Author: admin

இலங்கையில் கையடக்க தொலைபேசிகள் உட்பட 31,382,000 தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. இந்நாட்டின் மக்கள் தொகை தோராயமாக இரண்டு கோடியே இருபத்தொரு இலட்சத்து எண்பதாயிரம். இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 2022 ஆண்டு அறிக்கையின்படி, நாட்டில் நூறு (100) பேர் பயன்படுத்தும் தரைவழி தொலைபேசிகளின் எண்ணிக்கை 12 ஆகும். இது மொத்த தொகையில் தோராயமாக 2,652,000 ஆகும். மொபைல் போன்கள் உட்பட 100 பேர் பயன்படுத்தும் போன்களின் எண்ணிக்கை 142. இணைய அடர்த்தி நூறு பேருக்கு 97.7. கடந்த ஆண்டு (2022) டிஜிட்டல் தர வாழ்க்கைச் (Digital Quality Life) சுட்டெண்ணின் படி, இலங்கை 117 நாடுகளில் 89 வது இடத்தைப் பிடித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Read More

எரிபொருள் விநியோகத்துக்காகப் பேணப்படும் QR குறியீட்டு முறைமை விரைவில் நீக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் பணிக்குழாம் தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். எரிபொருள் விநியோகம் தற்போது சீரடைந்துள்ளது. பொருளாதார ஸ்திர நிலையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தநிலையில் விரைவில் QR குறியீட்டு முறைமை இன்றி, சுதந்திரமாக மக்கள் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Read More

தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த வாரத்திற்குள் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Read More

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கூற்றுப்படி, நாட்டில் தினசரி கொவிட்-19 நோயாளிகள் மீண்டும் நிகழ்வது குறித்து சுகாதார அமைச்சு முறையான விசாரணையை நடத்த வேண்டும். இந்த நாட்களில் நாளாந்தம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொவிட் நோயாளர்கள் பதிவாகி வருவதாக அதன் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில நாட்களில் தினமும் கிட்டத்தட்ட 05 கொவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தவிர, கடந்த 03 நாட்களில் கொவிட் காரணமாக 02 இறப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நாட்களில் தற்போதைய சுவாச நோய் நிலைமையுடன் இந்த கொவிட் நோயாளிகளை பதிவு செய்வது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டும் என்று வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்;“.. கடந்த சில நாட்களாக தினசரி கொவிட் நோயாளிகள் பதிவாகும் சூழ்நிலை உள்ளது. குறிப்பாக, யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இது பதிவாகியுள்ளது. கொவிட் மரணமும்…

Read More

மே 12 ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவுக்குள் வருவோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. எனவே ‘கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஃபெடரல் ஊழியர்கள், சர்வதேச பயணிகள் ஆகியோருக்கு மே 11 ஆம் திகதியில் இருந்து நீக்குகிறோம். இதே நாளில் இருந்து கொரோனா வைரஸ் பொது சுகாதார எச்சரிக்கை காலமும் முடிவுக்கு வரும்,’ என்று வெள்ளை மாளிகை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘ஜனவரி 2021 ஆம் ஆண்டில் இருந்து கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் உயிரிழப்போர் எண்ணிக்கை 95 சதவீதம் வரை சரிந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 91 சதவீதம் வரை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.…

Read More

சில போலி /மோசடி இணைய URLகள் மூலமாக இந்திய இ-விசாவை (E-Visa) வழங்குவது கவனிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் அறிவித்துள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்திய இ-விசாவைப் பெறுவதற்கு இந்தப் போலி URLகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

Read More

பாடசாலை மாணவர்களுக்கான பாலியல் கல்வி தொடர்பாக, ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் நிகழ்வு இந்த வருடத்திலிருந்து தேசிய கல்வியியற் கல்லூரிகளில் ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்பள்ளி பருவத்திலிருந்து பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என சிறுவர்களுக்கான நாடாளுமன்ற குழு பரிந்துரைத்திருந்ததாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாலியல் கல்வி தொடர்பான பாடத் திட்டம் உள்ள புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க விசேட பயிற்சிகளை வழங்குவதற்கு, அவசியம் ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Read More

கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் ஏப்ரல் மாதம் மாத்திரம் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 4300 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் எஸ்.அருள்குமரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோய் பரவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். *மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,* அதிகூடிய டெங்கு நோயாளர்கள் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மரணமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மரணமும் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது கிழக்கு மாகாணத்தில் இந்த வருடம் முதல் நான்கு மாதங்களிலும் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். கடந்த ஏப்ரல் மாதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மரணம், திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மரணம் உட்பட இரண்டு மரணங்களும் 4300 இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1800 இற்கும் மேற்பட்ட…

Read More

# பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் • அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை…

Read More

புனேவில் நேற்று நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை அந்நாட்டு பொலிஸார் தடுத்து நிறுத்திய வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் திறந்தவெளியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சினிமா லைட்மேன்களுக்கு நிதி திரட்டுவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மாலை முதல் நடந்து வந்த இந்த இசை நிகழ்ச்சி இரவு 10 மணியை நெருங்கியதும் பொலிஸ் அதிகாரி உடனடியாக இசைப்பதை நிறுத்துமாறு கூறினார். இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் கூட்டத்தினிடையே சலசலப்பு நிலவியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More