சமூக நலன்கள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார். சமூக நலன்கள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் தனிப்பட்ட முறையில் வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், நிகழ்நிலை(online) முறையின் மூலம் அந்த மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க முடியாத நபர்களுக்கு அதற்கேற்ப வசதிகள் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 1924 என்ற அவசர இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
Author: admin
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான செயன்முறைப் பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான செயன்முறைப் பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் பாடங்கள் தொடர்பான செயன்முறைப் பரீட்சைகள் இன்று (26) முதல் ஜூலை 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான அனுமதி அட்டைகள் குறித்த அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அவற்றை தபால் மூலம் அவர்களது தனிப்பட்ட முகவரிக்கு பெற்றுக் கொள்வதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மாணவர்கள் https://onlineexams.gov.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், முன்பு வழங்கப்பட்ட அனுமதி அட்டைகள் இனி செல்லுபடியாகாது. பரீட்சை தொடர்பான தெளிவுபடுத்தல்கள் அல்லது தகவல்களுக்கு மாணவர்கள் 1911 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இலண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை ஆரம்பித்திருந்த ஜனாதிபதி ரணில், அவரது ஐரோப்பிய பயணத்தின் போது பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்து, இலங்கைக்கு பொருளாதார உதவிகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை ஜனாதிபதி மற்றும் அவரது தூதுக்குழு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
60 வகையான மருந்துகளின் விலை இன்று (26) முதல் 16% குறைக்கப்பட உள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 16% விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 சதங்களாக குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2270 ரூபா 2 சதமாகும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 375 மில்லிகிராம் அமோக்ஸிலின் கிளாவுலினிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா 32 சதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் 5.30 மணி வரை கடும் மழை மற்றும் பலத்த காற்று சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள…
இம்மாதம் 30ஆம் திகதி வங்கிகளுக்கான விசேட முறை நாளாக அறிவிக்கப்பட்டதன் மூலம், வங்கிகளுக்கு 29ஆம் திகதி முதல் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நீண்ட விடுமுறையானது உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கான கால அவகாசத்தை பெற்றுக் கொள்வதற்காகவே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை அறிவித்துள்ளார். இந்த கடன் மறுசீரமைப்பின் ஊடாக உள்நாட்டு பண வைப்பாளர்களின் பணத்துக்கோ அதற்கான வட்டி தொகைக்கோ பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக மாத்திரமே இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலைவாய்ப்புகள் உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவினர் நாளை திங்கட்கிழமை (26) இஸ்ரேல் செல்லவுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி முதல் இஸ்ரேலில் தாதியர் துறையில் 389 இலங்கையர்கள் பணி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் உட்பட ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், எதிர்வரும் 28 ஆம் திகதி அதிபருக்கும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ள நிலையில் கொழும்பில் இருந்து வெளிப்பிரதேசங்களுக்கான பயணங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 70 க்கும் மேற்பட்ட விமானிகள் போதிய சம்பளம் இல்லாத காரணத்தால் பணியை விட்டு விலகியுள்ளதாக விமான நிறுவனத்தின் விமானிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரியாவுக்குச் செல்லவிருந்த இலங்கைப் பணியாளர்கள் குழுவொன்று, விமானம் தாமதமானதால் அந்த வாய்ப்பை இழந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL 470 விமானம் தாமதமானதால், தென்கொரியாவிற்கு செல்லவிருந்த இலங்கை பணியாளர்கள் குழுவொன்று அந்த வாய்ப்பை அண்மையில் இழந்ததுடன், பின்னர் இது தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனமும் ஈர்க்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் இந்த சம்பவம் தொடர்பில் இன்று ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு போதிய சம்பளம் மற்றும் ஊதியம் வழங்காததால், கடந்த ஒரு வருடத்தில் 70க்கும் மேற்பட்ட விமானிகள் ஏற்கனவே வேலையை விட்டு விலகியுள்ளதாகவும், மற்றொரு குழு விலக உள்ளதாகவும் அவர்கள் காட்டியுள்ளனர். விமான நிறுவனத்தில் 330 விமானிகள் இருக்க வேண்டியிருந்தாலும்,…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இந்த ஆண்டு 18 சதவீதம் அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டின் நேற்று முன்தினம்(23.06.2023) வரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் அறிக்கை, மேலும், கடந்த வாரம் ரூபாவின் பெறுமதி தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, இலங்கை ரூபாவின் பெறுமதி ஜப்பானிய யென்னுக்கு நிகராக 27.06 சதவீதத்தாலும், பிரித்தானிய பவுண்டுக்கு நிகராக 12.01 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய வங்கியின் அறிக்கையின்படி, யூரோவிற்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 15.02 சதவீதத்தினாலும், இந்திய ரூபாவுக்கு நிகராக 17.01 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.