புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை குத்தகைக்கு வழங்குவதற்கு ஊக்குவிப்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுலா மேம்பாடு மற்றும் இதர நடவடிக்கைகளுக்கான முன்மொழிவுகளை வழங்குமாறு தனியார் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதற்கான சந்தர்ப்பம் எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் இதன் கீழ் கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை ஆகிய புகையிரத நிலையங்களை அண்மித்த பகுதிகளில் காணி குத்தகைக்கு வழங்கப்படவுள்ளது. மேலும், மலையகப் பாதையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் தொடர்புடைய ரயில்வே நிலங்களை குத்தகைக்கு பெற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தக் காணிகளை குத்தகைக்கு விடுவதில், திட்ட முன்மொழிவுகளின் செயல்திறன், அபிவிருத்திச் செயல்பாட்டில் அவற்றின் பங்களிப்பு மற்றும் ரயில்வே திணைக்களத்தின் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்காதது ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும்.
Author: admin
தென் கொரியாவில் வேலை தருவதாகக் கூறி விண்ணப்பங்களை பெற்று பணம் வசூலித்து ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பேராதனை, கெட்டம்பே பிரதேசத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்ற போதிலும், தென்கொரியாவில் தொழில் வழங்குவதற்கான அனுமதியை அவர் பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது நேர்முகத் தேர்வுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர். சந்தேகநபரிடம் இருந்து பல்வேறு நபர்களின் 275 கடவுசீட்டுகள், 615 வேலை விண்ணப்பங்கள் மற்றும் பொலிஸ் சான்றிதழ்கள், கொரிய மொழியில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அடங்கிய கோப்பு கொரியாவில் வேலை வாய்ப்புகள் உள்ளதைக் குறிக்கும் பேனர் ஆகியவற்றை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சந்தேகநபரின் மோசடியில் 3000க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக விசாரணைகளில்…
மேலும் 5,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம், தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகள், புவியியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் விசேட கவனம் செலுத்தி, மூன்று மொழிகளிலும் பட்டம் பெற்ற ஆசிரியர்களுக்கு புதிய நியமனம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கல்வியியல் கல்லூரி டிப்ளோமா பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படுமெனவும் இதற்காக 7,500 பேர் நியமனங்களைப் பெறவுள்ளனர் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பௌதீக வளங்களோடு மனித வளத்தையும் பூர்த்தி செய்து பாடசாலை அமைப்பு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் நாட்டுக்கு சேவை செய்யும் ஒழுக்கமான மாணவர்களை உருவாக்குவது பாடசாலை நிர்வாகங்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம் பாடசாலை சீருடைப் பொருட்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை உணவுத்…
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதற்கட்டமாக வாடிக்கையாளர் கொடுப்பனவுகளுக்கான QR குறியீட்டு முறை அறிமுகம் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தலைமையில் கம்பஹா மீன்பிடி கூட்டுத்தாபன விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம் SLT Mobitel மற்றும் Lanka Qr உடன் இணைந்து அரசாங்க நிறுவனங்களை நவீன டிஜிட்டல் உலகிற்கு ஏற்றவாறு மேம்படுத்தும் புதிய வேலைத்திட்டத்துடன் இணைந்து இந்த புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளமை விசேட அம்சமாகும். இது ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பமாகும் என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த சில்வா இந்த வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பியல் நிஷாந்த;“அரசாங்க நிறுவனங்களை நவீன உலகிற்கு ஏற்றவாறு மேம்படுத்த ஜனாதிபதி அவர்கள் உத்தேசித்துள்ளார். நம் நாட்டின் அரசு நிறுவனங்களில் பல காலாவதியான முறைகள் இன்னும் செயல்பட்டு வருகின்றன. இந்த காரணங்களால் மோசடி மற்றும் ஊழல்…
இம்மாதம் கடந்த 7 நாட்களில் 334 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை 43,752 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொற்றுநோயியல் திணைக்களத்தின் தகவல்களின்படி, மேல் மாகாணத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ள 67 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன. கண்டி, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் டெங்கு மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சிறுவர்கள் மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும், பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் குழந்தை வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மழையுடன் இந்த நிலை அதிகரிக்கலாம் எனவும் பாடசாலை செல்லும் மாணவர்களில் கணிசமான வீதமானவர்கள் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் தேசிய…
சர்வதேச நிதி உடன்படிக்கைகள் தொடர்பான உலகளாவிய தலைவர்களின் உச்சிமாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது புதிய சர்வதேச நிதி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாடு இம்மாதம் 22, 23ம் திகதிகளில் பிரான்சில் நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டின் உயர்மட்ட கலந்துரையாடல் சபையில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சிகிச்சைக்காக வந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்தததாக கூறப்படும் வைத்தியரை கைது செய்ய சிறுவர் மற்றும் மகளிர் பணியக தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கம்பஹா – சியாம்பலாப்பே பிரதேசத்தில் அமைந்துள்ள வைத்திய நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் 42 வயதான பெண்ணொருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகளை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சீமெந்து உள்ளிட்ட கட்டட நிர்மாணத்துறைசார் பொருட்களின் விலையை 25 சதவீதத்தினால் குறைக்க வேண்டும் என நிர்மாணத்தறை வல்லுநர்கள் சபையின் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விலை குறைக்கப்படாமையால், உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பாரிய அளவில் இலாபம் ஈட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விலை அதிகரிப்பின் காரணமாக, தரமற்ற கம்பிகள் மற்றும் வர்ணப் பூச்சுகள் என்பன சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் நிஷாந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் மற்றும் பூனர் பகுதிகளில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 500 மெகாவாட் சூரிய மற்றும் காற்றாலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை அடுத்த ஆண்டு (2024) டிசம்பருக்குள் முடிக்க குறித்த நிறுவனம் நம்புவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதானி குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான .அனில் சர்தானா உள்ளிட்ட அதிகாரிகளுடன் திட்டம் மற்றும் அதன் பணிகளை தொடங்குவதற்கான முன்னேற்றம் குறித்தும், பிரச்சினைகள், சவால்கள் மற்றும் கட்டுமான நேரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலுத்த தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தன தனது இல்லத்தை விட்டு வெளியேறியுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நேற்று (13) தெரிய வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தனவுக்கு எதிராக மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமான வரியை செலுத்தத் தவறியதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சஜின் வாஸ் குணவர்தனவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது. அழைப்பாணையை கையளிப்பதற்காக பிரதிவாதியின் பொரளை வாசஸ்தலத்திற்கு சென்றிருந்த போதிலும், அவர் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்பான வேறு ஏதேனும் முகவரியை சமர்ப்பிக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.