டுபாய் நாட்டில் இருந்து சட்டவிரோத பொருட்களுடன் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். குறித்த கொள்கலனில் இருந்து சுமாா் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்கலனில் இருந்து 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான அழகு சாதனப் பொருட்களும் மூன்று வாகனங்களை பொருத்தக்கூடிய உதிாிபாகங்களும், மதுபானம் மற்றும் சிகரெட் தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன. வாகன உதிாிபாகங்களை இறக்குமதி செய்யும் போா்வையில் குறித்த கொள்கலன் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தொியவருகிறது.
Author: admin
இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்றையதினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை மேலும் சரிவை சந்தித்துள்ளது. இலங்கை வர்த்தக வங்கிகளின் நிலவரம் இதன்படி, மக்கள் வங்கியில் இன்றைய தினம் டொலரின் கொள்முதல் பெறுமதி 283.20 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம் சம்பத் வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 285.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. கொமர்ஷல் வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 282.84 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. ஹட்டன் நஷனல் வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 285.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. செலான் வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 283.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 299.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. DFCC வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி 283.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 299.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. NDB வங்கியில் டொலரின் கொள்முதல் பெறுமதி…
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இரும்பு விலை சுமார் 50 வீதமாக குறைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதே இதற்கு பிரதான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு ட்ரோன் விமானத்தை அனுமதியின்றி பறக்க விட்ட பல்கலைக்கழக மாணவனை விமானப்படையினர் கைது செய்துள்ளனர். புத்தளம் நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பயிலும் 22 வயதான மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞன் ரயில் நிலையத்திற்கு அருகில் ட்ரோன் விமானத்தை பறக்க விட்டுக்கொண்டிருந்த போது, பம்பலப்பிட்டி ஓஷன் டவரில் அமைந்துள்ள விமானப்படை காவலரணை சேர்ந்த படையினர், அவரை கைது செய்துள்ளனர். பம்பலப்பிட்டியில் உள்ள உணவகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்ததை முன்னிட்டு அதனை கொண்டாடுவதற்காக ட்ரோன் விமானத்தை வானில் பறக்க விட்டதாக மாணவன், விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட மாணவன் ட்ரோன் விமானத்துடன் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு இன்று (06) அறிவிக்கப்படவிருந்தது. ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் அடங்கிய அமர்வு, இது தொடர்பான தீர்ப்பை ஜூலை 25ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது. இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜாவுரிமையைப் பெற்றிருப்பதன் காரணமாக இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அமரத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி அவர் இந்த மனுவை சமர்ப்பித்திருந்தார்.
ஊழல் தடுப்பு சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்மானத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார். குறித்த சட்டமூலத்தில் உள்ள சில ஷரத்துகள் அரசியலமைபிற்கு முரணானவை என நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தம் சட்டமூலத்தில் செய்யப்பட்டால் முரண்பாடுகள் இருக்காது என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கோழி இறைச்சியினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக இதனை தெரிவித்துள்ளார். சுஜிவ தம்மிக மேலும் கருத்து தொிவிக்கையில், விலை கட்டுப்பாடின்றி தொடர்ந்து கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பின் பெறுபேறாக அதனை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையே ஏற்படும். கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் காண்பித்து அதனை உற்பத்தியாளர்கள் மீது சுமத்தப்பார்க்கிறார்கள். இன்னும் சில நாட்களுக்கு பின்னர் கட்டுப்பாட்டு விலை குறித்த வர்த்தமானியை அறிவிக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் கோருவர். வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட பின்னர் கோழி உற்பத்தி அழிவடையும். உடனடியாக தற்போது நிலவும் விலையினை ஆய்வு செய்து திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். கால்நடை உற்பத்தித் திணைக்களம் முழுமையாக இதில் தலையிட்டு தீர்வு காணாவிட்டால் கோழிப் பண்ணைகள் நாட்டிலிருந்து காணாமல் போய்விடும். எனவே கோழி இறைச்சியினை இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்…
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிக்கு வரும் தகுதிகள் தனக்கு இருப்பதாக ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான பேட்டி நிகழ்ச்சியில் அவர் இதனை கூறியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்குமா, அதற்கு முன்னர் நடக்குமா, ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி அதனை செய்வாரா என்பது எமக்கு தெரியாது. ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் நாங்ள் அதற்கு தயார். பொதுத் தேர்தலுக்கு தயாராகவே இருக்கின்றோம். ஜனாதிபதியாக பதவிக்கு வருவது உங்களது எதிர்பார்ப்பா என அனைவரும் என்னிடம் கேட்கின்றனர். ஜனாதிபதியாக பதவிக்கு வருவதில் என்னிடம் இல்லாத தகுதிகள் என்ன என்று நான் கேட்கிறேன். நாங்கள் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதா?, கொழும்பில் உள்ள பெரிய பாடசாலைகளில் கல்வி கற்கவில்லை என்பதா?, எமக்கு சர்வதேச அனுபவங்கள் இல்லை என்றா கூறுகின்றனர்?. நான் சர்வதேச தளத்தில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றியுள்ளேன். நான் வியன்னா மாநாட்டின்…
தனது சிறுநீரை பிளாஸ்டிக் போத்தலில் நிரப்பி, மற்றொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திவுலபிட்டிய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி மீதே, தனியார் பஸ்ஸின் சாரதியால் இவ்வாறு சிறுநீர் தாக்குதல் மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், சாரதிக்கு அண்மையில் உள்ள ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்கள் மீதும் சிறுநீர் பட்டுத் தெறித்துள்ளது. குருநாகல் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், பயணிகளை ஏற்றுவதற்காக, மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பில் இருந்து மினுவாங்கொடையை நோக்கி பயணித்த தனியார் பஸ் சாரதியே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.
கஹதுடுவ பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குச் சென்று தம்மை பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட இருவர், வீட்டின் உரிமையாளரைக் கைது செய்து ரூ.160,000 ஐ கொள்ளையடித்ததுள்ளனர். அதனையடுத்து குறித்த உரிமையாளரை மொறட்டுவைக்கு அழைத்துச் சென்று மேலும் ரூ.300,000 ஐ அபகரித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இரு சந்தேக நபர்களும் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ஒருவரின் முன்னாள் சாரதி எனவும் தெரிய வந்துள்ளது.