காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.15 மணியளவில் ஜனாதிபதி பிரித்தானியா நோக்கி புறப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் இது என தெரிவிக்கப்படுகிறது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி 20ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Author: admin
மட்டக்களப்பு – கோறளைப்பற்று, மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பழைய விலையில் உள்ள பால்மா பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் முற்றுகையிடப்பட்டு, பால்மாக்களும் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமைய கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை பிரதேசத்தை அண்டிய பிறைந்துரைச்சேனை மாவடிச்சேனை பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் சில்லறை வியாபார நிலையமொன்றில் 540.00 ரூபா 790.00 ரூபா ஆகிய பழைய விலையில் பதுக்கி வைக்கப்பட்ட 400 கிராம் பால்மா பறிமுதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. பால்மா புதிய விலையான 1,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்கலும் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள்…
சர்வதேச வர்த்தகத்தை கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகத்தை நிறுவ இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தங்களுக்கான பணிகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு மேலும் பல வாய்ப்புகள் உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்திய சமூகம் (SLIS) கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் நேற்று (15) மாலை நடத்திய ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். இந்தியாவுடன் வர்த்தக ஒருங்கிணைப்பை எட்டுவது முக்கியமானது. 2048 ஆண்டாகும் போது வறுமை இல்லா, வளமான நாடாக உருவாக வேண்டும். உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு போதுமான மொத்த உள்நாட்டு வருமானம் இருக்க வேண்டும். இல்லை என்றால் வளமான பொருளாதாரம் இருக்க வேண்டும். வர்த்தக ஒருங்கிணைப்பே, அண்டை நாடான இந்தியாவுடனான நமது உறவை, தீர்மானிக்கிறது.…
2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணியின் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கு 2 மில்லியன் ரூபாவை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 10 மில்லியன் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு 5 மில்லியன் ரூபாவும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கு 25% வீதமும் விளையாட்டு நிதியிலிருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசியாவின் (கிரிக்கெட், வலைப்பந்தாட்ட) செம்பியன்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் 155.7 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி அதானி தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 273.5 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்புடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார். அதானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இவ்வளவு நிகர மதிப்பு அதிகரிப்பைக் கண்டது உலகின் முதல் 10 பணக்காரர்களில் அதானி மட்டுமே. இந்த ஆண்டில் அதானியின் சொத்து மதிப்பு அசுர வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானியை முதன்முதலில் முந்தினார் அதானி. அதே போல கடந்த மாதம் உலகின் நான்காவது பணக்காரரான மைக்ரோசொப்ட் நிறுவனரான பில் கேட்ஸை விஞ்சினார்.…
USAID நிர்வாகி சமந்தா பவர் சமீபத்திய விஜயத்தின் தொடர்ச்சியாக, அமெரிக்காவானது USAID ஊடாக இலங்கைக்கு மேலதிகமாக 65 மில்லியன் டொலர்களை (23 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிகமாக) ஒரு ஐந்தாண்டு காலப்பகுதியில் உதவியாக வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் இன்று அறிவித்தரர். இந்த உதவியானது USAID மற்றும் மாலைதீவிற்கான செயட்பணிப் பணிப்பாளர் மற்றும் நிதி ,பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சின் செயலாளரால் ஒப்பமிடப்பட்டு அபிவிருத்தி நோக்கங்களுக்கான உதவி ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படுகிறது
ஸ்கொட்லாந்து வான்பரப்பை இரவு நேரத்தில் மிகப்பெரிய எறிகல் கடந்து சென்ற வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் வானை கிழித்தபடி எறிகல் கடந்து சென்ற காட்சியை, பைய்ஸ்லே பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோவாக பதிவிட்டு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். முதலில் அந்த எறிகல், வானில் சுற்றும் செயற்கைக்கோள் அல்லது விண்கலத்தின் உடைந்த பாகங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று பிரிட்டன் எறிகல் ஆய்வு மையம் கருதியது. ஆனால் சிறிது நேரம் கழித்தபிறகே, அது எறிகல் என்பதை அந்த மையம் உறுதிபடுத்தியது.
“ஓசோன் படலத்தை காப்போம்’ என்ற தொனிப் பொருளில சர்வதேச ஓஸோன் தினத்தை முன்னிட்டு இன்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மாணவர்களிடைய நடாத்தப்பட்ட சித்திரம் மற்றும் ஆக்க செயற்பாட்டு கண்காட்சியும் இடம் பெற்றது . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலை அதிபர் யூ.எல்.எம்.அமீன் கலந்து கொண்டு சிறப்பித்தார். எஸ்.எம்.எம்.றம்ஸான்
திறமைகளை கொண்ட வீரர்களை அடையாளம் கண்டு, இலங்கையின் தேசிய அணியில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டம் ஒன்றினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் தேசிய வளர்ச்சிப் பயணத்திற்கான வேலைத்திட்டத்தின் கிராமத்து கிரிக்கெட் என்ற தொனிப்பொருளில் இத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டம் பொலனறுவை மாவட்டத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் நேற்று ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, முதல் நாள் வருமானம் 15 இலட்சத்தை அண்மிக்கும் என தாமரைக் கோபுரத்தின் தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். இதேவேளை, நேற்று 2612 பேர் கொண்ட குழுவொன்று தாமரை கோபுரத்தை பார்வையிட வந்துள்ளதாகவும் அவர்களில் 21 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் 30,600 சதுர மீற்றர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுர கட்டடம் நேற்று முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. அதன்படி வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் வார இறுதி நாட்களில் பிற்பகல் 12 மணி முதல் இரவு 12 மணி வரையிலும் தாமரை கோபுரத்தை பார்வையிட வாய்ப்பு…