37,000 மெற்றிக் தொன் பெற்றோல், 100,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் இன்று இறக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், 40,000 மெற்றிக் தொன் டீசல் இறக்கும் பணிகள் நாளை நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Author: admin
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி இலங்கையில் நடைபெறும் 23வது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியாகும். இந்த புத்தகக் கண்காட்சி இன்று முதல் செப்டம்பர் 25ஆம் திகதி வரை காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை நடைபெறுகிறது. கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று காலை கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு நடத்த முடியாததால், இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் 400 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச புத்தகக் கடைகள் சேர்க்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக, புத்தகக் கண்காட்சி இரவு 07.00 மணிக்கு முடிவடையும் அதே நேரத்தில் சுகாதார அமைச்சகம் வழங்கிய கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
பேராதனை பல்கலைக்கழக சட்ட பீடத்தின் இரண்டு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில், மூவர் காயமடைந்துள்ளனர். இறுதி ஆண்டு மாணவர் குழுவொன்று, மூன்றாம் ஆண்டு மாணவர் குழுவொன்றின் மீது சிற்றுணவகத்தில் வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக, பேராதனை பல்கலைக்கழக கலைப் பீட பதில் பொறுப்பதிகாரியான பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர்களுள், இரு மாணவிகள் கண்டி வைத்தியசாலையிலும், ஒரு மாணவன் பேராதனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 14 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கையடக்கத் தொலைபேசி பாவனையினால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கும் பார்வைக்கும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்திய ஆலோசகர் வைத்தியர் வருண குணதிலக்க இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இதற்கமைய 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளைக்கு 02 மணி நேரம் மட்டுமே கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று முதல் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாவதால் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள், எரிச்சல், ஆக்ரோஷமான நடத்தை மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன. அதேபோன்று சரியான முடிவுகளை எடுக்கும் திறனையும் பாதிக்கின்றது என வைத்திய ஆலோசகர் வைத்தியர் வருண குணதிலக்க தெரிவித்துள்ளார். இருப்பினும், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கணினி அல்லது மடிக்கணினி பயன்படுத்தும் திரை மற்றும் கண்களுக்கு இடையே 18 அங்குல இடைவெளியை பராமரிப்பது கணினியைப் பயன்படுத்த மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட முறையாகக் கருதப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார். எனவே, சிறுவர்கள் தங்கள்…
இரத்தினபுரி பிரதேசத்தில் 7 வயது சிறுமியை கொன்று காட்டில் இரகசியமான முறையில் புதைத்த வழக்கின் பிரதான சந்தேக நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கலவான – தெல்வல கங்கபஹல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் நேற்று (15) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சமீபத்தில், இந்த சிறுமி கொல்லப்பட்டு காட்டுக்குள் இரகசியமான முறையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுமியின் சடலம் செப்டெம்பர் 11ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயும் மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரதான சந்தேக நபரின் 30 வயதுடைய மனைவி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தேசிய அமைப்பாளராக செயற்படும் நாமல் ராஜபக்ச, கட்சி மாநாட்டின்போது தேசிய அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார். இதற்கமைய கட்சியை பலப்படுத்தும் பொறுப்பு நாமலிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அந்த பணியை முழுமையாக முன்னெடுப்பதற்காகவே நாமல் ராஜபக்ச அமைச்சு பதவியை ஏற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கட்டடத் தொகுதியின் கீழ்த் தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான நிலையம் நேற்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணியளவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் சம வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களின் எதிர்பார்ப்புகளினை பூர்த்தி செய்வதற்காகவும், இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழாவில் கலைப் பீடாதிபதி கே.சுதாகர், வாழ்வக இயக்குநர் ஆ.ரவீந்திரன் ,விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். உலக வங்கியின் செயற்றிட்டத்தில் 18மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்நிலையம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இம்மாதம் இறுதியில் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் நெருக்கடியை சமாளிக்கும் விதமாக தமது பிரதான இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா மற்றும் இந்தியாவுடன் கலந்துரையாடல்களை முன்னெடுக்க அழைக்குமாறு ஜப்பானுக்கு வலியுறுத்துவார் எனவும் ஜனாதிபதி செயலகத்தின் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரங்கள் அவரது நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக இருக்கும் எனவும், ஜனாதிபதி ரணில், ஜப்பானிய பிரதமரை டோக்கியோவில் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் முன்னெடுக்கும் நிகழ்வில், தற்போதைய நெருக்கடி மற்றும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டமிடப்பட்ட சீர்திருத்தங்கள் பற்றிய அண்மைக்கால தீர்மானங்கள் குறித்தும் ஜனாதிபதி முன்வைப்பார் என ஜனாதிபதி செயலகத்தின் வட்டாரம் தெரிவிக்கின்றது. ஜனாதிபதியின் இந்த விஜயம் இம்மாதம் 25 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் எனவும் செப்டெம்பர் 30ஆம் திகதி…
கணனி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவில் சான்றிதழ் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரும் வரை, உரிய நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், ஏனைய தூதரக சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.