எதிர்வரும் 19 ஆம் திகதி அரச விடுமுறை என்று அறிவித்திருந்தாலும் குறித்த விடுமுறை தினத்திலும் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறுமென என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக நியமித்தவர்களுக்கு குறித்த தினதில் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Author: admin
கொரோனாவின் எதிர்கால வைரஸ் திரிபுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் விழிப்புணர்வைத் தக்க வைத்துக் கொள்ளுமாறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உலக நாடுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உலகம் ஒருபோதும் சிறந்த நிலையில் இருந்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2019 ஆண்டின் இறுதிப்பகுதியில் சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 6.5 மில்லியன் மக்கள் உயிரிழந்திருந்தனர். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர், கொரோனா மரணங்கள் மிகவும் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. எனினும், கொரோனாவின் எதிர்கால வைரஸ் திரிபுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் விழிப்புணர்வைத் தக்க வைத்துக் கொள்ளுமாறும் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், உலக நாடுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கடினமாக ஓட வேண்டிய நேரம் இதுவென்றும், தங்களது கடின உழைப்பின் பலனைப் பெறமுடியும் என்று தெரிவித்துள்ள அவர்,…
ராஜபக்ஸ குடும்பத்தின் மோசமான ஆட்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான சவால்கள் உட்பட இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண விரிவான சர்வதேச அணுகுமுறையைக் கோரும் பிரேரணை அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணையை அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவர் உள்ளிட்ட நான்கு செனட்டர்கள் முன்வைத்துள்ளனர். ராஜபக்ஸவின் ஆட்சி மிகவும் ஊழலான குடும்ப ஆட்சி என்பதுடன், வெளிப்படைத்தன்மையற்றது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த ஆட்சியில், மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் பணிகளை சவாலுக்கு உட்படுத்துவோரை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டதாக செனட்டர்கள் தமது பிரேரணையில் குறிப்பிட்டுள்ளனர். ராஜபக்ஸ குடும்ப ஆட்சியில் விவசாயம் தொடர்பான தவறான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியமை, நீடித்து நிலைக்க முடியாத மாபெரும் திட்டங்களுக்காக சீனாவிடம் பில்லியன் கணக்கான டொலர்களை கடனாகப் பெற்றமை, பொது வளங்களை தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தியமை என்பனவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.…
பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள் பகுதி நேர வேலை வாய்ப்புகளை வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சுமார் 300 மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியரும் விசேட சத்திரசிகிச்சை நிபுணருமான டொக்டர் எம்.டி.லமாவங்ச தெரிவித்தார்.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்தாரிகளில் ஒருவரான மொஹம்மட் இன்பாஸ் என்பவருடன் தொடர்பை பேணிய 6 பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதிபத்திரம் இன்றி வெடிக்குண்டுகளை தயாரித்தமை மற்றும் அதற்கு உதவி செய்த குற்றச்சாட்டுக்களில், குறித்த 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்றப்பத்திரம் கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு, முன்னாள் அணித்தலைவரான மஹேல ஜயவர்தன பயிற்றுவிப்பு ஆலோசகராக இணைந்துக் கொள்வார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயற்பட்ட மஹேல, நேற்று மும்பை இந்தியன்ஸிற்கு சொந்தமான மூன்று அணிகளின் செயற்திறன் மேற்பார்வையாளராக தரம் உயர்த்தப்பட்டிருந்தார். இந்த நிலையில், அண்மையில் ஆசியக் கிண்ணத்தை வென்று வலுவான வீரர்களை கொண்ட இலங்கை அணியை மேலும் வலுவூட்டுவதற்கு மஹேல ஜயவர்தன அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக செயற்படவுள்ளார். இது இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணிக்கு பலம் சேர்க்கும் விடயமாக பார்க்கப்படுகின்றது. இன்று அல்லது நாளை ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணியின் 15பேர் கொண்ட விபரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை உபாதையில் இருந்த வேகப்பந்து வீச்சாளரான துஸ்மந்த சமீர உலகக்கிண்ண அணியில் இடம்பிடிப்பார் என அணித்தலைவர் தசுன் சானக உறுதிப்படுத்தியுள்ளார். பல்லேகலையில் நடைபெறும் இலங்கை…
கொழும்பு தாமரைக் கோபுரத்தை பார்வையிட நாளை (வெள்ளிக்கிழமை) முதல் நாள் ஒன்றுக்கு 1400 முதல் 2000 பேருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது மக்கள் ரூ.500 மற்றும் ரூ.2,000 கட்டணங்களில் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடசாலை மாணவர்களுக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் 200 ரூபாயெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெளிநாட்டினருக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் 20 அமெரிக்க டொலராகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் மக்கள் தாமரைக் கோபுரத்தை பார்வையிடலாம். கொழும்பு தாமரைக் கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேருவளை – மாகல்கந்த கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். இன்று காலை 11.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த, 18 மற்றும் 19 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேநேரம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றுமொரு நபர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
அடுத்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணத்தை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிக்குமாறு ஆலோசனை கிடைத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. நீர் கட்டணங்களை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை சபாநாயகருக்கு இன்று (15) அனுப்பவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வர்த்தகப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களால் சுமார் 3 மில்லியனுக்கும் அதிக கட்டணம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டார்.