கொழும்பு நகர் உள்ளிட்ட பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைதல் மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, நாட்டின் பல பிரதேசங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 150 முதல் 200 புள்ளிகளாக காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலையும் இதற்கு காரணம் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் வளி மாசுபாடு முகாமைத்துவ பிரிவின் தலைமை ஆய்வாளர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
அர்ஜென்டினாவின் துணை ஜனாதிபதியாக கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும், கிறிஸ்டினா பெர்னாண்டஸ். கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை அந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்துள்ளார். ஜனாதிபதியாக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், பொதுப்பணிக்கான ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாகவும் கிறிஸ்டினா மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா திட்டவட்டமாக மறுத்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி கிறிஸ்டினாவை குற்றவாளியாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் கிறிஸ்டினா பொது பதவிகளை வகிக்க வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.…
2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரில் நேற்று இரவு இடம்பெற்ற நான்காவது போட்டி Kandy Falcons அணி அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Galle Gladiators அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய Galle Gladiators அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் மொவின் சுமசிங்க அதிகபட்சமாக 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் Carlos Brathwaite 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதனடிப்படையில் Kandy Falcons அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Kandy Falcons அணி 15 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் Kandy Falcons அணி சார்ப்பில் கமிந்து மென்டிஸ் 44 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். போட்டித் தொடரின் இறுதிப் போட்டி டிசம்பர்…
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள மன்ரேசா ரயில் நிலையத்தை நோக்கி நேற்று காலை பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராதவிதமாக ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 155 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு யாரும் பெரிய காயங்கள் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் (திருகோணமலைக்கு கிழக்காக 500 கிலோ மீட்டர் தூரத்தில்) நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கமானது மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் அது மேலும் வலுவடைந்து நேற்று மாலையளவில் ஒரு சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்பட்டது. இத் தொகுதியானது இன்று காலை அளவில் தென்மேற்குவங்காள விரிகுடா கடற்பரப்பில் வடதமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் தென் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை அடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும்…
கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 50 வயதுடைய தனியார் வங்கி முகாமையாளர் ஒருவரை கைது செய்துள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். அத்தோடு, சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி உயிரிழந்துள்ளதாகவும் அவர் 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுமி கொழும்பை அண்மித்த பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், குறித்த சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2023 ஜனவரி மாதம் முதல் காகிதமில்லா கட்டண பட்டியல் மற்றும் பற்றுச்சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் பிரதேச பொது முகாமையாளர்கள் மற்றும் ஏனைய பொது முகாமையாளர்களுடன் இணைய வழியில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர், தனது டுவிட்டரில் இன்று (07) தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் செலவினங்களைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், இலங்கை மின்சார சபைக்கான புதிய தலைமையகத்தின் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். மேலும், தெருவிளக்குகள் பொருத்துதல், தெருவிளக்குகளை இயக்குதல் ஆகியவற்றை முறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சபையால் செய்ய முடியாத வெளிச் சேவைகளை உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது தொடர்பான மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம் ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்தமையினால், கடந்த 2022 மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக, வர்த்தக பொருள் ஏற்றுமதி வருவாய் ஆண்டு புள்ளி அடிப்படையில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில், சரக்கு ஏற்றுமதி வருமானம் 1,192 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அதே வருமானம் 1,051 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது. இந்தநிலையில், கடந்த வருடத்தின் ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 11.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வவுனியா மருத்துவர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா வைத்தியசாலை முன்பாக இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பித்த விழிப்புணர்வு நடை பயணம் கண்டி வீதி ஊடாக வவுனியா நகரை அடைந்து இரண்டாம் குறுக்குத்தெரு, கந்தசாமி கோவில் வீதி, பசார் வீதி, மில் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி என்பவற்றினுடாக மீண்டும் வவுனியா வைத்தியசாலையை வந்தடைந்தது. தொற்றா நோய் ஆகிய நீரிழிவு நோயானது தற்போது நாடளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்றது. வவுனியாவிலும் இந் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மக்களது வாழ்க்கை முறையும், தவறான உணவுப் பழக்க வழக்கமுமே இந்த நோய் ஏற்படுவதற்கு முககிய காரணம் எனவும் இது தொடர்பில் ஆரம்பத்திலேயே விழிப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி குறித்த விழிப்புணர்வு நடை பயணம் இடம்பெற்றது. இதில் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எம்.மகேந்திரன், மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரப் பிரிவினர்,…