உலகில் உள்ள ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடும் அந்த நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாகவே முன்னோக்கி வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். எனவே, 2048 ஆம் ஆண்டில் அபிவிருத்தியடைந்த நாடு என்ற இலக்குகளை அடைவதற்கு முறையான கல்வி முறைமை மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நாட்டிற்கு தேவை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை தயாரிப்பதற்கான அமைச்சர்கள் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் முதலாவது கலந்துரையாடலில் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டின் மனித வளத்தை சீரமைத்தல், கல்வி முறையின் மூலம் அறிவு, திறன் மற்றும் திறமைகளைக் கொண்ட பணியாளர்களை உருவாக்குதல் மற்றும் நாட்டை பிராந்திய கல்வி மையமாக மாற்றும் நோக்கத்துடன்,ஜனாதிபதியின் தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட ´கல்வித்துறை அமைச்சர் குழு´ நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட உபகுழு,…
Author: admin
அண்மைக்காலமாக இலங்கையர்களிடையே தோல் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஸ்ரீஆனி சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையர்களின் தோலின் நிறம் மற்றும் மெலனின் பாதுகாப்பினால் தோல் புற்றுநோய் ஏற்படுவது இயற்கையாகவே குறைவதாகவும் இருந்தாலும் சருமத்தை வெண்மையாக்க பலர் பயன்படுத்தும் சில மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திருமதி ஸ்ரீஆனி சமரவீர தெரிவித்தார். உரிய ஆலோசனையின்றி சில தைலங்கள் பயன்படுத்தப்படுவதும் இதற்குக் காரணம் எனத் தெரிவித்த வைத்தியர் மேலும் குறிப்பிடுகையில் சருமத்தை வெண்மையாக்க எந்த மருந்தையும், தைலத்தையும் விசாரணையின்றி பயன்படுத்தும் போக்கு நாட்டில் காணப்படுகின்றதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
நாட்டில், குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், காவல்துறை தடுப்பில் உள்ள போது, சந்தேகத்துக்குரியவர்கள் உயிரிழந்த சம்பவங்களும் பதிவானதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய ஒருவரை கைது செய்து தடுத்து வைத்திருக்கும் போது, தேவையற்ற அச்சுறுத்தலை விடுக்க எவருக்கும் சட்டத்தில் இடம் இல்லை. இந்தநிலையில், தற்போது அதிகரித்துள்ள குற்றச்செயல்களை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கண்டி – மெனிக்ஹின்ன பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வயல் நிலமொன்றிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெடிப்பிற்காக பயன்படுத்தப்படும் உபகரணமொன்றை பயன்படுத்தி, குறித்த நபர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர். சம்பவத்தில் மெனிக்ஹின்ன – கல்கடுவ பகுதியைச் சேர்ந்த 36 வயதான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வலுவிழந்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை விலையாக 335 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதன் கொள்முதல் விலை 315 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அனுமதி பெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மாறுப்பட்ட விதத்தில் இன்று பெறுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கை வங்கி :- கொள்முதல் விலை – 315.00, விற்பனை விலை – 335.00 மக்கள் வங்கி :- கொள்முதல் விலை – 313.46, விற்பனை விலை – 328.20 சம்பத் வங்கி :- கொள்முதல் விலை – 311.28, விற்பனை விலை – 328.00 ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) :- கொள்முதல் விலை – 313.00, விற்பனை விலை – 330.00 NDB :- கொள்முதல் விலை – 307.00, விற்பனை விலை – 327.00
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பொறுப்பில் இருந்து இலங்கை இராணுவத்தை நீக்குவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது அச்சிடப்பட வேண்டிய சுமார் எட்டு லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தேங்கிக் கிடப்பதோடு, போதிய அச்சு இயந்திரங்கள் இல்லாத காரணத்தினால், இந்தப் பொறுப்பை தனியார் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தின் பரிந்துரையின் பேரில், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். இதனால், மூன்று மாதங்களுக்குள், எட்டு லட்சம் ஓட்டுனர் உரிமங்களை அச்சடித்து, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பொறுப்பு இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வாகன இறக்குமதிக்கு அனுமதியினை வழங்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சி கோரிக்கை விடுத்துள்ளார். ஜப்பானில் இருந்து டொலர் செலவின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் திறன் தமது சங்கத்திற்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, ஜப்பானில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்து புதிய வாகனத்திற்கு 70% குறைவாக செலுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இந்நிலையில், பரீட்சை குறித்த விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 06 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளில் மீண்டும் மலேரியா அச்சுறுத்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் (Anopheles stephens) என்ற நுளம்புகளின் தாக்கம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பாறை மாவட்டத்திலுள்ள, அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை மற்றும் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை மருத்துவ அதிகாரி பிரிவிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை 2016 டிசம்பர் முதல் 2017 ஏப்ரல் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் 2016 ஆம் ஆண்டு மன்னாரிலும் அதன் பின்னர் வடமாகாணத்தின் யாழ், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் முதன்முதலில் மலேரியாவை பரப்பும் நுளம்புகள் கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் 51 பிராந்திய செயலாளர்களை பயன்படுத்தி கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று(15) முதல் ஆரம்பமாகவுள்ளது. இணையவழி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஹோமாகம பிரதேச செயலகத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். இலங்கையில் அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியின் ஒரு பகுதியாகவே இணையவழி கடவுச்சீட்டு விண்ணப்ப முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய செயல்முறையானது கடவுச்சீட்டு விண்ணப்ப செயல்முறையை சீர்செய்வதையும், கூரியர் சேவை மூலம் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு மூன்று நாட்களுக்குள் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. www.immigration.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று, ‘கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கவும்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, வழங்கப்பட்ட தகவலைச் சரிபார்ப்பதன் மூலம் தனிநபர்கள் தங்கள் வீட்டிலிருந்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கொழும்புக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் வசதியை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. திணைக்களம்…