நாங்கள் கல்வியினூடாக எங்களுடைய மாணவர்களை கட்டியெழுப்ப வேண்டும் என யோசிக்கும் பொழுது புதிதாக தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மன்னாரை ஒரு கலாச்சார சீரழிவுக்கு தள்ளுகின்ற வேலை திட்டத்தை ஆரம்பிக்க முற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலம் தேசிய பாடசாலையினுடைய நூற்றாண்டு நிறைவின் “உள்ளம்” சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இன்று அரசாங்கத்தினால் கொழும்பில் இடம்பெறும் நிகழ்வுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஒன்றுகூட்டி நிகழ்வுகளை நடத்துகின்றார்கள் அண்மையில் பிரதானமான அரசியல் கட்சி சுகததாச அரங்கில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஒன்றுகூட்டி மாநாட்டினை நடத்தியிருந்தார்கள். இவ்வாறு அவர்கள் ஒன்று கூடி நடத்தும் பொழுது பாடசாலை மாணவர்கள் அதிகளவானவரை இந்த நிகழ்வில் ஒன்றுகூடி இருக்கலாம் என எனது தனிப்பட்ட கருத்து.…
Author: admin
பெண்கள்,சமூக சிவில் செயற்பாட்டாளர்கள்,சிவில் அமைப்புப் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான கவனயீர்ப்பு கண்டனப்போராட்டம் மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. வடகிழக்கிலுள்ள சிவில் அமைப்புக்களின் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுதல் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிரான மாபெரும் கவனயீர்ப்பு கண்டனப்போராட்டம் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கண்டுமணி-லவகுசராசாவின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் ஒன்றிய தலைவர் சபாரெத்தினம் சிவயோகநாதன்,மீனவர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பெண்கள்,பாதிக்கப்பட்ட மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள். இலங்கையின் பல பாகங்களிலும் ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள்,மற்றும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் திட்டமிட்ட வகையில் அச்சுறுத்தப்படுவதும், தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும்,அவர்களை பின்தொடர்வதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உரிமை தொடர்பாக பணியாற்றுகின்ற சிவில் அமைப்புக்கள்,ஊடகவியலாளர்கள்,மற்றும் கடந்த மூன்று தசாப்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியான கண்காணிப்பிற்குள்ளாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் இடம்பெற்றுக்…
கல்முனைப் பிரதேசத்தில் ஓர் வகை வைரஸ் பரவி வருவதோடு தொண்டை வலி, காய்ச்சல் தடிமன், இருமல் போன்றவற்றால் அதிகமானர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரியோர் தொடக்கம் சிறியோர் வரை பாதிக்கும் இந்நோயினால் அரச தனியார் மருந்தகங்களில் கூட சிகிச்சைக்கு செல்வோர் தொகை அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. குறிப்பாக அரச மருத்துவமனைகளில் வெளி நோயாளர் பிரிவுகளில் சிறுவர்கள் அதிகளவு சிகிச்சைப் பெற வருகை தருகின்றனர். கல்முனை பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகள் சுகாதார வைத்திய அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் தனது அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, தான் பதவி விலகப் போவதாக சுவீடன் பிரதமர் தெரிவித்துள்ளார். 55 வயதான மாக்டலேனா ஆண்டர்சன் இன்று (வியாழக்கிழமை) அதிகாரப்பூர்வமாக இராஜினாமா செய்வதாக கூறினார். மிதவாதக் கட்சியின் தலைவர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் இப்போது அரசாங்கத்தை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய புள்ளிவிபரங்கள், அவரது கட்சியான மிதவாதிகள், சுவீடன் ஜனநாயகக் கட்சியினர், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியினர் மற்றும் லிபரல் கட்சிகளுடன் இணைந்து 349 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 176 இடங்களைப் பிடிக்கும் என்று தெரிகிறது. ஆண்டர்சனின் மத்திய-இடது கூட்டணி 173 இடங்களில் வெற்றி பெறும். 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டன. ஒரு சில வாக்குகள் எண்ணப்பட உள்ளன, ஆனால் முடிவுகள் கணிசமாக மாற வாய்ப்பில்லை மற்றும் வார இறுதியில் உறுதிப்படுத்தப்படும். இந்த முகாமில் சுவீடன் ஜனநாயகக் கட்சியும் அடங்கும், இது அதிகரித்து வரும் கும்பல் துப்பாக்கிச் சூடுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்த…
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள்ள மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் வழங்கப்பட்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த மதிய உணவில் பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க போலிக் அமிலம், இரும்புச்சத்து மற்றும் விற்றமின்கள் அடங்கியதாக திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம், உணவுப் பற்றாக்குறை என்பன பாடசாலை மாணவர்களின் போசாக்கு விடயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால், ஆரம்பப் பிரிவுகளில் உள்ள பிள்ளைகளின் போசாக்கை உறுதிப்படுத்தும் வகையில் உணவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் வழக்குப் பொருளான 26 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உப சேவைஅதிகாரிகளின் பிடியில் இருந்த இந்தப் பணம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போனது தெரிய வந்துள்ளது. எனவே, எந்தவொரு அதிகாரி மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை மற்றுமொரு சோதனையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பணத்தில் இருந்து காணாமல் போன தொகையை மூடிமறைப்பதன் மூலம் அதன் அதிகாரிகள் சிலர் இந்த திருட்டை மூடிமறைக்க முயற்சிப்பதாகவும் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வெந்து தணிந்தது காடு இப்படங்களின் வரவேற்பை தொடர்ந்து ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று தமிழகம் முழுவதும் 600-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் இதனை விழாக்கோலமாக கொண்டாடி வருகின்றனர். இதையும் படியுங்கள்: ஃபயர் புஷ்பாவாக மாறிய கோவை சரளா வெந்து தணிந்தது காடு இதையடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பேசிய நடிகர் சிம்பு ”எல்லோரும் மனசார கூல் சுரேஷுக்கு நன்றி சொல்லிதான் ஆகவேண்டும். அவர் வேற லெவல். படத்துக்கு அவர் தனி…
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் 130 இந்திய வம்சாவளியினர் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகளை விட, ஜோ பைடன் இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது. மேயர்கள் உள்பட அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 4 பேர் உள்ளதுடன், 20இற்கும் மேற்பட்டவர்கள் முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு அலுவலகங்களுக்கு 40இற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் எதிர்வரும் காலங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை காரணமாக நுரைச்சோலை லக்விஜய (Lakvijaya) நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
சீதுவை பகுதியில் விஹாரை ஒன்றில் தேரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதுடைய தேரர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.