Author: admin

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று (13) பிரித்தானிய பிரென்ட் சந்தையில் கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 74.17 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 70.4 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 75 அமெரிக்கா டொலர்களாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்த நிலையில் தற்போது குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பால் மா விலை குறைப்பு தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும், குறைக்கப்பட்ட விலைகள் அல்லது திகதிகள் குறித்து உறுதியான முடிவு எட்டப்படவில்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். திங்கட்கிழமை (15) விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்தை எட்ட எதிர்பார்த்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும், ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நேற்று (12) அறிவித்தார். இதேவேளை, இன்று (13) முதல் சீனி இறக்குமதியாளர்களின் கடைகளை சோதனையிடுவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் சீனியின் விலையை அதிகரிக்க வேண்டாம் என இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

வவுனியாவில் இன்று (13) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒரு பிள்ளையின் தாயை நபர் ஒருவர் சுட்டுக் கொன்றதுடன், தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வவுனியா, பறயனாலங்குளம், நிலியமோட்டையில் உள்ள வீடொன்றில் வைத்து பெண் ஒருவர் இன்று (13) அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பின்னர் சந்தேக நபரும் இன்று காலை நிலியமோட்டை கோவிலுக்கு அருகில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேகநபர் அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த பெண் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நிலியமோட்டை பிரதேசத்தில் குடியேறியுள்ளார். திருமணத்திற்கு முன்னர் குறித்த சந்தேக நபருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரிடம் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சவூதி அரேபிய இராச்சியமானது தனது குடிமக்கள் மற்றும் சகோதர மற்றும் நட்பு நாடுகளின் பிரஜைகளை சூடானிலிருந்து வெளியேற்றும் அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகளையும் நிறைவு செய்துள்ளதாக இலங்கைக் குடியரசிற்கான சவூதி அரேபியாவின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்தார். இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசர் ஆகியோரின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும் மற்றும் உலகின் பல்வேறு நாடுகள் சவூதி அரேபியாவிடம் முன்வைத்த வேண்டுதல்களுக்கு இணங்கவும் இவ்வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சவூதி இராச்சியத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான வெளியேற்ற நடவடிக்கைகளின் போது மொத்தமாக 8,455 பேர் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் 404 சவூதி குடிமக்களும், 32 இலங்கையர்கள் உட்பட 110 நாடுகளைச் சேர்ந்த 8,051 பேர்களும் உள் அடங்குவர். இவர்கள் சவூதி அரேபிய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் மற்றும் சவூதி அரேபிய விமானப்படை விமானங்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். அவ்வாறே சவூதி அரேபியா, தனது சகோதர மற்றும்…

Read More

வர்த்தக வங்கிகளில் இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி இன்று மேலும் குறைவடைந்துள்ளது. மக்கள் வங்கியில் நேற்று டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 305.59 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 322.51 ரூபாவாகவும் நிலவியது. இன்று அங்கு டொலரின் கொள்வனவு பெறுமதி 303.63 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 320.97 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன. கொமர்சியல் வங்கியில் நேற்று டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 307.58 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 320 ரூபாவாகவும் நிலவியது. இன்று அங்கு டொலரின் கொள்வனவு பெறுமதி 304.84 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 318 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன. சம்பத் வங்கியில் நேற்று டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 307 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 322 ரூபாவாகவும் நிலவியது. இன்று அங்கு டொலரின் கொள்வனவு பெறுமதி 306 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 321 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளன.

Read More

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த 16 வயதுடைய சிறுமி, சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளாரா என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த சிறுமியுடன் விடுதிக்குச் சென்ற 22 வயதான இளைஞன், உயிரிழந்த சிறுமியை சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு 20,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய யோசனை கூறியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதன்படி, பிரதான சந்தேக நபர் பணத்தின் ஒரு பகுதியை அவரிடம் வழங்கியுள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும் இது தொடர்பான முழுமையான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் நேற்று (12) களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More

இந்நாட்டில் பயிற்சி பெற்ற தாதியர்களுக்கு சிங்கப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, தாதியர் மற்றும் பணி அனுபவத்தில் பட்டம் அல்லது டிப்ளாமா பெற்ற வல்லுநர்கள், அதே போல் பொது தாதியர் கல்லூரிகளில் பயிற்சி மற்றும் பணி அனுபவம் உள்ள தாதியர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைகளில் தாதியர் தொழிலில் சேரலாம். இதன்படி சிங்கப்பூர் வேலைக்கான தகைமைகளை பூர்த்தி செய்து வேலை பெற்ற முதல் குழுவைச் சேர்ந்த 36 தாதியர்களுக்கு விமான டிக்கெட் வழங்கும் நிகழ்வு நேற்று (12) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக கேட்போர் கூடத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது. விண்ணப்பதாரர்கள் எந்த கட்டணமும் இல்லாமல் இந்த வேலைகளை அணுகுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் சிங்கப்பூர் தாதியர் வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்புகளை நடத்தும் இலங்கை வேலைவாய்ப்பு முகவர்…

Read More

100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளுக்கு வழிவகுத்த வைரஸ் நோயான mpox க்கான 10 மாத கால உலகளாவிய சுகாதார அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஜூலை 2022 இல் அpழஒ ஐ சர்வதேச கவலையின் பொது சுகாதார அவசரநிலை (PHEIC) அறிவித்தது மற்றும் நவம்பர் மற்றும் பெப்ரவரியில் அதன் நிலைப்பாட்டை ஆதரித்தது. றுர்ழு டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அமைப்பின் அவசரக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நோய்க்கான அவசரகால நிலை முடிவுக்கு வருவதாக அறிவித்தார். உலகளவில் வழக்கு எண்கள் குறைந்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டெட்ரோஸ் கூறினார், ஆனால் இந்த நோய் ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது, குறிப்பாக ஆப்பிரிக்காவின் பகுதிகளில் இது நீண்ட காலமாக உள்ளது என்று வலியுறுத்தினார். கோவிட்-19 இனி PHEIC ஆக இல்லை என்று UN நிறுவனம் அறிவித்த ஒரு வாரத்தில்தான் இந்த அறிவிப்பு விடுத்துள்ளது.

Read More

மின்சாரத்துறை தொடர்பான புதிய சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பான சம்பந்தப்பட்ட சட்டமூலத்தை தயாரித்த பின்னர், அதன் நகல்களை பங்குதாரர்கள், மேம்பாட்டு முகவர்கள் மற்றும் மறுசீரமைப்பு நிபுணர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அவரது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். சட்டமூலம் தொடர்பான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைபு இம்மாத இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய நாகவத்தை தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதில் காயமடைந்த 4 பேர் தற்போது மன்ராசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். தேயிலை செடிக்குள் இருந்த குளவிக்கூடு களைந்ததனாலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Read More