கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு சீனா தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கையின் நிதி உதவி கோரிய போதே சாவோ லிஜியன் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்காக சீனா தன்னால் இயன்றதைச் செய்து வருவதாகவும், தொடர்ந்தும் அதனைச் செய்யும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

“இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு சீனா தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது, நாங்கள் தொடர்ந்து அதைச் செய்வோம்,” என்று அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால இராஜதந்திர உறவுகளை நிறுவியதில் இருந்து இரு நாடுகளும் பரஸ்பர ஆதரவை வழங்கியுள்ளன என்றும் ஜாவோ லிஜியன் கூறினார்.

“சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இரு நாடுகளும் பரஸ்பர ஆதரவையும் புரிந்துணர்வையும் வழங்கியுள்ளன” என்று பெய்ஜிங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜாவோ கூறினார்.

Share.
Exit mobile version