மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த போது ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டினை இரத்து செய்யுமாறு கோரி தேசபந்து தென்னகோன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.இந்த தீர்ப்பு இன்று (23) அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ‘கோட்டா கோ’ தாக்குதலின் சந்தேகநபராக தம்மை பெயரிடுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் அனுப்பிய கடிதத்தை இரத்து…
Author: admin
சட்டவிரோதமாக மக்களால் தாங்க முடியாத வகையில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக, அது தொடர்பில் ஆராய விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் நேற்று (22) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர். தன்னிச்சையாக மின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த அநீதி குறித்து விசேட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இதனூடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெட் ஸ்கேன் பரிசோதனையின் போது நோயாளிகளுக்கு வழங்கப்படும் கதிரியக்க தடுப்பூசி கிடைக்காததால், புற்றுநோயாளிகளுக்கு நடத்தப்படும் பெட் ஸ்கேன் பரிசோதனை ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். பெட் ஸ்கேன் செய்வதற்கு முன், FDG எனப்படும் இந்த கதிரியக்க தடுப்பூசி நோயாளிக்கு கொடுக்கப்பட்டு அதன் பிறகு ஸ்கேன் செய்யப்படுகிறது. மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் கடந்த மே மாதம் 26ஆம் திகதி முதல் பெட் ஸ்கேன் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார். இந்த பெட் ஸ்கேன் என்பது ஒரு நோயாளியின் புற்றுநோய் நிலையின் வளர்ச்சி, இருப்பிடம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றைத் துல்லியமாகக் கண்டறியும் நவீன பரிசோதனையாகும், அத்துடன் புற்றுநோய் நோயாளியின் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வளர்கிறதா இல்லையா என்பதைச் சரியாகக் கண்டறியும் திறன் கொண்டது. கதிரியக்க தடுப்பூசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு காரணம் சரியான நேரத்தில்…
எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜூன் 30ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை துல் ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசல் மஹ்ரிப் தொழுகையின் பின்னர் நடைபெற்றது. இதன்போது நாட்டின் சில பகுதிகளில் தலைப்பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை (24) சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கங்கின் அழைப்பின் பேரில் அமைச்சர் அலி சப்ரி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். (வளிமண்டலவியல் திணைக்களம்)
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த நிறுவனம் மற்றும் இரண்டு கடைகளுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அதன்படி, குறித்த நிறுவனத்துக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும், மற்ற இரண்டு கடைகளுக்கு 1 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நுகர்வோர் அதிகாரசபையின் மாத்தறை மாவட்ட அலுவலகஅதிகாரிகளினால் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் குறித்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
தமது பெயரைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணம்கோரும் நபர்களிடம் ஏமாற வேண்டாமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டு வேலை தேடுவோர் இவ்வாறான மோசடி செய்பவர்களுக்கு பணத்தை வழங்க வேண்டாம் என வலியுறுத்திய அமைச்சர், இவ்வாறான செயற்பாடுகளுக்கு தாம் பொறுப்பேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தும் தொழிலில், தமது குடும்பத்தினரோ, அமைச்சின் எந்தவொரு அதிகாரியோ ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு வெளிநாடுகளில் இலாபகரமான தொழில் வாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பணம் சேகரிக்கும் மோசடிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இவ்வாறான மோசடிகளை தடுப்பதற்கு கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் தீவிரமாக தலையிட்டு வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவர் நிலையங்களுக்கு மாத்திரமே தொழிலாளர்களை வேலைக்கு…
தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் இடம்பெறும் வன்முறைக் குற்றங்களுக்கு எதிராக உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதேபோல், அங்கீகரிக்கப்படாத அல்லது உரிமம் பெறாத துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்போர் அவற்றை கையளிக்க ஜூலை 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்க விலையானது இன்று (22) சற்று குறைந்த நிலையில் உள்ளது. கொழும்பு, செட்டியார் தெரு தங்க/நகை வர்த்தகத்தின் விலைகளுக்கு அமைவாக இன்றைய தினம் 24 கறட் தங்கம் ஒரு பவுண் 163,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம் 22 கறட் தங்கம் ஒரு பவுண் 149,850 ரூபாவாக காணப்படுகிறது.