Author: admin

மக்களின் நலன் கருதி வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை இணையத்தில் விரைவாகப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA), மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இ-வாகன வருமான அனுமதிப் பத்திரம் (eRL) திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. புதிய வாகன வருமான அனுமதிப் பத்திரத்தைப் பெறுதல் மற்றும் ஏற்கனவே உள்ள பத்திரத்தை (eRL) புதுப்பிக்கும் வசதி இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. ஒன்லைன் முறையின் மூலம் பத்திரத்தைப் பெறுவதற்கான நிதிக் கொடுப்பனவுகள் வங்கி அட்டைகள் மூலம் முன்னெடுக்கலாம் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புடைய தற்காலிக வருமான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகின்றது. நிரந்தர வாகன வருமான அனுமதிப் பத்திரம் சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம் பயனாளர்களின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை சமர்ப்பித்த அரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு சமூகமளிக்க அனுமதிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த முன்மொழிவின்படி, தேர்தலில் போட்டியிடுவதற்காக தனிநபர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்த தொகுதியைத் தவிர அருகிலுள்ள தொகுதிகளில் அரசு ஊழியர்கள் வேலையில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

Read More

எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் பஸ்கட்டணங்களை குறைப்பதானால், டீசல் லீற்றருக்கு மேலும் 20 ரூபாவால் குறைக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விலை குறைப்போடு ஒப்பிடும்போது பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என்றும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை, குறைக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு ஏற்ப, பஸ் கட்டணத்தை குறைக்க முடியுமா என்பது தொடர்பில், கணிப்பீடு ஒன்றை மேற்கொண்டு வருவதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரென்டா அது தொடர்பில் தெரிவிக்கையில், மேற்படி கணிப்பீட்டு நடவடிக்கைகள் நிறைவுற்றதும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியுமா என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என்றார். அதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, தற்போது குறைக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைக்கேற்ப, பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்கான வாய்ப்பு கிடையாது, அவ்வாறு பஸ் கட்டணம் குறைக்கப்படுமானால் பஸ் போக்குவரத்து…

Read More

புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று (03) மாலை 7.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக படிக்கட்டுகளுக்கு முன்பாக வண்ணமயமான பக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதுடன், இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்க உள்ளார். மே 05 ஆம் திகதி, ஷங்ரிலா பசுமை மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேடையில் நாற்பது பிக்கு மாணவர்கள் மற்றும் 1200 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்படும். சிங்கப்பூரின் மகா கருணா பௌத்த சங்கமும் சிங்கப்பூரின் விலிங் ஹார்ட்ஸ் (Wiling Hearts) அறக்கட்டளையும் இணைந்து ஏற்பாடு செய்யும் வெசாக் அன்னதான நிகழ்வு, அன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு ஷங்கிரிலா பசுமை மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அது மே…

Read More

பசறை – நமுனுகுல வீதியில் நமுனுகுல 14 மற்றும் 17 கிலோமீற்றர் கனுவுக்கு இடைப்பட்ட பகுதியில் பாரிய கல் ஒன்றும் பாறை ஒன்றும் வீழ்ந்துள்ளது. இதனால் அந்த வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக நமுனுகுல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

பயணிகள் போக்குவரத்து பேரூந்துகளில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலி, ஒளிபரப்பு செய்வதை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பதில் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய் ரத்நாயக்க தெரிவித்தார். இந்த விதிமுறைகள் மோட்டார் போக்குவ ரத்து திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்ப டுகின்றன. ஒழுங்குமுறைகளை தயாரிப்பதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த ஒழுங்குமுறைகளை தயாரிப்பது தொடர் பான பல சுற்று கலந்துரையாடல்கள் இதுவரை இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பான விதிமுறைகளை சுமார் ஆறு மாதங்களில் தயாரித்து இறுதி செய்ய முடியும் எனவும் பதில் பணிப்பா ளர் நாயகம் தெரிவித்தார். மேலும் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் இசை யால் பயணிகள் கடும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். 120 டெசிபல் ஒலியை சில நொடிகள் கேட்பது உடல் நலத்துக்கு கேடு விளை விக்கும். உரிய விதிமுறைகளைத் தயாரித்த பிறகு, மோட் டார் போக்குவரத்துத் துறை, பொலிஸ் மற்றும் மத்திய சுற்றுச்சூழல்…

Read More

கலாநிதி மற்றும் பேராசிரியர்கள் போன்ற பட்டங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேவையான சட்ட மாற்றங்களை முன்வைக்க வேண்டும் என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட நபர்கள் கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது. இலங்கையின் பல்கலைக்கழக முறைமை மற்றும் உயர்கல்வி தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் கோப் குழுவுக்கு அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார். அதன்போது, கலாநிதி பட்டம் மற்றும் பேராசிரியர் பட்டங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழுவுக்கு சட்ட ஏற்பாடுகள் இல்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். கலாநிதி மற்றும் பேராசிரியர் பட்டங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதால்,…

Read More

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். # பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் • அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். •…

Read More

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் சில பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. கிறிஸ்தவம், நடனமும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டார். மேலைத்தேய சங்கீதம், சித்திரம் உள்ளிட்ட சில பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

Read More

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்த உரையாடலுக்கு சவால் விடுக்கப்படுவதாக சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் சுதந்திர மக்கள் முன்னணியின் கீழ் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானம் தவறான முடிவு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார். கண்டியில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் இது இடம்பெற்றுள்ளது. இந்த அறிக்கை தொடர்பில் சுதந்திர மக்கள் முன்னணியின் கருத்து என்ன என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில்; ” .. இந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு மூளை கலங்கியுள்ளது. அவர் கூறுகிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு இரும்புக் கட்சி. அது சரி ஆனால் அதனை கோவணம் கட்டிய கட்சியாக மாற்றியது யார்? மைத்திரிபால தான். மைத்திரிபால ஹெலிகாப்டரில் சேர்ந்தது ஏன்? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு வருவதற்கு…

Read More