சபரகமுவ மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க எதிர்வரும் செவ்வாய் கிழமை பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். பியகமயில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, அடுத்த வாரம் முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆளுநராக பதவியேற்பார் என ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். தமது பதவியிலிருந்து விலகுவதாக சபரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, அண்மையில் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். இதனையடுத்து குறித்த பதவி வெற்றிடமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார். தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான எரிபொருள் இருப்புக்கள் விநியோகிக்ப்பட்டுள்ளதாக அமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் ஓர்டர்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டன என்பது தொடர்பிலும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, நாளாந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும், நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு நிரப்பு நிலையங்களிலும் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த…
இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மூவாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை, அதன் தலைவர் உதயகுமார அமரசிங்கவிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் எண்ணாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில், சிறுவர்களின் செயற்பாடுகள், கல்வி மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் மூவாயிரம் முறைப்பாடுகள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டிய 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு முன்னர் இந்த ஒப்பந்தங்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படவிருந்த புதிய மத்திய வங்கிச் சட்டத்திற்கு நாடாளுமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல் உள்ளது. மேலும் பந்தயம் மற்றும் கலால் வரிகளை அதிகரிப்பது ஆகிய இரண்டு உடன்படிக்கைகளை இலங்கை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்தோடு நிதி வெளிப்படைத்தன்மைக்கான இணைய முறையை உருவாக்குவது என்ற உறுதிப்பாடும் நிறைவேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செப்டெம்பர் 30 ஆம் திகதிக்குள், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் 37…
இன்று பிற்பகல் 2 மணி முதல் காலி வீதி – தெல்வத்தை சந்தியில் இருந்து சீனிகம வரை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெல்வத்த – ரத்பாத் ரஜமஹா விகாரையின் மிஹிந்து பெரஹெர வீதி உலா காரணமாக இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தெல்வத்தை மற்றும் சீனிகம வரையான பகுதியில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை குறைப்பதற்கு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரிய கப்பல் கட்டுமான பணிகளுக்கு திறமையான தொழிலாளர்களை அனுப்புவதை நோக்கமாகக் கொண்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து கங்காராம விகாரையின் ஸ்ரீ ஜினரதன கல்வி நிறுவனத்திற்கும் கொரியன் கூல்லைஃப் நிறுவனத்திற்கும் இடையில் இன்று(10) இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில், சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் .ஹில்மி அஸீஸ், ஸ்ரீ ஜினரதன கல்வி நிறுவனத்தின் ஆளுநர் சபையின் செயலாளர் பிரசாத் ஜயவீர, கொரியன் கூல்லைஃப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோன் யுங் லிம் ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, கொரிய கப்பல் கட்டும் தொழிலில் பணிபுரிய தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதோடு, கப்பல் கட்டுமானத் துறையில் வெல்டிங் பணிகளுக்கு ஆரம்ப கட்ட பயிற்சியும், இரண்டாம் கட்டமாக கப்பல் பெயின்டிங் பயிற்சி மற்றும் மின்சாரப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றோடு, கப்பல் கட்டுமானத் துறையில் வேலை…
நாட்டின் தனிநபர் கடன் சுமை, மத்திய அரசு எடுத்த மொத்தக் கடனில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக காணப்படுவதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளில் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 794,376 ரூபாவாகவும், அவ் ஆண்டிற்கான தனிநபர் பொதுக் கடன் 795,223 ரூபாவாகவும் காணப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதே ஆண்டின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,997 டொலர்களாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2022 ஆம் ஆண்டில், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,474 டொலராகக் குறைந்துள்ள நிலையில், ரூபாயின் அந்நியச் செலாவணி வீழ்ச்சியின் விளைவாக, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1,088,667 ரூபாயாகவும், தனிநபர் பொதுக் கடன் பங்கு 1,239,443 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில், 2021 இல், தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் பொதுக் கடன் பங்கு கிட்டத்தட்ட சமமாக…
முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபா் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் தங்கியிருந்த இடத்தில் புல் வெட்டும் தொழிலாளியாக பணிபுரிந்த கொட்டாவை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே நேற்று(09) முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா்.
மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள 406 புதிய வைத்தியர்களை பயிற்சிக்காக நியமிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் உள்ள 63 வைத்தியசாலைகளுக்கு இந்த வைத்தியர்கள் பரிந்துரைக்கப்படவுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 694 பயிற்சி மருத்துவர்களின் பயிற்சி காலம் வரும் 27ம் திகதி முடிவடைய உள்ளது, அதன்படி புதிய மருத்துவர்கள் அந்தந்த மருத்துவமனைகளுக்கு நியமிக்கப்படுவார்கள். தற்போது, நாட்டின் சுகாதார அமைப்பில் கிட்டத்தட்ட 30,000 மருத்துவர்கள் உள்ளனர். நாட்டில் நிலவும் சவாலான சூழலை பொருட்படுத்தாது சுகாதார சேவையின் அத்தியாவசிய நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, அண்மையில் 222 குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சுகாதாரத் துறையில் பணியமர்த்தப்பட்டனர். மேலும், தாதியர் சேவைக்காக புதிதாக 3316 தாதியர்களை உடனடியாக பயிற்சிக்கு அனுப்புமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி பயிற்சி…