Author: admin

கல்வி அமைச்சு மற்றும் ‘உளவிழிப்புணர்வு பாடசாலை’ (Mindful school) இன் தாபகர் வணக்கத்திற்குரிய உடஈரியாகம தம்மஜீவ தேரர் அவர்களின் ‘உளவிழிப்புணர்வு மன்றம்’ இணைந்து ‘உளவிழிப்புணர்வை’ உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தைப் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டமானது, சிக்கலாகவும் வேகமாகவும் இயங்கி வருகின்ற சமூகத்திற்கு முகங்கொடுத்து மாணவர்கள் தமது ஆளுமையை விருத்தி செய்து கொள்வதற்குத் தேவையான அனுபவத்தை பாடசாலையிலேயே வழங்கி, அவர்களின் தவறான நடத்தைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக அமையும் இக்கல்வி நிகழ்ச்சித்திட்டத்தை நாடாளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, 2023 ஜனவரி மாதம் 04 ஆம் திகதி தொடக்கம் 2023 மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கும், பின்னர் குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7.30 தொடக்கம் 7.40 வரைக்கும் 10 நிமிடங்கள் நடைமுறைப்படுத்துவதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…

Read More

இந்நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தங்கப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் தங்கப் பொருட்களின் விலையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இன்றைய தங்கம் விலை பின்வருமாறு பதிவு செய்யப்பட்டது. தங்க அவுன்ஸ் 649,160.00 24 கரட் 1 கிராம் ரூ. 22,900.00 24 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 183,200.00 22 கரட் 1 கிராம் ரூ. 21,000.00 22 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 167,950.00 21 கரட் 1 கிராம் ரூ. 20,040.00 21 கரட் 8 கிராம் (1 பவுன்) ரூ. 160,300.00

Read More

நிலவுக்கு மீண்டும் மனிதா்களை அனுப்புவதற்கு முன்னோடியாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா கடந்த மாதம் அனுப்பிய ஆய்வுக் கலம், வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியது. மெக்ஸிகோவுக்கு அருகே பசிபிக் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இறங்கிய அந்த விண்கலம், ஒலியின் வேகத்தைப் போல் 32 மடங்கு வேகத்தில் வளிமண்டலுக்குள் நுழைந்து, 5,000 பாகை வெப்பத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பல்லோ விண்கலத் திட்டங்கள் நிறுத்தப்பட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக நிலவுக்கு மனிதா்களை அனுப்புவதற்காக ‘ஆா்டமிஸ்-1’ என்ற இந்த திட்டத்தை நாசா உருவாக்கியுள்ளது. அதற்கு முன்னோட்டமாக, சோதனை முறையில் 3 மனித மாதிரிகளுடன் அந்த ஆய்வுக் கலம் கடந்த மாதம் ஏவப்பட்டது. அதற்கு முன்னா் இயந்திரக் கோளாறு காரணமாக அந்தத் திட்டம் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

Read More

இலங்கையின் காற்றின் தரச் சுட்டெண் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று தரக் கண்காணிப்பு பிரிவினால் இதுகுறித்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று (செவ்வாய்கிழமை) காலை 7.15 அளவிலான நிலைவரத்தின் படி காற்றின் தரச்சுடெண், நீர்கொழும்பு – 144, கண்டி – 136, கம்பஹா 127, கொழும்பு – 122, யாழ்ப்பாணம் 119, அம்பலாந்தோட்டை – 117, தம்புள்ளை – 88, இரத்தினபுரி – 70, நுவரெலியா – 53 ஆக காணப்படுகின்றது. 101 முதல் 150 வரையிலான தரத்தினை கொண்ட காற்று, சுவாச கோளாறுகளை கொண்ட தரப்பினரும் ஆரோக்கியமற்றவை எனவும், 151-200 முழுவதுமாக ஆரோக்கியமற்றது என்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் காற்று தரக் கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Read More

தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். கொறோனா பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பலாலிக்கான விமான சேவை நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகியுள்ளமை, வடக்கு மாகாண மக்களுக்கு மாத்திரமன்றி கிழக்கு மற்றும் அநுராதபுரம் பொலனறுவை போன்ற வட மத்திய மாகாணங்களும் நன்மை பயக்கவுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், “அடிப்படையான வசதிகளுடன் மட்டுப்படுத்தப்பட்டளவு சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிக்கின்றன. விமான நிலையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டம் கட்டமாக விஸ்தரிப்பதற்கு தேவையான நகர்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட இருக்கின்றது. இதுதொடர்பாக, இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதுடன் அமைச்சரவையிலும் பிரஸ்தாபிக்கவுள்ளேன். இந்நிலையில், மக்கள் சரியான முறையில் இதனைப் பயன்படுத்துவார்களாயின், எதிர்காலத்தில் இந்தியாவிற்கான சேவைகள் விரிவுபடுத்தப்படும் என்பதுடன் ஏனைய நாடுகளில் இருந்தும் சேவையை முனனெடுப்பதற்கும் விமான நிறுவனங்கள் முன்வரும். இதன்மூலம், எமது பிரதேசத்தின் சுற்றாலாத்துறை வளர்ச்சியடைவதுடன் , ஏற்றுமதி…

Read More

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பலாலி விமான நிலையத்திற்கு நேற்று மூன்று வருடங்களின் பின்னர் விமானம் வந்திறங்கியதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார். காங்கசந்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னர், அங்கிருந்து காரைக்கால் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே படகு சேவையை விரைவில் தொடங்குவது குறித்து அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read More

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பதற்கு காரணமான காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த 26 வயதான சாரதி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி நிலையில் நேற்று (திங்கட்கிழமை) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சாரதி சனிக்கிழமை காலை தனது நண்பர்களுடன் இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் சொகுசு காரை மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளார். கொள்ளுப்பிட்டி காலி வீதியில் இடம்பெற்ற விபத்தை தொடர்ந்து சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று அன்றைய தினம் துபாய்க்குச் சென்றுள்ளார். இந்நிலையில், முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதுடன், காரில் பயணித்த இருவரில் பெண் ஒருவர் விபத்தை நேரில் கண்டவர்களால் தாக்கப்பட்டுள்ளார். கார் சாரதிக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு துபாயில் இருந்து நாடு திரும்பிய அவர், குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க…

Read More

உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும். உயிர்வாழ்வுச் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பை, அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் புதுப்பிக்காத ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிறுத்தப்படும் என்று ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஜெகத் டி டயஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட மற்றும் பிராந்திய செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அவர் அறிவித்துள்ளார். ஓய்வூதியர்களின் உயிர்வாழ்வுச் சான்றிதழை எவ்வாறு உறுதிப்படுத்த வேண்டும் என்பது குறித்து அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கிராம அதிகாரிகளுக்கு தொடர் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

Read More

சமுர்த்தி பயனாளர்கள் உள்ளிட்ட அரச உதவிகளை பெறுவோர் தொடர்பில் ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம், சமூக நலன்புரி சபை ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உதவிகள் கிடைக்க வேண்டிய குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டும் தகுதியற்றவர்களுக்கு அரச உதவிகள் கிடைப்பதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைய, பயனாளர்களின் பட்டியலை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய, செம்மைப்படுத்தப்பட்ட புதிய ஆவணத்திற்கு அமைய 35 இலட்சம் குடும்பங்கள் அரச உதவி பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Read More