பொலன்னறுவை மன்னம்பிட்டி அருகே கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பொலன்னறுவை மனம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையின் இரண்டு களஞ்சியங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு களஞ்சியங்களிலும் 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் 6 வருடங்களாக நிறுத்தப்பட்ட மற்றும் காலாவதியான மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மருந்துப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த நாடும் மருந்து தட்டுப்பாட்டால் தவித்து வரும் இவ்வேளையில், 2017ம் ஆண்டு இந்த மருந்துகளை வெளியிடாதது குறித்து உடனடி விசாரணை நடத்தி அவற்றை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே குறித்த மருந்துப் பொருட்கள் அனைத்தும் 2017ம் ஆண்டே காலாவதியாகி விட்டதாகவும், அவற்றை சுகாதார அமைச்சுக்கு கையளிப்பதற்காகவே அங்கு சேமித்து வைத்திருந்ததாகவும் பொலன்னறுவை சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். எனினும் கோடிக்கணக்கான…
Author: admin
களுத்துறை ஹோட்டல் ஒன்றில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு மேலதிக கல்விக்காக வட்டியில்லா கடன்களை வழங்கிய போதிலும் 2021/2022 ஆம் வருட தொகுதி மாணவர்களுக்கு கடன் வழங்குவதற்குத் தேவையான வர்த்தமானி வெளியிடப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு, பட்டதாரி கற்கைகளை வழங்கும் ஆறு கல்வி நிறுவனங்களுக்கு, 26 கற்கைகளுக்காக 8 இலட்சம் ரூபா வட்டியில்லா கடன் வழங்கப்பட்டதாகவும், ஆனால் 2021/202 தொகுதி மாணவர்களுக்கு இந்தக் கடன் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கூட கிடைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அமைச்சரவையின் அங்கீகாரம் கூட கிடைக்கப்பெற்றிருக்கும் இவ்வேளையில் இது நடைமுறைப்படுத்தப்படாமை பிரச்சினையாகும் என்றும், விதிமுறைகளை தற்போது ஏற்படுத்ததாது, 7ஆம் தொகுதிக்கு முன்னுரிமை கொடுத்து கடனை வழங்க வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.
கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் எண்ணெய்க் கொள்கலனொன்று ஒன்று இன்று காலை தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தது. எனினும், இன்று மதியம் 2 மணியளவில் ரயில் பாதையை சீர் செய்துள்ளதோடு, மலையக புகையிரத சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக நானுஓயா ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
லங்கா சதொச நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டில் ஆறு பில்லியன் ரூபா பெறுமதியான அரிசி மோசடியொன்றில் ஈடுபட்டுள்ளது கோப் குழுவில் அம்பலமாகியுள்ளது கடந்த 2015ம் ஆண்டில் மைத்திரிபால சிரிசேனவின் ஆட்சிக்காலத்தில் சதொச நிறுவனம் ஆறுபில்லியன் ரூபா செலவில் இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்திருந்தது. பின்னர் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அதனை மனிதப் பாவனைக்குப் பொருத்தமற்றதாக தெரிவித்து, கால்நடை தீவனமாக மிகக் குறைந்த விலைக்கு புறக்கோட்டை சந்தைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது பின்னர் சதொச நிறுவன உயர் அதிகாரிகள் புறக்கோட்டை சந்தையில் இருந்து புதிய அரிசி கொள்வனவு செய்யும் சாக்கில் தாங்கள் முன்பு விற்ற அதே அரிசியை பெருந்தொகைப் பணம் செலவழித்து , மீண்டும் சதொசவுக்கே கொள்வனவு செய்துள்ளனர். நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கோப் குழு கூட்டத்தில் இந்த விபரங்கள் பொதுஜன பெரமுணவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகேவினால் வௌியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (23.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314.36 ரூபாவாகவும், கொள்வனவு விலை 299.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 240.18 ரூபாவாகவும், கொள்வனவு விலை 225.28 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. • பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 345.15 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 326.10 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 379.44 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 400.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்தவுடன், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்களை ஜூலை மாத இறுதியில் இருந்து மதிப்பீடு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகளை மாணவர்களுக்கு விரைவில் வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுப்பதாகவும், க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தற்போது 37 பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றது.
துப்பாக்கிச்சூடு மற்றும் பாதாள உலகக்குழு செயற்பாடுகள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களை வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுத்து வைக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். குறித்த தரப்பினர், குறிப்பிட்ட காலத்திற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வெளியே சென்று அந்தக் குற்றச் செயல்களிலேயே மீண்டும் ஈடுபடுகின்றனர். சில நபர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. எனவே, வழக்கு நிறைவடையும் வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்கக்கூடிய நிலைமை இருந்தால் இந்த விடயத்தில் ஏதேனுமோர் அளவுக்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவது ஓராண்டுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் குழந்தைகளின் போஷாக்கு நிலை தொடர்பில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் குடும்ப சுகாதார சேவைகள் சங்க தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். சோளத்தில் உள்ள அஃப்லாடோக்சின் சதவீத பிரச்சினை காரணமாக திரிபோஷ உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு மத்தியில் சமீபகாலமாக ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்தின் குடும்ப சுகாதார சேவைகள் சங்க தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். பதவி நீக்கப்பட்ட முன்னாள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவிற்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.