சீனாவின் மலைப்பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிச்சுவான் மாகாணத்தில் இன்று (5) நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது நிலநடுக்கமானது அடுத்த 40 நிமிடங்களில் யான் நகரில் உணரப்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. சீனாவில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Author: admin
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பெறப்படும் சேவைகளுக்கு இலத்திரனியல் அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (05) முதல் ஆரம்பமாகியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. கடனட்டை மற்றும் வரவு அட்டைகளைக் கொண்டு பணத்தை செலுத்த முடியும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
திருடர்கள், கொலைக்காரர்களை புதிய சுதந்திரக் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் குமார வெல்கம எம்.பிக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். புதிய சுதந்திரக் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அனைவரையும் புதியக் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என குமார வெல்கம கூறுகிறார். திருடர்களை மாத்திரம் இணைத்துக்கொள்ள வேண்டாம் என நான் குமர வெல்கமவுக்கு நிபந்தனை ஒன்றை விதிக்கிறேன். பிரபல திருடர்கள், கொலைக்காரர்களை இணைத்துக்கொண்டு முன்நோக்கிச் செல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.
போசாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள 61,000 குடும்பங்களுக்கு நான்கு மாதங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா மானியம் வழங்கப்படும் என பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன தெரிவித்துள்ளார். உலக உணவுத் திட்டத்தின் கீழ் செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்படும் என்றும் செயலாளர் குறிப்பிடுகிறார்.
குருநாகல், வஹெர பிரதேசத்தில் உள்ள நீர் நிரம்பிய கால்வாய்க்குள் விழுந்து சுமார் ஒரு மணித்தியாலம் சிக்கிக் கொண்ட 14 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார் என்று குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குருநாகல் மலியதேவ ஆதர்ஷ் மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் தரத்தில் கல்வி பயிலும் குருநாகல் ஜயந்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த சசித்ர சேனாரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார். குருநாகல் பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றுக்கு வழிவிடுவதற்காக வீதியோரத்துக்கு சென்றபோது, கால்வாயில் வழுக்கி விழுந்துள்ளார். கடும் மழையால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் கால்வாய்க்கு அருகே புத்தகப் பை ஒன்று கைவிடப்பட்டதைக் கண்ட பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த மாணவன் கால்வாய்க்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார். எனினும், அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நான்கு மாவட்டங்களுக்கு நாளை (06) பிற்பகல் 4 மணிவரையில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. குறித்த பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது. அதன்படி, டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு 10 வீதம் சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு மற்றொரு தீர்வாக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டு நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களான பொரளை ஓவல் வியூ வீடமைப்புத் திட்டத்தில் 608 வீடுகளும் அங்கொட லேக் ரெஸ்ட் திட்டத்தில் 500 வீடுகளும் உள்ளன. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு டொலர்களை பயன்படுத்தி இந்த வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும்…
ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதால் ஆறுகளை அண்டிய தாழ் நிலப்பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக நில்வளா கங்கை, கிங் கங்கை, களு கங்கை, களனி கங்கை, அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதனால் மேற்குறித்த ஆற்றினை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களை மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசியலமைப்பை மறுசீரமைப்பு மூலம் கலப்பு தேர்தல் முறைமையை தயாரித்து உள்ளுராட்சி மன்றங்களுக்காக அதிகூடிய அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் தெரிவித்தார்.
கோதுமை மா உற்பத்தித் திறனை அதிகரிக்குமாறு பாரியளவிலான கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களிடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னிலையில் இன்று (05) காலை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்காலத்தில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கோதுமை மாவுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது நடைமுறைச் சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.