மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய…
Author: admin
தென் கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள நபர்களிடமிருந்து, 275 கடவுச்சீட்டுகளைச் சேகரித்து தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி, கெட்டம்பே தங்கொல்ல வீதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரியாலயத்தை சுற்றிவளைத்த போதே, இந்த கடவுச்சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சுற்றிவளைப்பு தேடுதலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர். இந்த காரியாலயத்துக்கு, ஏனைய நாடுகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்பிவைப்பதற்கான அனுமதி உள்ளது. எனினும், தென்கொரியாவுக்கு அனுப்பிவைப்பதற்கான அனுமதி இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்று, இலங்கைப் பல்கலைக்கழகங்கள், ஆசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருந்ததாகவும், அந்தத் தரம் மற்றும் நற்பெயரை இந்நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதன் ஊடாக வெளிநாட்டு மாணவர்களையும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு ஈர்க்க முடியும் எனவும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த (09) பிற்பகல் இடம்பெற்ற “CVCD Excellence Awards” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டில் கல்வி முறையில் உள்ள பிரச்சினைகளை விரைவில் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிய ஜனாதிபதி, அனைவரும் சரியான வயதில் கல்வியை நிறைவுசெய்து முன்னேறிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இலங்கையின் உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழுவினால் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும், “CVCD Excellence…
அநுராதபுரம் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்தை கற்களால் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மூன்று பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அனுராதபுரத்தில் வசிக்கும் 14 மற்றும் 17 வயதுக்கு இடைப்பட்ட மூன்று மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட தகராறின் அடிப்படையில் இன்று அதிகாலை பேருந்தின் மீது குறித்த மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஆரமப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நாட்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, காய்ச்சல் இருந்தால் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். “உங்களுக்கு காய்ச்சல் இருந்தால், மிக முக்கியமான விஷயம் ஓய்வு, அதாவது உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். யாராவது வேலைக்குப் போகிறார் என்றால், சில நாட்கள் வேலையை விட்டுவிட்டு, அல்லது சில நாட்கள் பாடசாலைக்கு செல்லது ஓய்வாக இருங்கள்.. இரண்டாவது விஷயம், முடிந்தவரை திரவ உணவை சேர்த்துக் கொள்ளுங்கள். காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டிமால் (Paracetimol) மருந்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவை எடுத்துக் கொள்ளவும். அதைத் தவிர, மற்ற மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். இந்த நாட்களில் காய்ச்சலைக் கட்டுப்படுத்த டிஸ்பிரின், ஆஸ்பிரின் குழு மருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது. அதன் மூலம் டெங்கு நோய் இருந்தால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும். இறுதியில் மரணம்…
மின்சார சபையை தனியார் மயமாக்கும் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் மேற்கண்டவாறு தெரிவித்தார். “மின்சார வாரியத்தை 15 நிறுவனங்களாகப் பிரிக்கும் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு 6 வாரங்கள் கடந்ததும், அக்டோபர் 1-ஆம் திகதி முதல் இந்த 15 நிறுவனங்களையும் அந்த சட்டமூலத்தின்படி தான் செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளன. இந்த சட்டத்தின் ஏற்பாடாக இலங்கை மின்சார சபை ஊழியர்களின் ஓய்வூதியத்தை உள்ளடக்குவதில்லை என தீர்மானம் எடுத்துள்ளனர். நிறுவனங்களுக்கு மின் வாரியத்தை வழங்கும் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் 21ம் திகதி மின்சார வாரியத்தின்…
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 209 ஓட்டங்களால் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலியா அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 469 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 173 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த அவுஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்களை இழந்து 270 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது. அதன்படி, 443 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி போட்டியின் இறுதி நாளான இன்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இந்திய அணி சார்பில் விராட் கோஹ்லி 49…
பௌத்த மதத்தை விமர்சித்து வியாபாரம் செய்பவர்களின் வாயை அடைப்பதும், அந்த வியாபாரங்களுக்கு எவ்வாறு பணம் கிடைக்கிறது என்பதை ஆராய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் சில அமைப்புகள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்ததாகவும், அதற்கு தான் இடமளிக்கவில்லை எனவும், அதனால் தாம் அடைந்த பின்விளைவுகள் குறித்து இறுதியில் பேசமாட்டேன் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; “இன்று பௌத்தத்தின் முக்கியத்துவம் காலப்போக்கில் அதிகரித்துள்ளது. ஆனால் இன்று இந்நாட்டில் சில சக்திகள் புத்தபெருமானுக்கு அவமரியாதையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு அமைப்புகளை கட்டியெழுப்ப ஆரம்பித்துள்ளதையிட்டு நாம் வருந்துகிறோம். பௌத்த தத்துவத்திற்கு மிகத் தவறான விளக்கங்களைக் கொடுத்து விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். புத்தபெருமானின் போதனைகளின்படி இது நமக்கு ஆச்சரியமல்ல. இப்படியான சவால்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பௌத்தத்திற்கு அவ்வப்போது வந்து கொண்டேயிருக்கின்றன. இன்றைய ஏழ்மைக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் பௌத்தத்தில் விடை காணப்படுகின்றது. நான் அரசியல்…
இந்தச் சம்பவம் மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று (09) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த இருவரினதும் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 49 வயதுடைய தந்தையும், 20 வயதுடைய மகனும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் பலியாகியுள்ளனர். மீட்கப்பட்ட சடலங்களை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறிய இலங்கையர்களின் எண்ணிக்கை 37% அதிகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் வெளிநாட்டு வேலைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை சராசரியாக 226,000 மாத்திரமாகும். ஆனால் 2022ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 311000 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களில் 87% பேர் சில தொழில் நிபுணத்துவம் கொண்ட தொழில் வல்லுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், அவர்கள் இந்த நாட்டிற்கு மாதந்தோறும்அனுப்பும் வருமானம் 500 மில்லியன் டொலர்கள் என்ற வரம்பை எட்டியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.