மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தினால் மன்னார் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை காலை தொழிற் சந்தை நடாத்தப்பட்டது. மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமான இந்த நிகழ்வில், பல தொழில் வழங்கும் நிறுவனங்களும் பங்குபற்றியிருந்தன. இந்தநிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டார். மேலும், பிரதேசச் செயலாளர், திணைக்கள தலைவர்கள், தொழில் வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது வருகை தந்த தொழில் வழங்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகள் தமது நிறுவனங்கள் ஊடாக எவ்வாறு தொழிலை பெற்றுக்கொள்ள முடியும் மற்றும் அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.
Author: admin
பசியுடன் ஒருவரும் வாடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், டுபாய் முழுதும் ஆங்காங்கே சூடான ரொட்டியை இலவசமாக அளிக்கும், ‘வெண்டிங்’ இயந்திரங்களை அந்நாட்டு அரசு நிறுவியுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில், வெளிநாடுகளில் இருந்து வந்து பணிபுரிவோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கட்டட வேலை, கார் மற்றும் கனரக வாகன ஓட்டுனர்கள், ‘டெலிவரி’ ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். குடும்பத்தினருக்கு பணத்தை சேமிப்பதற்காக இவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று வேளை சாப்பிடாமல் பட்டினியுடன் நாட்களை கழிக்கின்றனர். இந்நிலையை மாற்ற வேண்டும் என ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம் கடந்த ஆண்டு தெரிவித்தார். இதன் ஒருபகுதியாக, துபாயில் இலவச உணவு அளிக்கும், ‘வெண்டிங் மிஷின்’ எனப்படும், தானியங்கி இயந்திரங்களை நகரின் பல்வேறு பகுதிகளிலும் அவர் நிறுவியுள்ளார். இந்த உணவு இயந்திரங்கள் கடந்த 17ஆம் திகதி முதல் செயல்பாட்டுக்கு வந்தன. துபாயின், ‘அஸ்வாக்’ மளிகை…
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்துள்ளனர். மூன்று தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் நேற்று திடீரென குண்டுவெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டது. இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்த நிலையில், ஏராளமான செங்கற்கள் மற்றும் பிற சிமெண்ட் துண்டுகள் தெருவில் சிதறி விழுந்தன. இதுகுறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நுகேகொட பிரதேசத்தில் பெண் ஒருவர் பயணித்த கார் ரயிலில் மோதியதில் பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். நுகேகொட பங்கிரிவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணும் அவரது கணவரும் இன்று அதிகாலை சமய அனுஷ்டானத்தில் கலந்துகொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி, வீட்டை விட்டு வெளியேறிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகியுள்ளனர். அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் நுகேகொட பங்கிரிவத்தை புகையிரத கடவையில் தம்பதியினர் பயணித்த கார் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.
இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்ரேலிய அணி 4 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 208 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக ஹர்திக் பாண்டியா 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதனை அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இப்போட்டியில் வெற்றிபெற்றுக்கொண்ட அவுஸ்ரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மாதாந்த செலவுகளை செலுத்துவதற்கே போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொல்கஹவெல குருநாகல் புகையிரத பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாநில வருவாய் தேக்கமடைந்துள்ளதால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய தொகையை அதிக அளவில் செலுத்த முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் “சாதா” எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் கடையில் சோதனையிட்ட போது ஒரு தொகை சாதா எனும் போதை பொருளை கைப்பற்றினர். அதனை அடுத்து கடை உரிமையாளரை கைது செய்த பொலிஸார் , மீட்கப்பட்ட போதைப்பொருளையும் கைது செய்யப்பட்ட நபரையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, சுமார் 300 அரச ஊழியர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சில அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு உட்பட்டவர்களே வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ சத்துணவில் அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். இந்த கருத்து தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணை நடத்த வேண்டும் என அரச குடும்ப நல சுகாதார சேவையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். திரிபோஷ உற்பத்தி நடவடிக்கையின்போது, அஃப்ளொடோக்சின் அடங்கிய சோளம் அகற்றப்படும் என்றும், அதற்கமைய குறித்த குற்றச்சாட்டை தாம் நிராகரிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலத்தில் நேற்று (20) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றத்தில் இன்று (21) அறிவித்தார். இந்தச் சட்டமூலம் கடந்த 08ஆம் திகதி மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் கொவிட் 19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையாக 2022 வரவுசெலவுத்திட்டத்தில் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. வருடமொன்றில் கூட்டுமொத்தம் நூற்றியிருபது மில்லியன் ரூபாவை விஞ்சிய இறக்குமதியாளர், உற்பத்தியாளர், சேவை விநியோகஸ்தர் மற்றும் மொத்த விற்பனையார் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் மொத்த விற்பனை வரவின்மீது 2.5 வீதம் வரியாக விதிக்கப்படும். இந்த வரியினால் எதிர்பார்க்கப்பட்டுள்ள வருடாந்த வருமானம் 140 பில்லியனாகும். இதற்கமைய 2022ஆம் ஆண்டு 25ஆம் இலக்க சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டம் நேற்று (21) முதல் நடைமுறைக்கு வருகிறது.