தற்போது கையிருப்பிலுள்ள Pfizer தடுப்பூசி எதிர்வரும் 6 வாரங்களில் காலாதியாகும் என இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் ஹம்தானி இந்த விடயம் தெரிவித்தார். அத்துடன் தற்போது 6 மில்லியனுக்கும் அதிகமான Pfizer தடுப்பூசிகள் கையிருப்பிலுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் 15 சதவீதமான மக்களே நான்காவது கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட Pfizer தடுப்பூசிகளின் காலாவதி திகதி மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் விரைவாக நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை தற்போது கொரோனா தொற்றுக்கான கட்டுபாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் நாட்டில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் ஹம்தானி சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் பொதுமக்கள் ஒன்று கூடுவதை…
Author: admin
சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் சலுகைகளை எதிர்பார்க்கும் மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி சமுர்த்தி, முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக உதவித்தொகை கோரும் மக்கள் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள் ஊடாக பிரதேச செயலகங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார். சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவியாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகிய தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள எந்தவொரு உத்தியோகத்தர் ஊடாகவும் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க முடியும் என அவர் கூறினார். எதிர்வரும் 30ஆம் திகதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அரச கொடுப்பனவுகளைப் பெறும் அனைவரும் இந்த விண்ணப்பத்தை அனுப்பிவைக்க வேண்டுமென சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி கேட்டுக் கொண்டுள்ளார்.
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 60ஆக வரையறுக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சுற்றறிக்கை இன்று (14) வௌியிடப்படவுள்ளது. அதற்கமைவாக, அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக மட்டுப்படுத்தப்படுமென அமைச்சின் செயலாளர் மாயாதுன்னே தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பல அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த அறிவிப்பு செல்லுபடியாகாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நெலும் குளுனு என அழைக்கப்படும் தாமரை கோபுரத்தின் முதல் கட்டம் நாளை செப்டம்பர் 15 ஆம் திகதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. 113 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளம் மற்றும் சில பகுதிகள் முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு திறக்கப்படும். டிக்கெட்டுகளின் விலை ரூ.2000 மற்றும் ரூ.500 என அறிவிக்கப்பட்டது., அதே நேரத்தில் பள்ளி சுற்றுலாவிற்கும் இது சிறப்பு கட்டணத்தில் திறக்கப்படும். இருப்பினும், தாமரை கோபுரத்தின் டிக்கெட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சீன பிரஜைகளுக்கு விதிவிலக்குகள் பற்றிய தகவல்களுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. இந்த விடயத்தை தெளிவுபடுத்திய கொழும்பில் உள்ள சீன தூதரகம், தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்படும் டிக்கெட் போலியானது என தெரிவித்துள்ளது. நாளை பொதுமக்களுக்கு வழங்கப்படும் தாமரை கோபுரத்தின் அசல் டிக்கெட்டின் படத்தை தூதரகம் மேலும் பகிர்ந்துள்ளது
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசியக் கிண்ண வெற்றியின் பின்னணியில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்துள்ளார். இரண்டரை வருடங்களாக நாமல் ராஜபக்ஷ விளையாட்டுத்துறைக்கு ஆற்றிய சேவையின் பெறுபேறுகள் தற்போது கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலின்றி திறமையானவர்களுக்கு விளையாட்டை முன்னெடுப்பதில் நாமல் ராஜபக்ஷ பெரும் பங்காற்றினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, நாமல் ராஜபக்ஷவுக்கு அமைச்சுப் பதவி வழங்குவது மிகவும் பொருத்தமானது என்றும் மதுர விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள், சுகாதாரத் துறையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகளில் உள்ளவர்கள் உள்ளிட்ட குழுக்கள் பொது ஊழியர்களுக்கு ஐந்தாண்டு ஊதியம் இல்லாத விடுமுறையை வழங்கும் அரசாங்க சுற்றறிக்கையின் கீழ் வராது என்று ஒரு அதிகாரி அறிவித்தார். பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் அதிகப்படியான தொழிலாளர்களை அகற்றும் நோக்கில் மாத்திரம் நீண்ட கால விடுமுறைக்காக இந்த சுற்றறிக்கையை அரசாங்கம் அமுல்படுத்தவுள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இல்லையெனில், நாட்டுக்கு முக்கியமான தொழிலாளர்களுக்கு இது பொருந்தாது என்று அவர் கூறினார். அவர் கூறினார், “நாங்கள் இப்போது இந்த சுற்றறிக்கையை உருவாக்குகிறோம்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணைவி பகுதியில் 11 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினரால் 22வயதான இளைஞர் கைது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட் துணவி பகுதியிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.00 மணியளவில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் வாள்களை பயன்படுத்தி கட்டுச் சொல்லும் கோவிலொன்றில் வாள்களை உடமையில் வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ப தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர் 11 வாள்களை கைப்பற்றியதோடு குறித்த வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 22வயது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இவை தமது பூசை வழிபாடுகளிற்கு பயன்படுத்தப்படுவதாக கைதான இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் தந்தையே ஆலயத்தில் பூசைகளில் ஈடுபடுவர் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த 4 நாட்களேயான சிசு தாய்ப்பால் புரையேறி உயிரிழந்துள்ளது. நேற்றுமுன்தினம் இரவு குழுந்தை உயிரிழந்துள்ளது. மயிலிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் 8.45 மணியளவில் தனது சிசுவுக்கு பால் கொடுத்துவிட்டு குழந்தையை பார்த்தபோது குழந்தை அசைவற்றுக் கிடந்துள்ளது. இதனையடுத்து சிசுவை பரிசோதித்தபோது சிசு உயிரிழந்துள்ளது. பிரேத பரிசோதனையில் பால் மூச்சுக்குழாயில் புகுந்து புரக்கேறி உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சிசுவின் உயிரிழப்புத் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.
இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை)கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரான பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் உத்தரவிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 இளம் பிக்குகளை கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை கைது செய்ய பொலிஸாரினால் நடவடிக்கை மேற்கொள்ளபட்டிருந்தது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் புதிதாக இணைந்த 3 இளம் பிக்குகள் திடீர் சுகயீனம்…
இலங்கை உள்ளிட்ட குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் எதிர்நோக்கும் கடன் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் பொறுப்பு சீனாவிற்கும் ஏனைய பெரும் கடன் வழங்கும் நாடுகளுக்கும் உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. வளர்ந்து வரும் சந்தையில் 25 விகிதமான நாடுகளும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் 60 விகிதமான நாடுகள் கடன் நெருக்கடியில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா தெரித்துள்ளார். குறிப்பாக, இலங்கைக்கு பொதுக் கடனாளிகள் விரைவாக பேச்சுவார்த்தையை மேற்கொள்வார்கள் என்றும் தனியார் கடன் வழங்குநர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என தான் நம்புவதாகவும் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கூறியுள்ளார். இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் லசார்ட் நிதி ஆலோசனைக் குழு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.