கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு கட்டமைப்புபொன்றை ஸ்தாபிக்க விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தற்போது பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமூகமான பயணிகள் பயணத்தை வழங்கும் நோக்கத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக தெரிவித்துள்ளது.
Author: admin
கண்டி – மஹியங்கனை வீதியில் குருலுபொத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்ததுடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு (09) கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் பிரேக் செயலிழந்து மண்மேடு ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பிபில பிரதேசத்தை சேர்ந்த 06 மாத குழந்தையே உயிரிழந்துள்ளது. விபத்தில் சாரதி உட்பட ஏழு ஆண்களும், பத்து பெண்களும், மூன்று சிறுவர்களும் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாத்திரை சென்று வீடு திரும்பி கொண்டிருந்த போதே பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜூலை மாதம் அமுலாகும் மின்கட்டண குறைப்பு பட்டியல் வெளியானது மின்சாரத்துறை அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜூலை – டிசம்பர் வரையான மின்கட்டண சீராக்கல் விபரம் வெளியாகியுள்ளது. இதன்படி 0-30 அலகுக்குள் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றவர்களுக்கு மட்டுமே 26% மின்கட்டண குறைப்பு அமுலாகும். மொத்தமாக 3% மின்கட்டணம் மட்டுமே குறைகிறது. மின்கட்டணத்தை குறைந்தபட்சம் 25%ஆல் குறைக்க வேண்டும்/முடியும் என பதவி பறிக்கப்பட்ட இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது. மே மாதத்தில் வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 175 மில்லியன் டொலர்கள் அதிகம் என்றும் 2022 மே மாதத்தில் இலங்கைக்கு 304.1 மில்லியன் டொலர் கிடைத்ததாகவும் அறிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான மொத்தம் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு சந்தா்ப்பத்திலும் தேர்தலுக்கு நாங்கள் தயார். ஜனாதிபதி தேர்தலுக்கும் கூட நாங்கள் தயார் என அவா் தொிவித்துள்ளாா். இதன்போது இலத்திரனியல் ஊடக ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம் தொடர்பிலும் மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டார். நாங்கள் இன்னும் அதனை பார்க்கவில்லை, தற்போது ஊடகம் சுதந்திரம் உள்ளது தானே என அவா் குறிப்பிட்டுள்ளாா்.
கோழி இறைச்சி மற்றும் முட்டையினை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் சட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீனின் விலை அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சி வியாபாரிகள் அநாவசிய இலாபம் பெறும் நோக்கில் விலையை அதிகரித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாா். கோழி மற்றும் முட்டை தொழில்துறையினருடன் நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது என தொிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் குறித்த 7 பெண்களும் விபச்சாரத் தொழில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.
கவா்ச்சிகரமான வட்டி தருவதாக கூறி ஒரு கோடியே பதினேழு இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கெஸ்பேவ நகரசபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரின் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவா்கள், பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த மோசடி இடம்பெற்றுவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண்ணுக்கு எதிராக பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல்வேறு திட்டங்களுக்கு பணம் முதலீடு செய்யப்படுவதாகவும், பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தியும் 3 லட்சம் முதல் 25 இலட்சம் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடி செய்த பணத்தைக் கோரும் போது அதனை வழங்க மறுத்து, மிரட்டுவதாகவும் முறைப்பாடுகளில் தொிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் பிலியந்தலை – மகுலுதுவ பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவர்…
2024 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக தயாரிக்கப்பட்ட புதிய விதிமுறைகள் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதையடுத்து முதன்முறையாக மாற்றுத்திறனாளி சிறுவர்களை முதலாம் தரத்தில் சேர்ப்பது தொடர்பான ஏற்பாடுகளும் இவ்வருட சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் உடனடியாக அழைக்கப்படும் எனவும் அதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் அழைக்கப்படும். அடுத்த வருடம் முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பது குறைந்தது பெப்ரவரி மாதம் வரை தாமதமாகும் என்பதால் விண்ணப்பங்கள் கோருவதில் தாமதம் ஏற்படுவது பிரச்சினையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன் கொலனி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை மாவட்ட புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து வியாழக்கிழமை (8) முற்றுகையிட்டபோது கலன்களில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 இலட்சம் மில்லி லீற்றர் கோடாவை மீட்டதுடன் இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பெண்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் குறித்த பிரதேசத்தில் வீடுகளில் கசிப்பு உற்பத்தி செய்துவரும் நிலையங்களை சம்பவதினமான வியாழக்கிழமை மாலை பொலிஸாருடன் புலனாய்வு பிரிவினர் இணைந்து முற்றுகையிட்டனர். இதன் போது வீட்டின் அருகிலுள்ள பாழடைந்த காணியின் நிலத்தை தோண்டி அங்கு கலன்களில் கசிப்பு உற்பத்திக்கான கோடாவை புதைத்து வைத்திருந்த நிலையில் அவற்றை தோண்டி எடுத்தனர். இவ்வாறு நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 4 இலட்சம் மில்லி லீற்ற் கோடாவை மீட்டதுடன் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட உறவினர்களான அருகருகே அமைந்துள்ள வீடுகளைச் சோந்த 30,40,35, 50 வயதுடைய 4 பெண்களை…