வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 9 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.கே.ரத்நாயக்கே தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தின் சீரற்ற காலநிலை தொடர்பாக இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Author: admin
பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று பால்மா விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, பால்மா பொதி ஒன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்புடன் 400 கிராம் பால்மா ஒன்றின் புதிய விலை 1,240 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பால்மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என உள்நாட்டு பால்மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ள நாட்டு மக்களுக்கான நலன்புரி சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இராணுவத்தின் உயர் அதிகாரிகளின் சீறுடை பிரான்ஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ‘சர்வஜன நீதி’ ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 410 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இராணுவ சிப்பாய்களின் நலனுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஆனால் ஒதுக்கப்படும் நிதி உண்மையில் இராணுவ சிப்பாய்களை சென்றடைகிறதா என்பதை ஆராய வேண்டும். நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ள நாட்டு மக்களுக்கான நலன்புரி சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.ஆனால் இராணுவத்தின் உயர் அதிகாரிகளின் சீருடை பிரான்ஸ் நாட்டில் இறக்குமதி செய்யப்படப்படுகிறது. இராணுவ உயர் அதிகாரிகளின்…
மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை மின்சார சபை 152 பில்லியன் ரூபாய் நட்டமடைய உள்ளதாகவும் 2013ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 300 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அரசாங்கத்துக்கென வருமானம் இல்லாத நிலையில் இந்த பாரிய நிதியை எவ்வாறுப் பெற்றுக்கொள்ள, ஒரே தீர்வு மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது மட்டுமே என அவர் சுட்டிக்காட்டினார். மின்கட்டணத்தை அதிகரிக்காது மின்சாரத் துண்டிப்புகளுக்கு செல்லலாம் என்ற போதிலும், அதில் தனக்கு உடன்பாடு இல்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.
(சர்ஜுன் லாபீர்,எம்.என்.எம் அப் ராஸ்) கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் உயர்தர மாணவர் தின நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம் பைசால் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மெடிலேன் வைத்தியசாலையின் பணிப்பாளரும்,கல்முனை முஹைத்தின் ஜும்மா பள்ளி மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளர் பிரபல வளவாளர் வை. ஹபிபுல்லா கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் சிறப்பு அதிதிகளாக பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ அஸ்தர்,எம்.ஏ சலாம்,ஈ.றினோஸ்,பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி,கல்முனை பிரிலியன் விளையாட்டு கழகத் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம் பழீல் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் இதன் போது…
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மெண்டௌஸ் சூறாவளியினால் இந்தியாவில் இருந்து தூசுத் துணிக்கைகள் அதிகளவில் நாட்டில் சூழ்ந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில், அதிக குளிருடனான வானிலை நிலவுகின்றது. இந்த நிலையில், நாடளாவிய ரீதியில், 60 சுற்றுப்புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக, அதிகார சபைத் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே தெரிவித்துள்ளார். சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் நாட்டின் வளிமண்டலத்தில், அதிகளவான தூசுத் துகள்கள் நேற்றைய தினம் படிந்ததாக மத்திய சுற்றாடல் அதிகாரச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிலவும் காலநிலை காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளுக்கு நாளை (09) சிறப்பு பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எதிராக 80 வாக்குகளும் ஆதரவாக 123 வாக்குகளும் செலுத்தப்பட்டன.
(கல்முனை நிருபர்) தரம் ஐந்து புலமை பரீட்சை எழுதும் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் முகமாக கல்முனை இ்-பெஸ்ட் (E -best)கல்வி நிறுவனத்தின்அனுசரணையில் புலமைப்பரிசில் (இவ்வாண்டு 2022) எழுதும் மாணவர்களுக்கான இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் இன்று(08)வழங்கி வைக்கப்பட்டது. கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவர் எம்.என்.எம்.அப்ராஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில்,கல்முனை கல்வி வலயத்தில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திற்க்கு இ்-பெஸ்ட்(E -best) கல்வி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பி.எம்.எம்.ஜவ்பர் அவர்களினால் புலமைப்பரிசில் இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் பாடசாலை அதிபர் எம். ஐ.அப்துல் ரசாக் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை (வெள்ளிக்கிழமை) பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர், சரா.புவனேஸ்வரன் கல்வி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அக் கடிதத்தில் தெரிவருவதாவது ” நாடு முழுவதும் வளிமண்டலம் மோசமாக உள்ளது. மலையக பிரதேசங்களில் சூறாவளியுடன் குளிந்த காலநிலைய மாறியுள்ளது வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மிகையான குளிருடன் மழையும், அச்சுறுத்தலான தூசுகள் நிறைந்த காற்றும் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் நாளை பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு போக்குவரத்து என்பவற்றில் கவனம் செலுத்தி பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக அவசர தீர்மானம் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என தமிழர் ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளனர்.