கொழும்பு அவிசாவளை வீதியில் ஹங்வெல்ல எம்புல்கம பகுதியில் இன்று (9) காலை லொறி ஒன்றும் இ.போ.ச பேருந்தும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த லொறி ஒன்று அக்கரப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இரண்டு வாகனங்களின் சாரதிகளும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நவகமுவ மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Author: admin
குரங்கு காய்ச்சல் குறித்து சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது என பதில் தலைமை தொற்றுநோய் நிபுணர் டாக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார். அண்மையில் மேலும் இரு குரங்கு காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இலங்கையில் இனங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது நான்காக அதிகரித்துள்ளது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு குரங்கு காய்ச்சல் தொற்று பரவுவது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும், எனவே இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் வைத்தியர் சமித்த கினிகே மேலும் தெரிவித்தார்.
கடந்த மாதம் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சீன நாட்டவர் இன்று (08) மீண்டும் சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். மே மாத இறுதியில் 2 போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற சீன நாட்டவர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அமைச்சரின் நாடு கடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மே 29 ஆம் திகதி, குறித்த சீன நாட்டவரை கைது செய்ய ஏற்கனவே சீனாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்திருந்தார். அவரை சீனாவுக்கு நாடு கடத்துவதை தடுக்குமாறு கோரி, குறித்த சீன பிரஜையினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
சக மாணவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சக மாணவர் ஒருவரை கிரிக்கெட் விக்கெட் ஸ்டம்புகளால் தாக்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பரீட்சைகளுக்கு இடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு அபாயத்தை கருத்தில் கொண்டு சாதாரண பரீட்சையின் பின்னர் பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன் இந்த வார இறுதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு பிராந்தியத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாரஹேன்பிட்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் தாய் கோழிகளுக்கு பதிலாக 176,000 குஞ்சு பொரிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்ய தேசிய கால்நடை மேம்பாட்டு சபை தீர்மானித்துள்ளது. ஒரு மாதத்தில் வாரத்திற்கு 44,000 முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தேசிய கால்நடை மேம்பாட்டு சபை தலைவர் பேராசிரியர் எச். டபிள்யூ. சிரில் தெரிவித்துள்ளார். தாய் கோழிகளை இறக்குமதி செய்வதால் முட்டை மற்றும் குஞ்சுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் குஞ்சு பொரிக்கும் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன என்று விவசாய அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
# சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர்வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில்…
ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் 2479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 41883 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 25 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 22.1 வீதமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் 21 வீதமான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். நாடளாவிய ரீதியில் தற்போது 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
நாடளாவிய ரீதியில் பல வியாபாரிகள் தொடர்ந்தும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்வதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். பல வியாபாரிகள் ஒரு முட்டையை 47 ரூபா தொடக்கம் 60 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நாளில் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் கூறுகின்றனர். அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்வது தொடர்பாக நுகர்வோர் ஆணையம் நடத்திய விசாரணையில், அதிக விலைக்கு முட்டை விற்கும் வியாபாரிகளை கண்டறிய சோதனை நடத்தப்படும் என்றும், அவர்களுக்கு எதிராக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. . இதேவேளை, முட்டைக்கு அதிக கிராக்கி நிலவுவதால் வியாபாரிகள் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்வதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டமை மற்றும் அனுமதிப்பத்திரம் இன்றி அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் டைவிங் உபகரணங்களை வைத்திருந்த 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மீனவர்களுடன் 669 கடலட்டைகள், 6 டிங்கிகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினர் மேற்கொண்ட தேடல் நடவடிக்கைகளின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.