50 கிலோ கிராம் யூரியா உர மூட்டை ஒன்றின் விலையை 9,000 ரூபாவாக குறைப்பதற்கு அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. யூரியா உரத்தின் விலையை குறைக்கும் முடிவை, சந்தை விலையை கருத்தில் கொண்டு, அதற்காக நியமிக்கப்பட்டுள்ள விலைக்குழு முடிவு செய்ய வேண்டும் என, அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி, அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அதிகாரிகளுக்கு இன்று உடனடியாக கூடி உரத்தின் விலையை குறைப்பது தொடர்பில் தீர்மானிக்குமாறு விலைக்குழுவு பணிப்புரை விடுத்துள்ளது. அந்த தீர்மானத்தின்படி, யூரியா உர மூட்டை ஒன்றின் விலை நாளை முதல் 9,000 ரூபாவாக குறைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
Author: admin
பணி அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாதாந்தம் 40-50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து வெளியேறுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரிகளின் சம்பளம் குறைப்பு, சேவைக் காலம் எட்டு மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படாதது, ஐந்தாண்டு விடுமுறை எடுத்து வெளிநாடு செல்வது, வங்கிக் கடன் பெறுவது போன்ற காரணங்களை முன் வைத்து அதிகமானோர் பொலிஸ் துறையை விட்டு வெளியேறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சேவையை விட்டு வெளியேறிய பெரும்பாலான அதிகாரிகள் ஐந்து வருடங்களுக்கும் குறைவான சேவையை கொண்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
சுமார் 159 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண் கட்டளைச் சட்டத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1864 ஆம் ஆண்டில் 13 இலக்க பாண் கட்டளைச் சட்டமானது, பாண் விற்பனையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் விற்பனைக்கு வழங்கப்படும் பாணில் கலப்படம் செய்யப்படுவதை தடுக்கிறது. இந்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் நேற்று (12) கூடிய அமைச்சரவை கூட்டத்தில், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது. பாண் கட்டளைச் சட்டம் நுகர்வோர் விவகார அதிகார சபையின் 2003ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க கட்டளை சட்டத்தின் சில விதிமுறைகளுடன் ஒத்துப்போவதில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாண் கட்டளைச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவது அவசியமற்றது என அரசாங்கம் அவதானித்துள்ளது. இந்நிலையில், பாண் கட்டளைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூல வரைவை தயாரிக்குமாறு சட்ட வரைஞர்களுக்கு அறிவுறுத்தவும் அமைச்சரவை அனுமதி…
நாட்டில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதையடுத்து ,கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த வாரத்திலிருந்து கோழி இறைச்சி வாங்குவதை தாம் புறக்கணிக்கணிக்கவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிஸ்கட் விலை உயர்வைக் கட்டுப்படுத்த என்ன செய்தோமோ அதையே இப்போதும் செய்வோம் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியால் கிடைத்த பலனை நுகர்வோருக்கு வழங்குமாறு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோழி இறைச்சி விற்பனையாளர்களை எச்சரித்துள்ளனர். இப்போதுள்ள இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி அதிக இலாபம் ஈட்ட முயற்சிக்க வேண்டாம். அமெரிக்க டொலரின் பெறுமதி குறைந்தாலும் இறக்குமதி செய்யப்பட்ட பழவகைகளின் விலைகள் கற்பனை செய்ய முடியாத அளவு அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஒரு கிலோகிராம் திராட்சையின் விலை ரூ.2,690 ஆகும். அதேபோல் ஒரு கிலோகிராம் அப்பிளின் விலை ரூ.…
பேரூந்து கட்டணத்தை உயர்த்துமாறு பொது பேரூந்து சங்கம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த விலை உயர்வு கோரப்பட்டுள்ளது. உதிரி பாகங்கள், லூப்ரிகண்டுகள், குத்தகை பிரீமியங்கள் ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் அதிகரிப்பின் அடிப்படையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் பேரூந்து கட்டணத்தை குறைக்கும் யோசனையை முன்வைக்க முடியாது எனவும், தற்போதுள்ள பேரூந்து கட்டணமே தொடரும் எனவும் இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள வருடாந்த பேரூந்து கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகள் இந்த வாரத்திற்குள் வழங்கப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.
இந்த வருடத்தில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இதற்கிடையில் 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திற்கான புதிய ஆளுநராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
கால்நடைகளுக்கு பரவும் தோல் கழலை நோய் காரணமாக மத்திய மாகாணத்தின் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மாகாணத்தில் பல பிரதேசங்களில் தோல் கழலை பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியா் ஆர்.எம்.கே.பி. ராஜநாயக்க தெரிவித்துள்ளார். இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் துாிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளா் குறிப்பிட்டுள்ளாா். கால்நடைகளுக்கு பரவும் நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு சுகாதார துறையால் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை கருத்திற் கொண்டு இன்று(13) முதல் உடற்பயிற்சி புத்தகங்கள் மற்றும் காகித பொருட்கள் உட்பட அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலையை 20% முதல் 25% வரை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வங்கி வட்டி குறைந்துள்ளமை காரணமாக இந்த பொருட்களின் விலை அடுத்த மாதத்தில் 35% முதல் 40% வரை குறையலாம் என சங்கத்தின் தலைவர் திரு.நிருக்ஷ குமார தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோரை கொலை செய்த சம்பவம் தொடா்பில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 42 சந்தேக நபர்களுக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த வருடம் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போது, மே மாதம் 9ஆம் திகதி இந்தக் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.