூடிய போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது. சிறைகளில் உள்ள கைதிகளில் 17,502 பேர் விளக்கமறியலில் உள்ள கைதிகள் என்பதும், அவர்களில் 10,470 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது. சிறைச்சாலைகள் திணைக்களத்தை ஸ்தாபிப்பது தொடர்பிலான தற்போதுள்ள சட்டமூலத்திற்கு பதிலாக சர்வதேச…

Read More

மட்டக்களப்பு தலைநகர் பகுதியில் தனது அண்ணனுக்கு 17 வருடத்துக்கு முன்னர் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு வீட்டுக்கு சென்ற போது அவர் மீது அவரது சகோதர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரது அண்ணன், அக்கா மற்றும் அக்காவின் கணவர் அவரது மகள் ஆகிய 4 பேரை இன்று (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மட்டு. கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் தனது காணியை கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் விற்று அந்த பணத்தில் 6 1/2 லட்சம் ரூபாவை மூத்த சகோதரனுக்கு கடனாக வழங்கிய நிலையில் அவர் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திரும்பி வந்துள்ளார். இந்த நிலையில் கொடுத்த கடணை கேட்டு சகோதரனின் வீட்டுக்கு சென்ற நிலையில் அவர் அங்கு இல்லாத நிலையில், அவர் தனது…

Read More

நாட்டில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட, தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர, இயற்கையான சருமத்தைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானது எனத் தெரிவித்தார். மேலும், சில பெண்கள் சரியான விளக்கமின்றி சருமத்தை வெண்மையாக்கும் முகப் பூச்சுகளை (கிரீம்) பயன்படுத்துவது கூட புற்றுநோயின் தாக்கத்துக்கு காரணமாக அமையலாம் எனவும் அவர் கூறியுள்ளார்

Read More

எல்பிஎல் வீரர்களின் ஏலம் கொழும்பில் தற்போது நடைபெற்று வருகின்றது. முதன்முறையாக நடைபெறும் இந்த எல்பிஎல் ஏலத்தில் 360 வீரர்கள் இடம்பிடித்துள்ளாா்கள். மாலை 4.30 மணி வரை LPL ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வீரா்களின் விபரம் இதோ… • லக்ஷான் சந்தகான் – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி – 30,000 அமெரிக்க ​டொலர் • லஹிரு குமார – காலி டைட்டன்ஸ் – 40,000 அமெரிக்க ​டொலர் • துஷ்மந்த சமீர – பி – லவ் கண்டி அணி – 70,000 அமெரிக்க ​டொலர் • மொஹமட் ஹஸ்னைன் – பி – லவ் கண்டி அணி – 34,000 அமெரிக்க ​டொலர் • வஹாப் ரியாஸ் – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி – 40,000 அமெரிக்க ​டொலர் • குசல் ஜனித் பெரேரா – தம்புள்ளை ஔரா – 40,000 அமெரிக்க டொலர் • நிரோஷன் டிக்வெல்ல – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் – 44,000 அமெரிக்க டொலர் • தினேஷ்…

Read More

அரச வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்களில் பத்திற்கும் மேற்பட்டவை முழுமையாக செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்ப அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், கராப்பிட்டிய, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் இருக்கும் CT ஸ்கேன் இயந்திரங்களே இவ்வாறு செயலிழந்துள்ளதாக சங்கத்தின் தலைவரான ஜானக்க தர்மவிக்ரம தெரிவித்தார். 3 வைத்தியசாலைகளிலுள்ள CT ஸ்கேன் இயந்திரங்களில் முழுமையான பயனை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அரச கதிரியக்க தொழிநுட்ப அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ஜானக்க தர்மவிக்ரம கூறியுள்ளார். அரச வைத்தியசாலைகளில் தற்போது 43 CT ஸ்கேன் இயந்திரங்கள் மாத்திரமே செயற்பாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதனால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நோயாளர்களை அடையாளப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Read More

தங்க விலையானது இன்றைய தினம் (14) 6 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலைகளின்படி, 24 கறட் தங்கம் ஒரு பவுன் 174,000 ரூபாவாகவும், 22 கறட் தங்கம் ஒரு பவுன் 159,500 ரூபாவாகவும் காணப்படுகிறது. இதேவேளை மத்திய வங்கியின் தரவுகள் அடிப்படையிலும் தங்கத்தின் விலை கீழ்வருமாறு அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது. தங்க அவுன்ஸ் – ரூ.591,772.00 24 கறட் 1 கிராம் – ரூ. 20,880.00 24 கறட் 8 கிராம் (1 பவுன்) – ரூ. 167,000.00 22 கறட் 1 கிராம் – ரூ. 19,140.00 22 கறட் 8 கிராம் (1 பவுன்) – ரூ. 153,150.00 21 கறட் 1 கிராம் – ரூ. 18,270.00 21 கறட் 8 கிராம் (1 பவுன்) – ரூ.146,200.00

Read More

வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவுரலுமுல்ல, நந்துங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றினுள் இரத்தக் காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிவேரிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Read More

இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபா 19 சதம் – விற்பனை பெறுமதி 318 ரூபா 99 சதம் ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 69 சதம் – விற்பனை பெறுமதி 403 ரூபா 38 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325 ரூபா 78 சதம் – விற்பனை பெறுமதி 345 ரூபா 34 சதம் கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 10 சதம் – விற்பனை பெறுமதி 240 ரூபா 85 சதம் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 204 ரூபா 59 சதம் – விற்பனை…

Read More