தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 146பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2:44 மணிக்கு டைடுங் நகருக்கு வடக்கே 50 கிமீ (30 மைல்) தொலைவில் 10 கிமீ (4 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள், ரயில்கள் குலுக்கும் காட்சிகள் சமூக சலைதளங்களில் வெளியாகி உள்ளன. தாய்வானில் கடந்த 1999ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்துக்கு 2,400 பேர் வரை உயிரிழந்தனர். அதுவே அங்கு கடைசியாக ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக அறியப்படுகிறது. தாய்வான் பசிபிக் வளைய பகுதியில் அமைந்துள்ளதால் தாய்வானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
Author: admin
இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவது குறித்த புற்றுநோய் மருத்துவ நிபுணர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது. நாடு முழுவதுமிருந்து 100 இற்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை எப்படி கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு மேம்படுத்தப்பட்ட சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் கூறுகையில் “இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, பாரம்பரிய உணவு பழக்கவழக்கத்தின் மாற்றம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக கூறினர். மருத்துவ நிபுணர்கள் இதனை தடுக்க உணவு பழக்கவழக்கங்களை மீண்டும் பாரம்பரிய முறையில் மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர். மேலும் ஆரம்ப நிலையில் கண்டறிய பெண்கள் அடிக்கடி மார்பக புற்றுநோய் குறித்து…
நேற்று (18) உள்நாட்டு பெரிய வெங்காயம் மற்றும் மரக்கறிகளின் மொத்த விலைகள் குறைந்துள்ளதாக தம்புள்ளை மொத்த மரக்கறி வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று 10 இலட்சம் கிலோ மரக்கறிகளும் 5 இலட்சம் கிலோ உள்ளூர் வெங்காயமும் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். மரக்கறிகளின் மொத்த விற்பனை அதிகரிப்புடன் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், போஞ்சி மற்றும் கறி மிளகாய் தவிர மலையகம், தாழ்நிலம், யாழ்ப்பாணம் மற்றும் வடமேல் மாகாணங்களின் மரக்கறிகளின் கையிருப்பு குறைந்துள்ளதாக தம்புள்ளை விசேட பொருளாதார வர்த்தக நிலையத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இலங்கையில் 96 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்து இருபது வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்தநிலையில், நாராஹென்பிட்டி கொத்தலாவல ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அந்த நிறுவனத்தின் இயக்குனர் விக்யன் குமார் இவ்வாறு தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது 214 ஐ.ஓ.சி. எரிவாயு நிலையங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை உடனடியாக 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள பல தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அநதவகையில், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான மஸ்கெலியா கிளன்டில்ட் தோட்டத்திலும் போராட்டம் நடத்தப்பட்டது. அத்தோடு, லக்ஷபான மற்றும் பிரவுன்ஸ்வீக் தோட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாட்டில் உள்ள ஏனைய பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் உள்ள அனைத்து தேயிலை தோட்டங்களிலும் நாளாந்த சம்பளம் 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய்வரை வழங்கப்படுவதாக தெரிவித்தார். மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் மட்டும் 1000…
யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமாரியாக வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோண்டாவில் கிழக்கை சேர்ந்த ச. துசாளன் (வயது 18) எனும் இளைஞன் மீதே வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவாலி கிழக்கு பகுதியில் உள்ள நண்பனின் பிறந்தநாளுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று விட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை நவாலி சம்பந்தப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை குழு வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் வன்முறை கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கொள்வதற்காக வீதியில் ஓடிய போதிலும் துரத்தி துரத்தி சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டு விட்டு வன்முறை கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை அவ்விடத்தில் நின்றவர்கள் மீட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து 17ஆம் திகதி இயந்திர படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற மூன்று மீனவர்களில் ஒருவர் நேற்று (18) கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக அவருடன் சென்ற இரண்டு மீனவர்களும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். கடலுக்குச் சென்று மரணமடைந்த நபர் மாவடிச்சேனை அஹமட் ஹிராஸ் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான இப்றா லெப்பை கலீல் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய மகாராணி மறைந்த இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு இன்று (19) இடம்பெறவுள்ளது. இறுதி சடங்கில் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், மகாராணியின் இன்றைய இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் மறைந்த எலிசபெத் மகாராணியின் உ டலுக்கு நேற்று (18) இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
காலி ‘சமனல’ மைதானத்தில் நடைபெறவுள்ள ‘குளோக்கல் ஃபேர் 2022’, தொழிலாளர் அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும், உள்ளூர் மற்றும் சர்வதேச வேலைவாய்ப்பு வழங்குநர்களையும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கும். இதன் மூலம் அமைச்சினால் வழங்கப்படும் சேவைகள், தொழிலாளர்களின் தொழிலாளர் மற்றும் நலன்புரி பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுவதற்கு அப்பகுதி மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய முறை மற்றும் உத்தியோகபூர்வ வழிகளில் வருமானத்தை செலுத்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பான அனைத்து விடயங்களையும் பொதுமக்கள் அணுக முடியும் என்றார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: நாட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்கு தொழிலாளர் அமைச்சகம் பொறுப்பு. முழு நாட்டினதும் மனிதவளத்திற்கு எமது அமைச்சு பொறுப்பு. எமது…
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்ககோரிய ஊர்திவழி கையழுத்து போராட்டம் இன்று (ஞாயிற்க்கிழமை) வவுனியாவை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையான ஊர்திவழி கையெழுத்து போராட்டம் காலை 10 மணியளவில் வவுனியா தமிழரசுகட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் ஆரம்பிக்கப்பட்டு நகரின் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டதாக அறியமுடிகின்றது. குறித்த போராட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதி்ராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளையின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.