அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை 60ஆக குறைக்கும் யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னதாக குறித்த வயதெல்லை 65ஆக அதிகரிக்கப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், ஓய்வூதிய வயதெல்லையில் திருத்தம் மேற்கொள்வதன் ஊடாக அரச துறையில் ஏற்பட்டுள்ள தொழில்வாய்ப்பு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமெனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார். நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
Author: admin
பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (VAT) 15ஆக உயரும் எனவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இடைக்கால வரவு செலவுத் திட்ட உரையிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் ஆற்றிவரும் இடைக்கால வரவு-செலவுத்திட்ட உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனடிப்படையில், 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நிகழ்த்தவுள்ளார். 2022 ஆம் ஆண்டின் எஞ்சிய காலத்திற்கான இந்த ஒதுக்கீட்டு சட்டமூலம் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் திருத்தமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை(31) முதல் எதிர்வரும் 02ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
புகையிரத பராமரிப்புக்கு தேவையான உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு காரணமாக நேற்று (29) முதல் மறு அறிவித்தல் வரை பல புகையிரதங்களின் சேவைகளை புகையிரத திணைக்களம் இரத்து செய்துள்ளது. புகையிரதங்களின் பராமரிப்புக்கு தேவையான உதிரிப் பாகங்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் மலையக புகையிரத மார்க்கம், களனிவெளி புகையிரத மார்க்கம் மற்றும் கரையோர புகையிரத மார்க்கத்தில் ஈடுபடும் பல புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் . இரத்து செய்யப்பட்ட புகையிரதங்களில் அளுத்கம, அம்பேபுஸ்ஸ, கொழும்பு கோட்டை மற்றும் ஹோமாகம புகையிரத நிலையங்களுக்கு இடையில் இயங்கும் தலா இரண்டு புகையிரதங்களும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புகையிரதங்களில் பயணிகள் புகையிரதங்கள் மற்றும் அலுவலக புகையிரதங்கள் உள்ளடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், உரிய உதிரிபாகங்களை கொள்வனவு செய்து, புகையிரதங்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் பௌசர்களின் எண்ணிக்கை 100 ஆக குறைவடைந்துள்ளன. இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக எரிபொருள் விநியோகத்திற்காக சுமார் 350 முதல் 400 பௌசர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானதொரு பின்னணியிலேயே நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் எரிபொருள் வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியும் பங்களாதேஷ் அணியும் மோதவுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு சார்ஜா மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. குழு ‘பி’ பிரிவில் நடைபெறவுள்ள இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு மொஹமட் நபியும் பங்களாதேஷ் அணிக்கு சகிப் அல் ஹசனும் தலைமை தாங்கவுள்ளனர். கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றினால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு சதொச நிறுவன ஊழியர்களை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 11 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக பிரதிவாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட பிரதிவாதிகள் மூவரையும் தலா 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் அடங்கலான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்க மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், விசாரணையின் முடியும் வரை அவர்களுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தவிர சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மற்றும் அதன் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான மொஹமட் சாகிர் ஆகியோர் இந்த…
உள்ளூர் சபைகளின் புதிய சம்பள சலுகையை நிராகரித்த பிறகு, வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடரப் போவதாக தொழிற்சங்கங்கள் உறுதி செய்துள்ளன. யுனைட் மற்றும் ஜிஎம்பி இரண்டும் கோஸ்லா சலுகையை நிராகரித்தன, தொழிற்சங்கங்களின் பதிலிலால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கோஸ்லா கூறியது. அதே நேரத்தில் ஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய உள்ளூர் சபை யூனியனான யூனிசன், சலுகையை உறுப்பினர்களுக்கு வழங்குவதாகக் கூறியது. பல நாட்கள் துப்பரவு தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு பல நகரங்கள் மற்றும் நகர மையங்களில் குப்பைகள் குவிந்துள்ளன. இந்த சர்ச்சையானது ஸ்கொட்லாந்தின் மூன்றில் இரண்டு பங்கு உள்ளூர் சபைகளில் மோதல் நடவடிக்கைக்கு வழிவகுத்தது மற்றும் அடுத்த வாரம் பாடசாலைகள் மற்றும் ஆரம்ப பாடசாலைகள் மூட உள்ளது. இங்கிலாந்தில் உள்ள உள்ளூர் சபை ஊழியர்களுக்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தைப் போன்றே உள்ளூராட்சி அமைப்பிடம் இருந்து தொழிற்சங்கங்கள் ஒரு ஒப்பந்தத்தை கோரி வருகின்ற. இதில் 1,925 பவுண்டுகள் நிர்ணய ஊதிய உயர்வு அடங்கும்.
புதிதாகப் பதிவு செய்வதற்கு 79 அரசியல் கட்சிகள் விண்ணப்பங்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த 79 விண்ணப்பங்களில் 35 விண்ணப்பங்கள் முறையாகப் பூர்த்தி செய்யப்படாததால் நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 44 கட்சிகளின் விண்ணப்பங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் 79 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஏற்கனவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.