இலங்கையிலிருந்து டுபாய் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஓமான் நாட்டில் தாங்கள் அடிமைகளாக விற்கப்பட்டுள்ளதாகவும் தங்களை மீட்டெடுக்குமாறும் கோரி, ஓமானிலிருந்து 150க்கும் மேற்பட்ட பெண்கள் அவலக் குரல் எழுப்பி மன்றாடியுள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக பாதிக்கப்பட்டு நிர்க்கதி நிலையில் உள்ளதாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண்கள் அங்கிருந்து தகவல்களை அனுப்பி வைத்துள்ளதுடன், காணொளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களால் வெளியிடப்பட்ட தகவல்களில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் பெண்கள் ஜனாதிபதியிடம் உருக்கமாக இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். அதில் அவர்கள் தெரிவிப்பதாவது, ஓமான் நாட்டில் நிர்க்கதியாகிய நிலையில் இலங்கைக்கு திரும்ப முடியாமல் தினமும் கண்ணீருடன் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் இலங்கைப் பெண்கள் 150 பேரின் துயரக் கதையை இதனூடாக இலங்கை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் தூதரகங்களுக்கும் அறிவிக்கிறோம். இலங்கையிலுள்ள முகவரும் இங்கே ஓமான் நாட்டிலுள்ள முகவரும் எங்களை ஏமாற்றி சுற்றுலா விசாவில் அழைத்து வந்து எங்களை இங்கே ஓமானில் விற்று விட்டார்கள். இதனால் நாங்கள்…
Author: admin
குஜராத் மோர்பி பாலம் இடிந்து விழுந்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலத்தை சீரமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் (இந்திய ரூபா) ரூ.12 இலட்சம் மாத்திரம் செலவிடப்பட்டமை அம்பலமாகியுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு இடிந்து விழுந்ததில் 135 பேர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக, குஜராத்தைச் சேர்ந்த ஓரேவா நிறுவனம் பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பாலத்தை சீரமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.2 கோடியில் (இந்திய ரூபா) ரூ.12 இலட்சம் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த தொங்கு பாலத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டவர் அதனை சரிவர செய்யாமல் ஏமாற்றிய விவரம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த பாலம் 1879-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாகும். சுமார் 230 மீட்டர் நீளம்…
விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளில் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்தின் பிரதான பொறியியலாளர் இன்று (05) அறிவித்துள்ளார். எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(எஸ்.எம்.எம்.றம்ஸான், எம்.அலி ஜமாயில்) கல்முனை மஷ்ஹுரா தைக்கா பள்ளி வாசலில் வருடாந்தம் ஷெய்யிதினா யூசூப் ஒலி நாயகமவர்களின் நினைவாக நடாத்தப்பட்டு வரும் 80வது வருடாந்த கந்தூரி (அன்னதானம்) வைபவமும் மற்றும் மௌலித் மனாக்கிப் மஜிலிஸும் இன்று இடம் பெற்றது. இந் நிகழ்வு மௌலானா மௌலவி அஷ்-ஷெய்யித் அல்ஹாஜ் மஸ்ஹுர் தங்கள் அர்ரிபாயி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலமாக்களும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இன் நிகழ்வில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லருள் வேண்டிவிஷேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் 2022 ஆண்டிற்கான பரிசோதனை பொலிஸ் நிலையத்தில் இன்று இடம்பெற்றது. சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்னாயக்க கலந்து கொண்டு பொலிஸ் நிலையத்தை பார்வையிட்டார். மேலும் பொலிஸாரால் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொலிஸ் சேவை பிரிவு நிலையங்கள், சுற்று சூழல் ,பொலிஸ்உத்தியோகத்தர்களின் தங்குமிட அறைகளை பார்வையிட்டதுடன், பொலிஸார் பயன்படுத்தும் வாகனங்களையும் பரிசோதனை மேற்கொண்டார்.
ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரை நீக்க நடவடிக்கைகள் எலான் மஸ்க்கினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி, உலகம் முழுவதும் ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 7. 500 பேரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை நேற்று ஒரேநாளில் பணிநீக்கம் செய்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ட்விட்டரில் பணி நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், ட்விட்டரில் ஊழியர்கள் குறைப்பு தொடர்பாக, துரதிஷ்டவசமாக நிறுவனம் ஒருநாளைக்கு 32 கோடி இந்திய ரூபாயை இழக்கும் போது வேறுவழியில்லை. நிறுவனத்தை விட்டு வெளியேறும் அனைவருக்கும் 3 மாத ஊதியம் வழங்கப்படும், அது சட்டப்பூர்வமான அனுமதி அளவை விட 50 சதவிகிதம் அதிகமாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.
சிலி நாட்டில் செய்தியாளர் ஒருவர் காதில் இயர் போன் மாlட்டிக் கொண்டு செய்தியை நேரலையில் அறிவித்துக் கொண்டிருந்த போது, எங்கிருந்தோ வந்த கிளி ஒன்று செய்தியாளரின் இயர்போனை திருடிய சம்பவம் வேடிக்கையாக மாறியது. நிகோலஸ் கிரம் என்ற செய்தியாளரின் தோள் மீது அமர்ந்த அந்த கிளி, அவரது ஒரு காதில் இருந்த இயர்போனை எடுத்துக் கொண்டு பறந்து சென்றது. நேரலையில் பதிவான இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிசை நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில், ஈரப்பெரியகுளம் பகுதியில் தடம் புரண்டுள்ளது. இதன்காரணமாக வடக்கு ரயில் மார்க்கத்தில் மதவாச்சி சந்திக்கும் வவுனியாவுக்கும் இடையில் ரயில் சேவை தடைப்பட்டுள்ளது. இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், ரயில் என்ஜின் மற்றும் அதை ஒட்டிய இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில் பாதைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் எதிர்வரும் 14 ஆம் திகதி அதிதிகளுக்கான சம்பிரதாயபூர்வ தேநீர் உபசாரம் இம்முறை நடைபெறமாட்டாது. வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட விசேட அதிதிகளுக்காக வழமையாக சம்பிரதாயபூர்வமாக நடத்தப்படும் தேநீர் விருந்துபசாரத்தை இம்முறை நடத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையை கவனத்திற் கொண்டே ஜனாதிபதி இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதிஅடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து வரவு செலவுத் திட்ட விசேட உரையை ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இருந்து சென்னைக்கு சூட்கேசுக்குள் மறைத்து நூதன முறையில் கடத்திச் சென்ற ரூ.46 இலட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 38 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க திணைக்கள அதிகாரிகள், குறித்த சம்பவத்துடன் தொர்புடைய இலங்கை இளைஞரை கைது செய்தனர். சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க திணைக்கள அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதன்போது சுங்க திணைக்கள அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது கொழும்பில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த இளைஞரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை செய்யதனர். இதன்போது அதிகாரிகளிடம் அவர், முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை. அதே நேரத்தில் அவரிடம் இருந்த டிராலி சூட்கேசில் ஜிப் பகுதியில் தையல் போடப்பட்டதுபோல் இருந்தது.…