Author: admin

பயிர்களை அழிக்கும் குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவற்றை கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் வன விலங்குகள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதாகவும் விவசாயிகள் இதன்போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர். இதன்படி, குரங்குகள், மயில்கள், ராட்சத அணில், முள்ளம்பன்றிகள், காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகள் அழிந்து வரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

Read More

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான மேலதிக தீர்மானங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பணம் வழங்குவதில் உள்ள தடை குறித்து திறைசேரி செயலாளர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிதி வழங்குவதில் உள்ள சிரமங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து திறைசேரி செயலாளர் விளக்கியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட திகதிகளில் வாக்குசீட்டுகளை வழங்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

உள்ளூராட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சுக்கு முன்பாக இடம்பெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு நிதி இல்லை என கூறுவதற்கு முன்னர் உரிமைகளை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ரஞ்சித் மத்தும பண்டார கேட்டுக்கொண்டுள்ளார். திவாலான நாட்டில் மக்களின் வாக்குரிமையை இல்லாது செய்து ஜனநாயகத்தையும் திவாலாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

Read More

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள ராமர் பாலம் தொடர்பிலான வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தின் போது, ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரியும் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, சம்பந்தப்பட்ட அமைச்சின் மனுதாரர் கோரிக்கை வைக்க முடியும் எனவும் நான்கு வாரத்தில் உரிய பதில் கிடைக்காவிடின் நீதிமன்றத்தை அணுக முடியும் என்றும் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து ஆலோசனை இடம்பெற்று வருவதாக இந்திய மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. எனினும், ராமர் பாலம் தொடர்பில் மத்திய…

Read More

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்தோடு இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை நிலவும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் நிறைந்து காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம் என நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நிதியமைச்சின் செயலாளர் இது தொடர்பில் அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார். அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே பணம் ஒதுக்கப்பட வேண்டுமெனவும், அந்த சுற்றறிக்கையின் கீழ் தேர்தல் நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவையாக குறிப்பிடப்படவில்லை எனவும் நிதியமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறினார். அத்தியாவசிய சேவைகள் பிரிவில் இல்லாத நிறுவனங்களுக்கு பணத்தை வழங்குவதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அங்கீகாரம் பெறப்பட வேண்டுமென நிதி அமைச்சின் அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டார்

Read More

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலுக்கு மாத்திரம் பயன்படுத்த விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார துறை முட்டைகளை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது. முட்டை இறக்குமதி மற்றும் கால்நடை அபிவிருத்திக்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில், இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் பேக்கரி தொழிலுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றை பொது உபயோகத்திற்காக கடைகளில் விற்பதற்கு அனுமதிக்கக் கூடாது எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பேக்கரிகளில் முட்டைகளைப் பயன்படுத்தும் போது கையுறைகளைப் பயன்படுத்தவும், முட்டை ஓடுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும் அல்லது அழிக்கவும், மீதமுள்ள முட்டை ஓடுகள் சுற்றுச்சூழலுக்கு விடப்படாமல் பார்த்துக் கொள்ளவும் அமைச்சர் அறிவுறுத்தினார். பறவைக் காய்ச்சல் வைரஸ் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது

Read More

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த தினத்துக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. பெப்ரவரி 1 முதல் விண்ணப்பங்கள் இணையம் ஊடாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் 28ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிபர்கள் ஊடாக பாடசாலை விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிக்ன முடியும். தனியார் விண்ணப்பதாரர்கள் தேவையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தாங்களாகவே விண்ணப்பிக்க முடியும். www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic அல்லது பரீட்சை திணைக்களத்தின் ‘Exams Sri Lanka’ என்ற அலைபேசி செயலி ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

Read More

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை 15 சதவீதம் குறைத்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் மாதாந்த சம்பளத்தினை நம்பியிருக்கும் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த தீர்மானத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த தீர்மானத்தினால் சுகாதார சேவை பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் சமந்த கோரளேராச்சி தெரிவித்துள்ளார்.

Read More

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ரிச்டர் அளவுகோலில் 3.6 ஆக லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More