சமூக செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். மருதானை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது. நோர்வே அரசாங்கம் வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான நோர்வே தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஐரோப்பாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பல நோர்வே தூதரகங்களை வலுப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளதாக தூதரகம் குறிப்பிடுள்ளது. இந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, 2023 ஜூலை இறுதிக்குள் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் உட்பட வெளிநாடுகளில் உள்ள ஐந்து நோர்வே தூதரகங்களை நிரந்தரமாக மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பில் உள்ள தூதரகத்தை மூடும் முடிவு நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தூதரகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ சபையினால் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார். அனைத்துக் கட்சிகளைக் கொண்ட தேசிய சபையை நியமித்த பின்னர் ஒப்பந்தம் குறித்த கொள்கையை தேசிய சபைக்கு முன்வைக்க எதிர்பாரத்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆசிய கிண்ண தொடரின் சூப்பர் 4 போட்டியில் இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன மற்றும் பிரமோத் மதுஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர். அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸங்க 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்தை நிர்மாணிப்பது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கட்டார் கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் Sheik Hamad Bin Khalifa Bin Ahmed Al-Thani உடன் கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கு குறிப்பாக விளையாட்டு சுற்றுலாவிற்கு உதவுவது தொடர்பாக பயனுள்ள கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டதாக ஹரின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்தார். இலங்கையில் சர்வதேச கால்பந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கு காணி வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள நிலையில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டரி (Yury Materiy), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (08) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இலங்கையில் தனது பதவிக்காலம் நிறைவடைந்துள்ளபோதும் இலங்கையுடனான உறவை வலுப்படுத்த தான் தொடர்ந்தும் பணியாற்றுவேன் என்றும் அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் அதேநேரம் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் யூரி மேட்டரி இதன்போது வலியுறுத்தினார். இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் என்ற வகையில், இலங்கையில் ஆற்றிய பணிகளுக்கு பாராட்டுத் தெரிவித்த ஜனாதிபதி விக்ரமசிங்க , அதற்காக தூதுவருக்கு நன்றிகளையும் தெரிவித்தார். பதவிக்காலம் முடிந்து தான் இலங்கையை விட்டு வெளியேறினாலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதாக யூரி மேட்டரி இதன்போது உறுதியளித்தார். மேலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்காக ஜனாதிபதி விக்ரமசிங்க முன்னெடுத்து வரும் முயற்சிகள் வெற்றிப்பெறுவதற்கும் அவர் வாழ்த்து…
அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதில் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பின், அவற்றை உடனடியாக திருத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்படும் இந்திய முதலீட்டு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு மேற்கண்டவாறு உத்தரவிட்டார். அந்த கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்பும் கலந்து கொண்டார். இதன்போது, இந்திய முதலீட்டில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு தடையாகவுள்ள விடயங்களை கண்டறிந்து, அவற்றுக்கு உடனடி தீர்வு வழங்குமாறும் ஜனாதிபதி, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். கடந்த அரசாங்கங்களால் காலத்துக்கு காலம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் அபிவிருத்திக்கு இடையூறாக இருக்குமாயின் அவற்றை உடனடியாக திருத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகப் பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, மின்வலு, எரிசக்தி அமைச்சின்…
லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டுள்ளார் செப்டம்பர் 9, 2022 இரவு 8:39 மணிக்கு செயற்பாட்டாளர் லஹிரு வீரசேகர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் கடமைகளை மேற்கொள்ளவிடாமல் தடுத்தமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு இன்று (09) சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய 2021ஆம் ஆண்டு 21ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டமாக இது இன்று முதல் நடைமுறைக்கு வரும். 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒதுக்கீட்டுத் (திருத்தச்) சட்டமூலம் மூன்றாவது மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி கடந்த 02ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 115 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இலங்கையின் நெருக்கடியான காலப்பகுதியில் மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், அதிகாரிகள் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை மிக மோசமாக சித்தரிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை, அமைதியான போராட்டக்காரர்களைப் பாதுகாக்க அதிகாரிகள் தவறியதையும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அதியுச்ச பலத்தைப் பயன்படுத்துவதையும், போராட்டங்களை கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்பியதையும், போராட்டக்காரர்களுக்கு எதிராக பழிவாங்குவதையும் வெளிப்படுத்துவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் உரிமை மக்களுக்கு உண்டு, இந்த உரிமையை பாதுகாக்க அரசுக்கும் கடமை உள்ளது, ஆனால் அதிகாரிகள் மீண்டும் மீண்டும் மக்களின் குரலை நசுக்கியுள்ளனர் என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர், 140க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 18 பேருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினர்களும் போராட்டக்காரர்களை “பயங்கரவாதிகள்”…