Author: admin

பாராளுமன்றத்தில் இன்று (07) விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பிலும் அறிவித்தார். நாடு, நிலையானதன் பின்னர் தேர்தல் நிச்சயம் நடக்கும் என்றார். நாட்டின் பொருளாதாரத்தை நிலையானதாக்குவதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுடன் கைகோர்க்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, நாடு நிலையானதும் தேர்தல் நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.

Read More

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது 1993ஆம் ஆண்டு வர்த்தமானி ஊடாக பிரதேச செயலகமாக அறிவிக்கப்பட்ட ஒரு பிரதேச செயலகம். இதற்கு கணக்காய்வாளர் இல்லை என்று சொல்வதோ அல்லது நியமிக்கப்படவில்லை என்று சொல்லுவதோ ஒரு அலட்சியமான பதில். இலங்கையில் பிரதேச செயலகம் ஒன்றுக்கு கணக்காய்வாளர் தேவையில்லை என்று நீங்கள் எவ்வாறு கூறலாம். இது முற்றுமுழுதாக ஒரு தவறான விடயம். உங்களுடைய பொது நிர்வாக அமைச்சினுடைய செயல்பாடுகள் மிகவும் மோசமாகவுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடத்துவது இல்லை. மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் எடுக்கப்படாத பல தீர்மானங்களை, மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் என்ற…

Read More

இலங்கை போக்குவரத்து சபையின் திருகோணமலை சாலையின் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஒன்றிணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை சாலையின் முகாமையாளரை இடமாற்றக்கோரியே குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. 30 பேருந்துகளுக்கு மேல் சேவையிலிருந்த குறித்த சாலையில் தற்போது 18 பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுவதாகவும் இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் உடனடியாக முகாமையாளரை மாற்றித்தர வேண்டும் என வலியுறுத்தி குறித்த சாலையின் பிரதான நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முகாமையாளரது பொறுப்பின்மையின் காரணமாக குறித்த சாலைக்கு கிடைக்கப்பெற வேண்டிய பல சலுகைகள் துரதிஷ்டவசமாக கிடைக்கப்பெறவில்லை என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக திருகோணமலை சாலைக்கு உரித்தான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடவில்லை என்பதோடு அதனைத்தவிந்த அனைத்து பேருந்து சேவைகளும் வழமை போல இடம்பெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சின் வளாகம், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணி வரையில் பேரணியாக குறித்த பகுதிகளுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த காலப்பகுதியில் பாதசாரிகள் அல்லது வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவும் நீதிமன்ற தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Read More

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை பெறுவதற்கு இலங்கைக்கு காணப்பட்ட மிகப் பெரிய தடை நீங்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளார். அதற்கமைய, உரம் வழங்குவதன் மூலம் சிறு மற்றும் பெரும் போகங்களில் வெற்றிகரமான அறுவடையை நாடு பெற்றுள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி இயல்பு நிலைக்கு வந்துள்ளதாகவும் பொருளாதார பிரச்சினைகள் ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், தடையில்லா மின்சார விநியோகம், விவசாயிகளுக்கு உரம், சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக நிதி வழங்குதல் என்பவற்றுக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் திடீர் வரிநீக்கம், அரசாங்கத்தின் வருமானம் குறைய காரணமானதாகவும் வருமானத்தை அதிகரிப்பதற்காக 2019 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட வரிக் கொள்கைகளை மீள அமுல்படுத்தியதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 2022 ஆம் ஆண்டில், நாட்டில் ஏற்பட்ட சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக சுற்றுலாத்துறை பின்னடைந்தது. எவ்வாறாயினும், இந்த ஆண்டு நிலைமை சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read More

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் அநாதரவாக விடப்பட்டிருந்த நிலையில் நேற்று (06) மீட்கப்பட்டுள்ளது. யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தைப் பார்வையிட வந்த நபர்கள் அதனை ஓடிப் பார்க்கவேண்டுமென கூறியுள்ளனர். வாகனத்துக்கான சாவியை வாங்கி, இயக்கிய அவர்கள், வாகனத்தை ஓட்டி பார்த்துள்ளனர். எனினும், நீண்டநேரம் ஆகியும் அவர்கள் திரும்பவே இல்லை. இந்த சம்பவம் சனிக்கிழமை (04)இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பில் வாகனத்தின் உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த ஹயஸ் வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் இலக்கத் தகடுகள் அகற்றப்பட்டு, அநாதரவாக விடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்த சாவகச்சேரி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்

Read More

பேருவளை மீன்பிடி துறைமுகத்தின் ஊடாக கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஐஸ், ஹெரோய்ன், கேர​ள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை நீண்ட காலமாக விற்பனைச் செய்துவந்த கோடீஸ்வரர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். “டொக்கன் சுரேஸ்” என்றழைக்கப்படும் அந்த நபர், ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் பேருவளை விசேட பொலிஸ் பிரிவின் அதிகாரிகளால், கைது செய்யப்பட்டார். மாகல்கந்த பிரதேசத்தில் உள்ள அவருடைய வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, அங்கிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்தப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கடல் பிராந்தியங்களில் **************************** ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில், மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km…

Read More

பாடசாலை மாணவர்களுக்கு 30 சதவீத சலுகையின் அடிப்படையில் பயிற்சி புத்தகங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது அரசாங்க அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக அடுத்த வாரம் முதல் பாடசாலை மாணவர்கள் கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்

Read More