பண்ணைக்கு வரும் மொத்த வியாபாரிகளுக்கு முட்டை ஒன்றை 46 ரூபாயிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் முட்டை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். மேலும் முட்டை விலை தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியில் திருத்தம் செய்யப்படும் வரை உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Author: admin
கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி, இணையம் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் அனைத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சேவைக் கட்டண திருத்தங்கள் செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் 20% அதிகரிக்கப்படும். மேலும் அனைத்து தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் 25% அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று (02) அதிகாலை 12.50 மணியளவில் கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தை வந்தடைந்தார். பாதுகாப்புப் படையினர் மற்றும் மற்றொரு குழுவினருடன் அவர் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர். அந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாரதி அனுமதிப்பத்திரங்களில் உள்ள மெமரி சிப்களை நீக்கி QR குறியீடு கொண்ட புதிய அட்டையை அறிமுகப்படுத்த மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் ஏறக்குறைய ஐம்பத்தேழு இலட்சம் பேர் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுள்ளதோடு அவர்களின் அடையாளம் மற்றும் ஓட்டக்கூடிய வாகன வகைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் சாரதி அனுமதிப் பத்திர சிப்பைப் போன்ற நினைவக சிப்பில் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் இந்த அட்டைகள் ஒஸ்ரியாவில் இருந்து யூரோக்களில் பணம் செலுத்தி இறக்குமதி செய்யப்பட்ட அதேவேளை தற்போது பொருளாதார நெருக்கடியால் திறைசேரியில் யூரோ இல்லாததால் இந்த அட்டைகளின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்படாமல் உள்ளதோடு வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு மட்டும் அச்சடித்து அவர்களுக்கு தற்காலிக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பாண் ஒன்றின் விலை 300 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு மூட்டை கோதுமை மாவின் விலை குறைக்கப்படாவிட்டால் விலை அதிகரிக்கப்படும் என சங்கம் முன்னரே எச்சரித்திருந்தது. நாடளாவிய ரீதியில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், கையிருப்பில் உள்ளவை தேவைக்கு ஏற்ப அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்த்தனே.
இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு சீனா தனது சக்திக்கு ஏற்றவாறு உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். சரியான தீர்வுகளுக்காக இலங்கையுடன் கலந்தாலோசிப்பதில் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா ஆதரவளிக்கிறது. ஜாவோ லிஜியன் – செய்தித் தொடர்பாளர், சீன வெளியுறவு அமைச்சகம் செப்டெம்பர் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற வெளிவிவகார அமைச்சின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை பொலிஸ் திணைக்களம் தனது 156 வது ஆண்டு விழாவை இன்று (சனிக்கிழமை) கொண்டாடுகின்றது. பொலிஸ் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை செப்டெம்பர் 03முதல் 10ஆம் திகதி வரை குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக சவால்களுக்கு மத்தியில், பிரித்தானியா இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவியேற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு முன்னுரிமையளிக்கும், அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் எடுத்துள்ள முயற்சிகளுக்கு பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜனநாயக கொள்கைகளை பின்பற்றுவது, ஜனநாயக இணக்கப்பாட்டை எட்டுவது என்பன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் மிக விரைவில் உங்களால் முன்னேற்றத்தைக் காண முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. இவ்விடயத்தில் இலங்கைக்கு உதவ, தமது சர்வதேச பங்குதாரர்களுடன் பிரித்தானியா இணைந்து செயற்பட காத்திருப்பதாகவும் என்றும் பொரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சீனிகம ஸ்ரீ மஹா ஆலயத்தின் பிரமாண்ட ஊர்வலம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு காலி-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை (03) முதல் 06 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு இடைக்கால வரவு – செலவுத் திட்டம் எந்தளவில் ஈடுகொடுக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (02) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “நான்கு மாத காலத்துக்கான ஒரு இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சரான ஜனாதிபதி சமர்ப்பித்திருக்கின்றார். நீண்ட நாட்களாக வங்குரோத்து நிலையில் இருக்கின்ற நாட்டை கட்டியெழுப்புகின்ற வரவு – செலவுத் திட்டமாக இது இல்லாத போதும், தற்காலிகமான இந்த வரவு – செலவுத் திட்டத்தில் ஒரு சில நல்ல விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார். எனினும், அதனை நடைமுறைப்படுத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த வகையில், செலவீனம் 4,427 பில்லியன் ரூபாவாகவும், வருமானம் தரக்கூடிய வழி 2094 பில்லியன் ரூபாவாகவும் காட்டப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு நிவர்த்தி செய்யப் போகின்றார்கள் என்பது தெரியவில்லை. வறுமையினாலும் துன்பத்தினாலும் கஷ்டப்படும் மக்கள்…