பாடசாலை மாணவர்கள் இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்ததாகவும், அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. விபத்தில் காயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு மாணவர்கள் திக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முன்னால் பயணித்த மாணவர் உயிரிழந்துள்ளார். திக்வெல்ல, கொண்டெனிய பிரதேசத்தில் வசிக்கும் 13 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய மாணவர் மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் நடத்திய விசாரணையில் சைக்கிளின் பிரேக் பிடிக்காததால் விபத்து நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.
Author: admin
இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில், நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த ‘ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் இந்தியா சார்பில் 3 பிரிவுகளில் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ’ஷியாம் சிங்கா ராய்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடியை கருத்தில் கொண்டு அவசர உணவு மற்றும் மருந்துதேவைகளிற்கு உதவுவதற்காக 25 பில்லியன் டொலர்களை அவுஸ்திரேலியா வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரும் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக்கிற்கான அமைச்சரும் இணைந்து இதனை அறிவித்துள்ளனர். இந்த சவாலான தருணத்தில் அவுஸ்திரேலியா இலங்கை மக்களுடன் இணைந்திருக்கின்றது குறிப்பாக கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மக்களுடன் என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்த மேலதிக உதவியை தொடர்ந்து அவுஸ்திரேலியா இதுவரை 75 மில்லியன் டொலர் உதவியை வழங்கியுள்ளது. எங்களின் உதவி உணவு ,சுகாதாரம் , போசாக்கு, பாதுகாப்பான குடிநீர் , பெண்கள், குழந்தைகள் உட்பட ஆபத்தான நிலையில் உள்ளவர்களிற்கான அவசிய உதவி போன்றவற்றை ஐநா அமைப்புகளின் ஊடாக வழங்கும் என அவுஸ்திரேலிய தெரிவித்துள்ளது.
வட மத்திய மாகாண சபை பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல் – 2022 Total Vacancies: 1993 Medium: Sinhala, Tamil & English Details: https://tamilguru.lk/recruitment-for-north-central-province-graduate-teaching-vacancies-2022/ (Closing Date: 2022-09-09)
மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பங்குகளும் விற்கப்படும். அத்துடன் மத்தள விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் விமானப் போக்குவரத்து செயல்முறையை மறுசீரமைக்கும் போது அந்நிய செலாவணியை ஈட்டும் வகையில் விமான நிலையம் மாற்றப்பட வேண்டும்.
கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று (18) போராட்டம் ஒன்றை நடத்தியது. இந்த போராட்டத்தின் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன், சுமார் 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைக்கழகங்களை உடனடியாகத் திறக்குமாறும், மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் வழங்குமாறும் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. எவ்வாறாயினும், போராட்டத்தை தாக்குதல் மூலம் கலைத்தமை மிகவும் ஜனநாயக விரோத செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ள அவர் இது குறித்து தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், “நிராயுதபாணியான பல்கலைக்கழக மாணவர்களின் அமைதி போராட்டத்தை தாக்கி விரட்டுவதற்கு ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய காவல்துறை மற்றும் அதிரடிப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டமையானது ஒரு நாட்டில் ஜனநாயக ஆட்சி இல்லை என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த மே 9 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைதியான மற்றும் அகிம்சை வழியிலான போராட்டத்தின்…
மதுபோதையில் தனது நண்பர்களுடன் பின்லாந்தின் பெண் பிரதமர் சன்னா மரீன் நடனமாடும் வீடியோ வெளியானதால், பிரதமர் பதவிக்கு அவமரியாதையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டுள்ளார் என அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பும் , விமர்சனங்களும் கிளம்பியுள்ளது. சர்ச்சையை தொடர்ந்து பிரதமர் சன்னா மரீன் அதற்கான விளக்கம் அளிக்கையில், “நான் போதைப்பொருளையோ, மதுவைத் தவிர வேறு எதையும் பயன்படுத்தவில்லை. நான் நடனமாடினேன், பாடினேன், பார்ட்டி செய்தேன், சட்டப்படியான விஷயங்களைச் செய்திருக்கிறேன். எனக்கு ஒரு குடும்ப வாழ்க்கை உள்ளது, எனக்கு ஒரு வேலை வாழ்க்கை உள்ளது மற்றும் எனது நண்பர்களுடன் செலவிட எனக்கு ஓய்வு நேரம் உள்ளது. என் வயதுடைய பலரைப் போலவே நான் எனது வாழ்க்கையை தீர்மானித்து வைத்துள்ளேன் அதன்படியே வாழ்ந்தும் வருகின்றேன் இதனை நீங்கள் ஏற்பீர்கள் என்றும் நம்புகின்றேன்”என அவர் கூறினார்.
ரஷ்ய நாட்டில் 10 குழந்தைகள் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு , ‘அன்னை நாயகி’ என்ற சோவியத் கால பட்டம் வழங்கப்பட்டு குழந்தைக்கு 1 வயது ஆனவுடன் 1 மில்லியன் ரொக்கப்பரிசு வழங்கப்படும் – ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு
ஒமிக்ரோன் வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இரண்டாவது நாளில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுங்கள். இவ்வாறான நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு ரெபிட் என்டிஜென் பரிசோதனை அல்லது டெங்கு என்டிஜென் பரிசோதனை ஒன்றை மேற்கொள்வது அவசியம். மேலும், காய்ச்சல் ஏற்பட்டு வீட்டில் இருக்கும் நிலைமையில், பரசிட்டமோலை மாத்திரம் கொடுப்பது சிறந்தது. அத்துடன், அவர்களை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன வலியுறுத்தியுள்ளார்.
2021 இல் தவறிய G. C. E. உயர்தர செயல்முறை பரீட்சை வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான நடைமுறைப் பரீட்சைகள் சனி (20) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (21) ஆகிய இரு தினங்களிலும் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார். எரிபொருள் நெருக்கடி மற்றும் பிரச்சினைக்குரிய நிலைமைகள் காரணமாக மாணவர்கள் நடைமுறைப் பரீட்சைக்குத் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தர்மசேன தெரிவித்தார். உரிய பரீட்சைகள் நிறைவடைந்து உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மூன்றாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நாளை (20) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன அறிவித்துள்ளார். 2022 G.C.E உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு ஒகஸ்ட் 26 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.