Author: admin

ஐரோப்பிய நாடுகளில் தொழில் வழங்குவதாகக் கூறி, பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மிரிஹான தலைமையக பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த மோசடியில் கிட்டத்தட்ட 50 பேர் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முப்பதுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் மிரிஹான பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து, முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் பதினைந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலரை ஏமாற்றிய பண மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக குறித்த சந்தேக நபர் மீது முப்பதுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

Read More

மனித செயற்பாடுகளினால் மாசடைந்த நாடு முழுவதிலும் உள்ள 10 நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் பிடிப்பு சுற்றாடல் பாதுகாப்பு பகுதிகளை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read More

உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில் அறுப்பதற்கு காத்தான்குடி நகர சபை அனுமதி வழங்காது என காத்தான்குடி நகர சபை பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. இம்முறை உழ்ஹிய்யா மாடுகளை வீடுகளில் அறுப்பதனை கட்டாயம் தவிர்ந்து கொள்ளுமாறும் அதற்காக சபையினால் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவ்வறித்தலில் குறிப்பிட்டுள்ளது.

Read More

தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவையை குறுகிய காலத்திற்குள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தென்கொரியாவில் வேலை வாய்ப்புகளுக்காக செல்பவா்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் விமானங்கள் தொடர்ந்து தாமதமாகி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கும் வரை அந்த பணியாளர்களை சிங்கப்பூர் வழியாக தென் கொரியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளாா்.

Read More

ஊழலுக்கு எதிரான சட்டமூலம் மீதான விவாதம் இன்று (21) பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பு அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இந்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை அடுத்த சபை அமர்வில் மேலும் இரண்டு நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Read More

சீசெல்சுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவை நீண்டகால முயற்சிகளின் பின்னர் இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் வகையில் இன்று காலை சீசெல்ஸ் நாட்டின் விக்டோரியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானமொன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்திற்கு ஏர்பஸ் ஏ.320 விமானம் பயன்படுத்தப்பட்டது. எயார் சீசெல்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இந்த SEY-262 விமானம் சீசெல்ஸ் நாட்டில் இருந்து இன்று அதிகாலை 04.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இந்த விமானத்தில் 110 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர்.

Read More

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடாஷா எதிரிசூரியவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் உள்ள புருனோ திவாகரவை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சிகளுக்கும் இடையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் அண்மைய வாரங்களாக இடம்பெற்று வந்தன. இந்நிலையில் அமைச்சுப் பதவிகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியமையே அமைச்சவை மாற்றம் தாமதமாவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்புகளில், சில குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்குமாறு ராஜபக்ச மற்றும் அவரது தரப்பினரால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எவ்வாறாயினும் தற்போதுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் செயற்படக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அமைச்சுக்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சில முக்கிய அமைச்சுக்களின் ஏற்பட்டுள்ள ஏமாற்றம் மற்றும் சில அமைச்சர்கள் செயற்படத் தவறியதைத் தொடர்ந்து அமைச்சரவை விரைவில் மாற்றியமைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமீபத்திய மாதங்களில், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் நெருக்கடி அதிகரித்துள்ளது, குறிப்பாக இது அரச வைத்தியசாலைகளில்…

Read More

திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் காணப்படுவதாகவும் இது நாட்டுக்கு பாரிய பிரச்சினை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகம் சட்டமூலம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த வீண் விரயங்களை கட்டுப்படுத்த முன்னுரிமையளித்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வீண் விரயங்களை குறைத்துக் கொள்வதே எமது இலக்காகும். அதனை முக்கியமான இலக்காகக் கொண்டு அதற்கு முன்னுரிமையளித்து நாம் செயற்படவேண்டியது அவசியமாகும். யார் என்ன சொன்னாலும் திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் கிடையாது என எவராலும் கூற முடியாது. இது நாம் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினையாகும். சில புள்ளி விபரங்களில் காணப்படும் பிழைகள் மற்றும் அதிலிருந்து திசை திருப்பும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடிகள் குறிப்பிடத்தக்கவை. இவ்வாறான மோசடிக்காரர்களின் சுமையையும் இறுதியில் திறைசேரி அல்லது நாடாளுமன்றத்திற்கே பொறுப்பேற்க வேண்டியுள்ளது.…

Read More

சர்வதேச சந்தையில் இன்று புதன்கிழமை (21) மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சிடைந்துள்ளது. அதன்படி, யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் 14 சென்ட்கள் அல்லது 0.2% சரிந்து 71.06 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இதையடுத்து ப்ரெண்ட் மசகு எண்ணெய் 00.43 மணியளவில் 21 சென்ட்கள் அல்லது 0.3% சரிந்து ஒரு பீப்பாய்க்கு 75.69 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

Read More