முட்டை கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று இடைநிறுத்தப்பட்டதுடன், புதிய கட்டுப்பாட்டு விலையை இன்று அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.
Author: admin
2022ஆம் ஆண்டுக்கான கொடுப்பனவுகளை பெறுவதில்லை என இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன தீர்மானம் எடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு பல பில்லியன் ரூபாவை சேமிக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக நம்பத்தகுநத வட்டாரங்கள் தெரிவிக்கன்றன. அந்த வகையில், கடந்த வாரம் 12.5 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயுவில் 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. அந்த வகையில், தற்போது 200 ரூபாய் அளவில் எரிவாயு விலை இந்த வாரம் குறைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலையை இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 225 ரூபாயால் குறைப்பதற்கு இன்சீ சீமெந்து சீமெந்து நிறுவனம் தீர்மானித்துள்ளது. சன்ஸ்தா மற்றும் மஹாவலி மரைன் சீமெந்து வகைகளை விற்பனை செய்யும் இன்சீ சீமெந்து நிறுவனத்தின் சீமெந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டு புதிய விலையாக 2,750 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 50 கிலோகிராம் நிறையுடைய இன்சீ சன்ஸ்தா மற்றும் இன்சீ மஹாவலி மரைன் பிளஸ் சீமெந்து மூடையின் விலை 225 ரூபாவினால் குறைக்கப்படும் என இன்சீ சீமெந்து நிறுவனம் அறிவித்துள்ளது. நிர்மாணத் தொழில் துறையைக்கு உதவும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ள நிறுவனம் சீமெந்தின் புதிய விலையாக 2,750 ரூபாயை அறிவித்துள்ளது.
லங்கா சதொச இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளன. பருப்பு 4 ரூபாவினாலும், கோதுமை மா 15 ரூபாவினாலும் வெள்ளைப்பூடு 35 ரூபாவினாலும் பெரிய வெங்காயம் 9 ரூபாவினாலும் டின் மீன் (உள்நாட்டு) 5 ரூபாவினாலும் குறைத்துள்ளது. அதடிப்படையில் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 385 ரூபாய், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 250 ரூபாய் வெள்ளைப்பூடு ஒரு கிலோகிராம் 460 ரூபாய் பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் 190 ரூபாய் டின்மீன் 490 ரூபாய்
பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தற்போது கொண்டு வரப்படும் அரிசி தொகை மற்றும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதங்கள் வௌியிடப்பட்ட ஓடர்களை விசேட அனுமதிப் பத்திரத்தின் ஊடாக துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் அதிகரித்துள்ளன. பட்டப்படடிப்பை நிறைவுசெய்யாத 700 முதல் 800 வரையான மாணவர்கள் எல்லா பல்கலைக்கழகங்களிலும் இருக்கின்றனர். இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர். ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சிகளை சேர்ந்தவர்களே அவர்கள். இவர்கள்தான் குழப்பம் விளைவிக்கின்றனர். இதற்கு முடிவு கட்ட வேண்டும். அதேவேளை, பல்கலைக்கழகம் தெரிவாகும் மாணவர்களுக்கு, மூன்று, நான்கு மாதங்களாவது இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்க வேண்டும்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தாமரை கோபுரம் பெர்சனல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன அலோசியஸுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அடிக்குறிப்பை பதிவிட்ட கும்பலை திருடர்கள் என்று சொல்ல ஆளும்கட்சியின் பிரதம அமைப்பாளர் முயற்சி செய்கிறார். உங்கள் வழக்கு நன்றாக நடக்கும் என்று நினைத்தோம். இன்று திருடர்களுடன் திருடர்களும் உள்ளனர். அர்ஜுன் அலோசியஸுடன் தொடர்புடைய சிங்கப்பூர் நிறுவனத்திற்கு லோட்டஸ் டவர் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (13) இடம்பெற்ற நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்ரவதை, தற்கொலை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்கிற ஆலோசனை குழு கடந்த 2016 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட சிவில், மனித உரிமைகள் மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஆலோசனை குழு வெறுப்பு, துன்புறுத்தல் மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான நிபுணத்துவத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் ட்விட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது ட்விட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை கலைத்து அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த குழு நேற்று முன்தினம் இரவு ட்விட்டர் பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக குழு கலைக்கப்படுவதாக மின்னஞ்சல் மூலம் ட்விட்டர்…