மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒகஸ்ட் 25ஆம் திகதி வழங்கப்பட்ட நிலக்கரி டெண்டரை இடைநிறுத்துவதற்கு நேற்று அமைச்சரவை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, தெரிவு செய்யப்பட்ட வழங்குனர்கள் உரிய டெண்டரை நிறைவேற்ற முடியாது என அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். சட்ட தலையீடு மற்றும் பணம் செலுத்துவதில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நீண்ட காலத்திற்கு நிலக்கரி பெறுவதற்கான புதிய டெண்டருக்கான அறிவிப்பை அமைச்சகம் வெளியிடும் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
Author: admin
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கத்தானைப் பகுதியில் நேற்று (22) வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். A9 வீதியால் துவிச்சக்கரவண்டியில் தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவி மீது குறித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் மாணவி தலையில் படுகாயமடைந்துள்ளார். இதில் சங்கத்தானை சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 13 வயதான பாடசாலை மாணவி ஒருவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்கொண்ட மதிய உணவு விசமானமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய உணவு மாதிரிகள் ஏற்கனவே அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் நேற்று நாடாளுமன்ற உணவு விடுதியில் இருந்து மதிய உணவு உண்டனர். இதன்போது ஏற்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக நாடாளுமன்ற வைத்திய நிலையத்தில் ஆரம்ப சிகிச்சை பெற்று வந்தவர்கள், நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பொலிஸ் அதிகாரிகள் பெற்ற மதிய உணவில் கெட்டுப்போன மீன்கள் இருந்ததை அறிந்த சிற்றுண்டிச்சாலை பிரிவினர் அந்த மீன்களை அகற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. கெட்டுப்போன மீன்கள் எவ்வாறு உணவகத்திற்கு வழங்கப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு அரச செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் ஜனாதிபதியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்
முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை அருகில் உள்ள தபால் நிலையங்களில் பெற்று வரப்பட்டது. தற்பொழுது சமுர்த்தி வங்கியின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டுமென தபால் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் தமது முதியோர் கொடுப்பணவினை பெற பல கிலோமீட்டர் தூரங்களில் இருந்தும் சமுர்த்தி வங்கிக்குச் சென்று தமது பணத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்பொழுது பணத்தை பெற வேண்டுமாயின் அதற்கான வங்கிக் கணக்கினை புதிதாக திறக்க வேண்டும் என சமுர்த்தி வங்கியினர் தெரிவித்துள்ளனர். அப்படி திறந்தபின்பும், தமக்கு இன்னும் பணம் கிடைக்கப்பெறவில்லை எனவும், கிடைத்தவுடன் கிராம சேவையாளர் ஊடாக தெரியப் படுத்திய பின் வந்து கொடுப்பனவினை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தமக்கு வழங்கப்படுகின்ற ஆயிரத்து 900 ரூபாய் பணத்தைப் பெறுவதற்காக 2,000 ரூபாய்க்கு அதிகமான பணத்தை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பலர் கவலை தெரிவித்துள்ளனர். தற்பொழுது வழங்கப்படுகின்ற…
ஆரம்ப பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க சீறீநாத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நகரங்களை விட கிராமங்களில் இந்த நிலை அதிகம் காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல பெற்றோர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான வழிவகைகளை இழந்துள்ளதுடன், அவர்களின் வருமானம் குறைவடைந்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக ஆரம்ப பாடசாலைகளில் இணைந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றது. குறிப்பாக 20 மாணவர்கள் கல்விகற்ற வகுப்புகளில் தற்போது 15 மாணவர்களே கல்வி பயில்கின்றனர். இதற்கு மேலதிகமாக கட்டணம் செலுத்த முடியாததால் சில மாணவர்கள் தங்கள் கற்றல் நடவடிக்கைகளை இடைநிறுத்திவிட்டனர் எனவும் இலங்கை ஆரம்ப பாடசாலை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க சீறீநாத் தெரிவித்துள்ளார். ஆரம்ப…
மல்யுத்த வீரர் ஒருவர் தனது எதிரியை மோதிரத்தில் அறைந்தது போன்று தனது மனைவியை (22) அடித்த 34 வயதுடைய நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பாக மாதாந்தம் 22ஆம் திகதியன்று ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஊசி மூலம் போதைப் பொருளை பயன்படுத்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நபர்களை காப்பாற்றுவதற்கு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஊசி மூலம் போதைப் பொருளை ஏற்றிய மூவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் ஒருவரை வைத்தியர்கள் நீண்ட நாள் போராட்டத்தின் பின் காப்பாற்றியுள்ளனர். ஒருவர் ஊசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை பாவித்த பின்னர், அதே ஊசியை இன்னொருவர் இரத்த நாளத்தினூடாக ஏற்றுவதால் அதிகளவு கிருமி தொற்று ஏற்படுகின்றது. இவ்வாறு பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஏனெனில் இரத்த நாளத்தின் ஊடாக போதைப்பொருள் உடலினுள் செல்லும்போது இருதயம் மற்றும் நுரையீரல் பகுதிகளின் கிருமித் தொற்று ஏற்படுகின்றது. இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் உயிர் பிழைப்பது அரிதாக காணப்படுகின்ற நிலையில் காப்பாற்றப்படுபவர்கள் மீண்டும் அதே பழக்கத்தில் ஈடுபடுவது மன வருத்தத்தை…
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 39 சதங்கள்; சரிந்து 81 ரூபாய் 18 சதங்களாக இருந்தது. அமெரிக்க டொலர் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியதால், இந்திய ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன்தினம் அன்னிய செலாவணி சந்தையில் 79.96 ரூபாயாக முடிவடைந்தது. நேற்று சந்தையில் ரூபாய் மதிப்பு 80.27 ரூபாய் என்ற அளவில் தொடங்கியது. அது மேலும் வீழ்ச்சி அடைந்து 80.95 ரூபாய் அளவுக்கு சென்றது. இறுதியாக, 80.86 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்தது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், இது 90 சதங்கள் அதிகம். ஒரே நாளில், டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90 சதங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது…