641101117-2329-17-T

அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான திருத்தப்பட்ட கட்டணங்கள் போக்குவரத்து அமைச்சினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான கட்டணத்தை 25 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பினை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.

புதிய கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வரும் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் அனைத்து வாகன சாரதிகளுக்கும் இது பொருந்தும்.

இந்த கட்டண உயர்வு, அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டவும், அதிவேக நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.

# புதிய கட்டணங்கள் சில

• கொட்டவை – கட்டுநாயக்க : 400 ரூபா

• கட்டுநாயக்க – ஹம்பாந்தோட்டை : 1300 ரூபா

• கொட்டாவ – காலி : 500 ரூபா

Share.
Exit mobile version