Author: admin

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நெல் ஆலை உரிமையாளர்கள் பதிவு செய்யும் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான வேலைத்திட்டத்தை பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்குமாறு அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முறையாக நெல் கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய ஆலை உரிமையாளர்கள் பதிவு இடம்பெறும் என நெல் சந்தைப்படுத்தல் சபையின் பேச்சாளர் தெரிவித்தார். எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு அதற்கான பதிவு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

Read More

வென்னப்புவ, பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பன்னல, மாகந்துர பகுதியில் உள்ள தனியார் வகுப்பு மாணவர்கள் 80 பேர் அந்த பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாணவர்கள் குழு ஒன்று நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, ​​குறித்த மாணவர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தலங்காவ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே உயிரிழந்துள்ளார். சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

ஹட்டன் – நுவரெலியா வீதியில் குடாகம பகுதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை நுகேகொடையில் இருந்த வெலிமடை நோக்கி வந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்துள்ள நிலையில் எவருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமும், வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையும் விபத்துக்கு காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்டனுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இலங்கை மற்றும் அமெரிக்காவுடனான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Read More

மின் கட்டணம் கடந்த ஓகஸ்ட் மாதம் 75 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டமையால், மின்சார பாவனை குறைவடைந்துள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீளவும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்கு, தங்களது சங்கம் எதிர்ப்பு வெளியிடுவதாக, அதன் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.

Read More

ரஷ்யாவிடமிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மசகு எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம் அதியுயர் விலையை நிர்ணயம் செய்துள்ளது. ஒரு பீப்பாய் 60 டொலர் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர்த் தொடுத்த ரஷ்யாவை தண்டிக்கும் வகையில் மிகவும் குறைந்த விலைக்கு மசகு எண்ணெய் வாங்க ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் செய்துள்ளது. இது தொடர்பாக ஜி 7 நாடுகள் அமைப்பின் முடிவில் ஐரோப்பிய ஒன்றியமும் தன்னை இணைத்துக் கொண்டது. திங்கட்கிழமை முதல் இந்த விலை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Read More

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனா ஆதரவளிக்கத் தவறினால், சீனாவை வீட்டுக்கு போ என்ற கோசத்துக்கு தலைமையேற்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வாவுக்கும் இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா உதவவில்லை என்றும் அதற்கு பதிலாக சீனா, தொடர்ந்தும் இலங்கையை கடன் பொறிக்குள் வைத்திருக்கவே முயற்சிப்பதாகவும் சாணக்கியன் இதன்போது குற்றம் சுமத்தினார். தாம் அண்மையில் இது தொடர்பாக நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு கொழும்பில் உள்ள சீனத்தூதரக பேச்சாளர் டுவிட்டரில் பதில் வழங்கியுள்ளதாகவும் இது, இலங்கை மக்களின் இறைமைக்கு எதிரான செயலாகும் என்று சாணக்கியன் குறிப்பிட்டார். எனவே சீனாவின் இந்த செயற்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்றும் இதனை விடுத்து 22 மில்லியன் இலங்கை மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமானால்,…

Read More

மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி மனிதர்கள் மத்தியில் சோதனை செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மூளைக்குள் சிப்பை பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் வகையில் இந்த பரிசோதனையை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்த அவர், அந்த சிப்களில் ஒன்றை தானே செலுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட உள்ளது. அதன்மூலம், மனதில் நினைப்பதை கணினி மூலம் செயற்படுத்த முடியும். இந்த பரிசோதனை முயற்சிக்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, தங்களை அனுமதிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார். எலான் மஸ்கின் நிறுவனமான நியூரோலிங்க் இதனை மேற்கொள்கிறது. இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூரோலிங்க் நிறுவனம் சோதனை தொடங்கும். மனிதர்கள் மத்தியில் இந்த சோதனையை மேற்கொள்வதில் மிகுந்த…

Read More

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக இலங்கை கணினி சங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சுமார் 10,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் தமித் ஹெட்டிஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More