சுமார் 8 இலட்சம் சாரதி அனுமதி அட்டைகளை தனியார் துறையில் அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் உள்ள அச்சு இயந்திரங்கள் போதிய திறன் இன்மையால் பல மாதங்களாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சுமார் 20 கோடி ரூபாவை செலவழித்து புதிதாக இயந்திரங்களை வாங்க முடியாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஒரு சாரதி அனுமதி அட்டைக்கு 150 ரூபா செலுத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க மேலும் தெரிவித்தார்.
Author: admin
கேகாலை, ரம்புக்கனை பகுதியில் பொலிஸாரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். போலகம, கொட்டகம பகுதியில் ரம்புக்கனை பொலிஸாரினால் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதி தடையில், பொலிஸார் கட்டளையை மீறி மோட்டார் சைக்கிள் ஒன்று பயணித்துள்ளது. இதையடுத்தே பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்து, கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரம்புக்கனை, ஹிரிவடுன பகுதியைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாடம் உட்பட 40 பாடங்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நாளை (15) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜூலை 4 ஆம் திகதி வரை 18 நகரங்களை மையமாக வைத்து மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள பாடசாலைகளை ஓரளவுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் உயர்தர ஆங்கில வழி விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜூலை 1ம் திகதி முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் உட்பட அனைத்து பேருந்து கட்டணங்களையும் கிட்டத்தட்ட 20% குறைக்க போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தேசிய கொள்கையின் பிரகாரம், ஜூலை 1 ஆம் திகதி பேருந்து கட்டணத்தை குறைக்கும் பொறுப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 12 பிரிவுகள் தொடர்பான கணக்கீடுகளை ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் விலை, வாகன உதிரி பாகங்களின் விலை, டயர் மற்றும் பேட்டரி விலை உள்ளிட்ட 12 வகைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, கடந்த கொவிட் காலத்தில் பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்லும் சட்டத்தின் கீழ் உயர்த்தப்பட்ட 20% பேருந்துக் கட்டண உயர்வுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் குறைக்கப்படாத 10% ஆசனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதன்படி தற்போது 30 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களும் குறைக்கப்படலாம் என குறித்த பேச்சாளர்…
உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரக கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றி இலங்கை வைத்தியர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.இந்த சத்திர சிகிச்சை கடந்த (01.06.2023) திகதி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2004 இல் இந்தியாவில் அகற்றப்பட்ட 13 சென்றிமீற்றர் உடைய கல் மற்றும் 2008 இல் பாகிஸ்தானில் அகற்றப்பட்ட 620 கிராம் எடை கொண்ட கற்கள் இடம்பிடித்திருந்தன.எனினும் மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு கற்களை விடவும் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கல் பெரியது என அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்த சத்திர சிகிச்சையை சிறுநீரக வைத்தியர், கே. சுதர்ஷன், கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீர் பிரிவின் தலைவர், வைத்தியர் டபிள்யூ.பி.எஸ்.சி பத்திரத்ன மற்றும் வைத்தியர் தமாஷா பிரேமதிலக ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். மேலும் வைத்தியர் யு.ஏ.எல்.டி பெரேரா மற்றும் வைத்தியர் சி.எஸ் அபேசிங்க ஆகியோரும் மயக்க மருந்து நிபுணர்களாக பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
# இன்று நாட்டில் பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. (வளிமண்டலவியல் தினைக்களம்)
துருக்கிய எயார்லைன்ஸ் இஸ்தான்புல், துருக்கி மற்றும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இடையே நேரடி விமான இணைப்புகளை அக்டோபர் முதல் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், விமானப் பயணிகள், துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து உலகின் 129 நாடுகளுக்கு குறுகிய விமான இணைப்பு நேரத்தின் மூலம் எளிதாகப் பயணிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஐரோப்பாவில் குளிர்காலமாக இருக்கும் என்பதால், இந்த விமான சேவையின் ஊடாக பெருமளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர். கடந்த 10 வருடங்களாக துருக்கிய எயார்லைன்ஸ் மாலைதீவு ஊடாக தனது விமான இணைப்புகளை பராமரித்து வருகின்றது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அந்த இணைப்புகள் இடைநிறுத்தப்பட்டு இலங்கையுடனான நேரடி விமான இணைப்புகள் ஆரம்பிக்கப்படும்.
கதிர்காமத்துக்கான பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார் இச்சம்பவம் இன்று மாலை கதிா்காமத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிங்துண பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது உயிரிழந்தவரின் சடலத்தை மீட்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிசார் லிங்துண (மூன்று கிணறு) பிரதேசத்துக்கு விரைந்துள்ளனர்.
களனிவெளி புகையிரத பாதையின் கோட்டா வீதி புகையிரத கடவை பராமரிப்பு பணிகள் காரணமாக எதிா்வரும் ஜூன் 17 ஆம் திகதி காலை 7 மணி முதல் ஜூன் 18 ஆம் திகதி காலை 5 மணி வரை அந்த வீதி மூடப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே அந்த வீதிக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களம், சாரதிகளை கோரியுள்ளது.
இலங்கை மக்களில் சுமார் 75 இலட்சம் பேருக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என வெளியான ஊடக அறிக்கைகளுக்கு ஜனாதிபதி செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வேலைத்திட்டம்(WFP) மற்றும் உணவு பாதுகாப்பு, விவசாய அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ள உணவு பாதுகாப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை (CFSAM) இலங்கையின் உணவு பாதுகாப்புச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுவதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,உலக உணவு வேலைத்திட்ட உதவிச் செயலகத்தின் (PSWFPC) பணிப்பாளர் நாயகமுமான கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன 2023 மே 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட உணவு பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பிலான (CFSAM) அறிக்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலேயே தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை மக்கள் பார்வைக்காக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு, விவசாய அமைப்பின் (FAO) உத்தியோகபூர் இணைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி இணையத் தளத்தில் உண்மைத் தகவல்களைப்…