எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அறுபது வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்ட போதிலும் தற்போதுள்ள கையிருப்புகளை விற்பனை செய்வதற்கு மருந்தகங்களுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. மருந்து இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம், சுகாதார அமைச்சர் நேற்று (12) கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் இது தொடர்பாக கலந்துரையாடினர். அங்கு கையிருப்பில் உள்ள மருந்துகளை விற்பனை செய்ய இரண்டு வார கால அவகாசம் வழங்குவதாக சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார். எனினும் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பதினைந்து வகை மருந்துகளின் விலையை பத்து வீதத்தால் குறைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை தயாரித்து சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது. விலை குறைக்கப்பட்ட மருந்துகளில் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், உடல்வலி உள்ளிட்ட பல நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளும் அடங்கும்.
Author: admin
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான இறுதி நிலை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி, தேசிய ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் 3ம் இலக்க பொது நிதி முகாமைத்துவப் பொறுப்புச் சட்டத்தின் பிரிவு 13 இன் விதிகளின்படி, நிதிப் பொறுப்புள்ள அமைச்சர், சம்பந்தப்பட்ட நிதியாண்டுக்கு அப்பால் ஐந்து மாதங்கள் கடக்கும் முன், வரவு செலவுத் திட்டம் குறித்த இறுதி நிலை அறிக்கையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி நிலை அறிக்கை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். புகையிரத திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் எனவே பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். இலங்கை துறைமுக அதிகாரசபையில் ஏற்பட்ட மாற்றத்தைப் போன்று புகையிரத திணைக்களமும் மறுசீரமைக்கப்பட்டு அதிகாரசபையாக மாற்றப்பட வேண்டும் என அமைச்சர் கருதுகின்றார். புகையிரத திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதன் மூலம் அதிகாரிகள் சுயாதீனமான தீர்மானங்களை எடுப்பதுடன் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
06 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கொழும்பு கோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் கிடைத்த தகவலின் அடிப்படையில் வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர் இன்று (13) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சர்வதேச பொலிஸார் அல்லது ‘INTERPOL’ என அழைக்கப்படும் சிவப்பு அறிவிப்புப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள 6,872 தப்பியோடியவர்களில் 07 பேர் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏழு பேரில், நான்கு பேர் இலங்கையில் ‘தேடப்படுபவர்கள்’ என்று பட்டியலிடப்பட்டுள்ளனர். ஏனைய மூன்று இலங்கையர்களுக்கு அவர்களின் பிரதேசங்களில் நடந்த குற்றங்களுக்கான கோரிக்கைகளின் அடிப்படையில் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்டர்போல் ரெட் நோட்டீஸ் என்பது, நாடுகடத்தப்படுதல், சரணடைதல் அல்லது அதுபோன்ற சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளும் ஒருவரைக் கண்டறிந்து, தற்காலிகமாக கைது செய்ய உலகெங்கிலும் உள்ள சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் கோருவதாகும். இதனடிப்படையில், இன்டர்போல் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தேடப்படும் நால்வர் கொஸ்கொட சுஜீ என்ற 38, நடராஜா சிவராஜா, 49, முனிசாமி தர்மசீலன் 50, மற்றும் விக்னராசா செல்வந்தன் 35 ஆகிய நால்வராவர். கொலை வழக்கு தொடர்பில் கொஸ்கொட சுஜீக்கும், மறைந்த அமைச்சர் லக்ஷ்மன் கதிரகாமரின் கொலைக்கு உதவிய நடராஜா சிவராஜாவுக்கும் இந்த சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக…
நிவாரணப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிா்வரும் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சுமார் 95% பயனாளிகளின் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தமது டுவிட்டா் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா். குறித்த விடயம் தொடா்பில் பொறுப்பு வழங்கப்பட்ட குழு அதனை உறுதி செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தொிவித்துள்ளாா்.
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டம் உட்பட கொழும்பு, களுத்துறை, கேகாலை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கே அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் மரங்கள் முறிந்து வீழ்தல் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(13.06.2023) கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வந்தது. எனினும், கடந்த வாரத்தில் இருந்து ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (13.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 309.22 ரூபாவாகவும், கொள்வனவு விலை 294.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம் நேற்றையதினம்(12.06.2023), அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.73 ரூபாவாகவும், கொள்வனவு விலை 290.06 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 334.75 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 316.35 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய…
இலங்கையில் 7.5 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக வெளியான செய்திகள் பொய்யானவை என உலக உணவுத் திட்டத்திற்கான ஒத்துழைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் உணவுப் பாதுகாப்பில் முன்னேற்றத்தைக் காட்டுவதாக குறிப்பிடும் பயிர் மற்றும் பாதுகாப்பு மதிப்பீட்டு செயற்பாட்டு கண்டுபிடிப்புகளுக்கு இது முரணாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பற்றாக்குறையால் பல்கலைக்கழகங்களில் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக அமைப்பில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக சராசரியாக 11,293 விரிவுரையாளர்கள் தேவைப்பட்ட போதிலும், தற்போது 6,677 பேர் மாத்திரமே அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சாருதத்ய இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.